Arivuchelvan viswanathan

Horror

4  

Arivuchelvan viswanathan

Horror

துளசி பள்ளம் அத்தியாயம் 2

துளசி பள்ளம் அத்தியாயம் 2

2 mins
453


பின்னால் பையனை காணும் என்றதும் ராஜேஷ்க்கு உச்சந்தலை சுரீரென்று இருந்து . அந்த மழைச்சாரல் குளிர் காற்று வீசிய அந்த இருட்டு நேரத்திலும் அவனுக்கு வியர்த்துக் கொட்டத் தொடங்கியது .


இது என்ன உண்மையிலேயே நான் பைக்கில் பையனை ஏற்றி வந்தேனா இல்லை படம் பார்த்துவிட்டு வந்த பிரம்மையா என்றெல்லாம் யோசிக்க தொடங்கினான்

அவனை அறியாமல் கால் பிரேக்கிற்கு போய் பைக்கை நிறுத்தியது.இன்னும் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் துளசி பாள்ளம் வந்துவிடும். அதை நினைத்ததும் அவனுக்கு வயிற்றைக் கலக்கத் தொடங்கியது.


ராஜேஷ் உடல் நடுங்கத் தொடங்கியது யோசித்தான் "ஐயோ எப்படி அந்த துளசி பள்ளத்தை தாண்டப் போகிறேன் என்று தெரியவில்லையே...

 இல்லை பேசாமல் திரும்பிப் போய் விடுவோமா? திரும்பி போவது என்றால் எங்கே போவது? வேறு வழியில்லை துளசி பள்ளத்தை தாண்டி போய்த்தான் ஆகவேண்டும். வண்டியை ஒரு முறுக்கு முறுக்கி விட வேண்டியதுதான் என்று முடிவு செய்து விட்டு வண்டியை கிளப்பினான்


ஏனோ சினிமாவில் பார்த்த அந்த நெஞ்சு கிழிந்து இதயம் துருத்தி கொண்டிருந்த அந்த உருவம் நினைவுக்கு வந்து அவனை மிரட்டியது. வண்டியை ஸ்டார்ட் செய்தவன் முப்பது, நாற்பது ,ஐம்பது, அறுபது என்று வேகத்தை கூட்டிக்கொண்டே சென்றான் கண்களை மூடிக்கொண்டு 80 கிலோ மீட்டர் வேகத்தில் பைக்கை விரட்டிக் கொண்டு ஈயி....... என்று பல்லை கடித்தபடி துளசி பள்ளத்தை தாண்டினான்.

மெல்ல கண்களை திறந்தான்.பைக்கின் வேகத்தை மெல்ல குறைத்து ஓடவிட்டான் . மழை தூறல் சற்று அதிகமாக தொடங்கியது

அந்த இடத்தில் லேசான துளசியின் வாசம் வீசியது அப்போது பின்னால் தூரத்தில் மெலிதான ஒரு பெண்குரல் சார்....... சார்....... என்று அழைப்பது அவன் காதுகளில் விழுந்தது.

யாரோ அழைப்பது போல் இருக்கிறதே இந்த நேரத்தில் என்று மிகுந்த பயத்தோடு பைக்கின் முன்னே பொருத்தி இருந்த கண்ணாடியின் வழியே பின்னால் பார்த்தான் தூரத்தில் ஏதோ புகைமூட்டம் போல பெண் நிற்பது தெரிந்தது. அது ஒரு பெண்ணின் ஆவி போல இருக்கிறதே..... திடீர் என காற்றின் வேகம் அதிகமாகி ஓ... ஓ. . என்ற சத்த்தோடு வீசியது . பதட்டம் அதிகமானது மீண்டும் பைக்கை வேகமாக ஓட்ட முயன்றான் ஆனால் திடீர் என்று பைக் நின்று போனது. "போச்சு இன்னைக்கு நான் செத்தேன்" இதயம் படக் படக் என்று அடித்துக்கொள்ள தொடங்கியது, வண்டியை நியூட்ரல் செய்து கிக்கரை வதக்... வதக்... என்று பதறியபடி உதைக்க பைக் ஸ்டர்ட் ஆக மறுத்தது எதை செய்யக்கூடாது என்று நினைத்தானோ அதை செய்து விட்டான். பின்னால் திரும்பி பார்த்து இருக்கக்கூடாது பார்த்துவிட்டான்... அந்தப் பெண்ணின் உருவம் அவனை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது. அவனது இதயம் பிதுங்கி கொண்டு வாய் வழியே வந்துவிடும் போல நெஞ்சு அழுந்தியது. " கடவுளே...என்னை காப்பாத்து.... என்றபடி பைக் கிக்கரை உதைக்க அவண் நல்ல நேரம் பைக் ஸ்டார்ட் ஆகிவிட்டது 

தப்பித்தோம் பிழைத்தோம் என்று நினைத்துக் கொண்டான் கியரை மாற்றி

வண்டியை விரட்டத் தொடங்கினான்.

படபடக்க வண்டியைத் தொடர்ந்து விரட்ட சிறிது தூரத்தில் சாலையின் ஓரத்தில் " பாரதிபுரம் உங்களை அன்புடன் வரவேற்கிறது" என்ற சிமின்ட் வரவேற்பு பலகை பைக் வெளிச்சத்தில் தெரிய தொடங்கியது.


அதைப் பார்த்ததும் தான் ராஜேஷுக்கு சற்று நிம்மதி வந்தது அப்பாடா... ஒரு வழியாய் வீட்டை நெருங்கி விட்டோம் என்ற சந்தோஷம் அவனுக்குள் பிறந்தது.இன்னும் அது பின்னால் துரத்திக்கொண்டு வருகிறதா? சிறிது தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கொண்டு கண்ணாடி வழியே பின்னால் பார்த்தான் சாலை வெறுமையாய் இருந்தது கொஞ்சம் நிம்மதி அடைந்தான் மழை அதிகமாக அடிக்க முழுவதுமாக நனைந்து போனான்.

 சில வினாடிகள் பயணத்துக்குப் பிறகு தூரத்தில் சாலை ஓரத்தில் அமைந்திருந்த அவன் வீடு கண்ணில் தென்பட்டது. அவன் வீட்டிற்கு முன் வந்து பைக்கை நிறுத்தினான், வண்டியை ஆப் செய்துவிட்டு சாத்தியிருந்த இருந்த காம்பவுண்ட் கேட்டை திறந்து பைக்கை உள்ளே தள்ளிக் கொண்டு போய் நிறுத்தினான் ..


வாசலில் இருந்த காலிங் பெல்லை அழுத்தி அவன் அம்மா வரவுக்காக காத்திருந்தான் .உள்ளிருந்து அவன் அம்மா தூக்க கலக்கத்தோடு வந்து கதவை திறந்தாள் மகனைப் பார்த்ததும் என்னடா இது இப்படி தொப்பையா நனைஞ்சி போய் வந்திருக்கிற மூஞ்சி பேய் அறைஞ்ச மாதிரி வெளிறிப் போய் கிடக்கு ? என்னப்பா ஆச்சு ஏதும் பிரச்சனையா,"என்று கேட்க அவன் மனதுக்குள் நடந்ததை எல்லாம் அம்மாவிடம் சொன்னால் அவள் தாங்க மாட்டாள் மிகவும் பயந்து விடுவாள் என்பதால் எதையும் சொல்லக்கூடாது என்று நினைத்துக்கொண்டு அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா மழையில் நல்லா நெனச்சிட்டேன் வேற ஒண்ணுமில்லை என்றவாறு செருப்பை கழட்டி விட்டு வீட்டுக்குள் நுழைந்தான்.


(தொடரும்)





Rate this content
Log in

Similar tamil story from Horror