STORYMIRROR

valangai arivu

Others

4  

valangai arivu

Others

அவரும் நானும்

அவரும் நானும்

1 min
481

அவருடனான என் நெருக்கம் வேறு யாருக்கும் இருந்ததா என்று எனக்கு தெியவில்லை. ஆனால் அவர் என்னை விட்டு பிரிந்தது கிடையாது. அவர் மார்போடு நான் சாயந்திருந்த பொழுதெல்லாம் அந்த இதயத்தின் ஒலியை இதமாய் கேட்டு இருக்கிறேன.

அவர் சென்ற இடத்துக்கெல்லாம் என்னை விட்டு சென்றதே கிடையாது என்பேன். அவர் என்னை கைகளால் வாரி பிடித்து கையாளும் அழகும் மென்மையும் எனக்கு மிகவும் பிடிக்கும் ஏன் நான் அதில் மயங்கிப் போய் அவர் ஆட்டுவித்தபடி எல்லாம் ஆடுவேன் அது மணிகணக்காய் தொடரும்.


பழைய நினைவுகள் ...இப்பொழுது சில நாட்களாக அவரை காணவில்லை ஏனோ என்னை தனியே விட்டு விட்டார். அவரின் நினைவோடு அவரின் கை என்னை பற்றிடும் கனவோடு காத்திருந்த வேளை திடீர் என அவன் வந்தான். அது அவரின் மகன்.... என்னிடம் நெருங்கி வந்து என்னை தலை முதல் மெல்ல தடவிப்பார்தான், எனக்கு இன்னொருவன் கை ஸ்பரிசம் ஏனோ பிடிக்கவில்லை அவரின் மென்மையும் மேன்மையும் இவனிடம் இல்லை என்னை தொடாதே... கத்த வேண்டும் போல் இருந்தது.


என்னசெய்ய என்னால்தான் பேச முடி யாதே! திடீர் என்று அது நிகழ்ந்தது. அவன் திடீரென உடைந்து போய் கதறி அழுதான் தாரை தாரயாக கண்ணீர் வழிந்தோடியது. அவனது நண்பன் அவனை சமாதானம் செய்ய முயற்சிதான். இருந்தும் அவன் என்னை கை காட்டி " இறந்து போன என் அப்பா பயன்படுத்திய "பேனா" டா அது.... அதை பார்க்கும்போதெல்லாம் என் அப்பா ஞாபகம் தாங்க முடியலைடா..."கதறி அழுதான் அந்த எழுத்தாளரின் மகன்

வாலறிவன்



Rate this content
Log in