தாத்தா லவ்வும், பிரச்னையும்
தாத்தா லவ்வும், பிரச்னையும்


ஒரு ஊர்ல ஒரு தாத்தாவும் பேரனும்
தாத்தா பெயர் ராம்
பேரன் பெயர் கிருஷ்ணா
தாத்தா : டேய் கிருஷ்ணா உன்கிட்ட பேசணும்
கிருஷ்ணா : பேசும்
தாத்தா : நான் லவ் பண்ணலாம்னு இருக்கேன்.
கிருஷ்ணா : ஹா ஹா ஹா.
தாத்தா : நான் சீரியஸா பேசுறேன்.
கிருஷ்ணா : அதுனால தான் நான் சிரிக்கிறேன். நீ சின்ன வயசுல பண்ண கூத்தெல்லாம் ஊர்ல சொன்னாங்க.
தாத்தா : என்ன சொன்னாங்க.
கிருஷ்ணா : கல்யாணம் ஆகி 3 வருஷத்துல, பொண்டாட்டி அதாவது என் பாட்டி அழகா இல்லனு அவங்கள அனுப்பிட்டியாமே. அது மட்டும் இல்லாம நல்லா ஊர் மேஞ்சியாமே, நான் சொல்லல ஊர் சொல்லுது.
தாத்தா : எல்லாம் உண்மை தான், அந்த காலத்துல நான் எம்புட்டு அழகா இருப்பன் தெரியுமா.
கிருஷ்ணா : இது வேறயா, சரி இப்ப என்ன நீ லவ் பண்ண போற, அப்படி தான.
தாத்தா : ஆமா
கிருஷ்ணா : சரி பண்ணு, வெளிநாட்டுல இதெல்லாம் ரொம்ப சகஜம். சரி எப்போ எனக்கு அவங்கள காட்டப்போற.
தாத்தா : போட்டோவே இருக்கு பாரு.
கிருஷ்ணா : இவங்கள எங்கையோ பாத்த மாதிரி இருக்கு.
தாத்தா : எனக்கும் அப்படி தான் இருக்கு.
கிருஷ்ணா : சரி ஆல் தி பெஸ்ட்.
தாத்தா : நம்ம சொந்தகாரங்க கல்யாணத்துக்கு அவங்க வராங்க, நீயும் வா நம்ம அங்க போய் பாத்து பேசிட்டு வரலாம்.
கிருஷ்ணா : நீ பண்ற லவ்வே எனக்கு பயமா இருக்கு, நான் கூட வேற வரணுமா.
--------*******--------
அவங்க சொந்தகாரங்க கல்யாணத்துக்கு
ரெடி ஆகுறாங்க
தாத்தா : டேய் நான் யூத்தா தெரியறதுக்கு ரெண்டு டிரஸ் வாங்கி இருக்கேன்.
கிருஷ்ணா : இன்னும் என்ன என்ன கொடுமையெல்லாம் நான் பாக்க வேண்டி இருக்கோ. சரி அத போட்டுட்டு வாங்க.
தாத்தா : சின்ன பசங்களுக்குள்ள டாடோ டூடோ சொல்லி கூப்பிட்டுப்பாங்களே, அது மாதிரி ஏன் நீ என்ன கூப்பிட கூடாது.
கிருஷ்ணா : ஓ dude ah, அப்படி கூப்டா மட்டும் நீ சின்ன பையன் ஆகிடிவியா. சரி நீ லவ் பண்றியே அவங்களுக்கு கல்யாணம் ஆகி இருக்காதா?
தாத்தா : விசாரிச்சேன், கல்யாணம் ஆகி பிரிஞ்சிட்டாங்களாம்.
கிருஷ்ணா : அந்த கல்யாணத்துக்கு போலாம்.
-----------கல்யாணத்துக்கு போயாச்சு --------
தன்ன யூத்னு நினைச்சிட்டு இருந்த தாத்தாக்கு ஒரு அசிங்கம் நடந்துபோச்சு.
கல்யாணதில்லையே ரொம்ப பெரியவர்னு சொல்லி அவர தாலி எடுத்து தர சொல்லி கட்டாயப்படுத்தி தாலி எடுத்து தர வச்சிட்டாங்க. அவரு தன்ன ஒரு யூத்னு சொல்லி எவ்ளோ கதறியும் விடல. அவரோட ஆள் முன்னாடி இந்த அசிங்கத்தை பட்டாரு.
தாத்தா தைரியத்தை வளர்த்துக்கிட்டு அவரோட ஆள் கிட்ட தன்ன இந்த ஊர்ல பெரிய ஆளுன்னு அறிமுக படுத்திக்கிறார். இவர பாத்த உடனே ஒரு 7 பேர் ஒண்ணா வந்து அடி அடின்னு அடிக்கிறாங்க, அத தடுக்க வந்த க்ரிஷ்ணாவையும் அடி வெளுக்கறாங்க.
அடி வாங்கிட்டு கல்யாண வீட்டு வெளிய வந்து நிக்குறாங்க
கிருஷ்ணா :இந்த வயசுல நீ பண்ண சேட்டைல எனக்கும் அடி விழுந்திடிச்சி. சந்தோசமா
தாத்தா : டேய் நான் ஏதும் பண்ணல, நான் போய் என்ன அறிமுகம் பண்ணிக்கலாம்னு போன, அதுக்குள்ள அடிச்சிட்டாங்க.
கிருஷ்ணா : அப்படியா, நீ ஏதும் பண்ணாமலா அடிச்சாங்க, அப்ப இரு நான் ஏன் அடிச்சாங்கனு கேட்டுட்டு வரேன்.
தாத்தா : அடிச்சவங்க எல்லாம் இப்ப தான் வெளிய போய்ட்டாங்க.
கிருஷ்ணா : நீ லவ் பண்ணியே, அவங்க கிட்ட கேட்குறேன்.
தாத்தா : சரி போ.
கிருஷ்ணா to தாத்தா lover: எதுக்கு உங்க சொந்தக்காரங்க எங்கள அடிச்சாங்க.
தாத்தா lover : உன் kooda வந்த பெரியவர், உனக்கு என்ன வேணும்.
கிருஷ்ணா : என் தாத்தா.
தாத்தா lover: சுரேஷ் மகனா நீ( சொல்லி, அழ ஆரமிச்சுட்டாங்க).
கிருஷ்ணா : ஆமா, ஏன் அழறீங்க.
தாத்தா lover: நான் தான் உன் அப்பாவ பெத்தவ, உன் பாட்டி.
கிருஷ்ணா : தாத்தா சின்ன வயசுல, உங்கள வேணாம்னு அனுப்பிட்டாரே, அந்த பாட்டியா
பாட்டி : ஆமா பா.
பாட்டினு சொல்லி கட்டி அணைச்சிக்காரன்.தூரத்தில் இருந்து தாத்தா பாக்குறாரு, ஆனா அவருக்கு ஒன்னும் புரியல
கிருஷ்ணா : ஆமா ஏன் எங்கள உங்க சொந்தகாரங்க அடிச்சாங்க.
பாட்டி : அதுவா, என் வாழ்க்கையே உங்க தாத்தா அழிச்சிட்டாரு, இப்ப வந்து என் கிட்ட பேசுனா, உடனே என் தம்பி கோப பட்டு எங்க சொந்தகாரங்க வச்சி அடிக்கசொல்லிட்டன்.
கிருஷ்ணா : சரி, தாத்தாக்கு ஏன் உங்கள அடையாளம் தெரியல.
பாட்டி : என்ன பாத்து ஒரு 45 வருஷம் மேல இருக்கும், அதான் அடையாளம் தெரியல. அப்பறம் உங்க அப்பா எப்படி இருக்கான்?
கிருஷ்ணா : அவரும் அம்மாவும் ஒரு ஆக்சிடெண்ட்ல போய்ட்டாங்க.
பாட்டி அழ அரமிச்சுட்டாங்க
பாட்டி : அவன் சாவுக்கு வராத பாவி ஆயிட்டேன்.
கிருஷ்ணா : அழாத விடு
பாட்டி : ஆமா என்ன உன் தாத்தா பேச வந்தாரு
கிருஷ்ணா : அதா அவரு உன்ன லவ் பன்றாரு.
பாட்டி : அடி செருப்பால, என் வாழ்க்கையே நாசம் ஆக்கிட்டு, லவ்வா.
கிருஷ்ணா : சரி விடு கோப படாத.
பாட்டி : என்ன அடிக்கடி வந்து பாரு, நீ மட்டும். உன் போன் நம்பர் குடு. நான் நடத்துற டிரஸ்ட்ல வந்து வேலைப்பாரு. முதியோர் இல்லம் நடத்துறேன், வந்து அவங்களுக்கு வேல செஞ்சா புண்ணியம்.
கிருஷ்ணா :கண்டிப்பா வரேன், இப்ப கிளம்புறேன்.
கல்யாண வீட்ல இருந்து தாத்தாவும் கிருஷ்ணாவும் கிளம்பிட்டாங்க.
தாத்தா to கிருஷ்ணா : டேய் என்ன டா பேசுன என் லவ்வர் கிட்ட.
கிருஷ்ணா : ஹா ஹா ஹா.
தாத்தா : ஏன் டா சிரிக்கிற.
கிருஷ்ணா : ஒன்னு சொல்ற மனச திடம் ஆகிக்கோ.
தாத்தா :திடமா தான் இருக்கன் சொல்லு.
கிருஷ்ணா : நீ ஒருத்தங்க வேணாம்னு சொல்லி, ஒருத்தங்களை தொரத்தி விட்டியே.
தாத்தா : ஆமா.
கிருஷ்ணா : அவங்க தான் இவங்க.
தாத்தா : என்ன டா சொல்ற.
கிருஷ்ணா : விதி வலியது, யாரை வேணாம்னு சொன்னியோ, அவங்களையே இன்னைக்கி வேணும்னு சொல்ற.
தாத்தா : ஆனா ஜாடை ஒரு மாதிரி இல்லையே.
கிருஷ்ணா : 45 வருஷத்துக்கு மேல ஆகுதுல, முகம் மாறி இருக்கும். சில பேர் வயசு ஆக ஆக அழகாயிட்டே போவாங்க. அதும் இப்பெல்லாம் ஒருத்தர அழகு ஆக்க ஆயிரத்து எட்டு கிரீம், பியூட்டி பார்லர் வந்துடுச்சி.
தாத்தா : ஓ அவன் என் பொண்டாட்டி தான, அவளுக்கு புடிக்க வைக்க ஈசி தான.
கிருஷ்ணா : உன் மேல கொலைவெறில இருக்காங்க, இவர புடிச்சிடுமா, உன்னால தான் அவங்க வாழ்க்கையே போச்சு, மறந்துடாத.
தாத்தா : இப்ப என்ன டா பண்றது.
கிருஷ்ணா : பொறுமையா ஒரு வழி தேடுவோம்.
---------இரண்டு நாட்கள் கழித்து --------
தாத்தா : டேய் உன் பாட்டிக்கு போன் பண்ணி பாரேன் டா.
கிருஷ்ணா : போன் பண்ணி என்ன பேச
தாத்தா : நான் உடம்பு முடியாம சீரியசா இருக்கேன் சொல்லு, பதறிட்டு ஓடி வருவா.
கிருஷ்ணா : அதையும் பாக்கலாம்
கிருஷ்ணா பாட்டியிடம் போன்ல பேசிட்டு இருக்கான்.
கிருஷ்ணா : பாட்டி, தாத்தாவுக்கு உடம்பு சரியில்லை, கொஞ்சம் சீரியஸ், வந்து பாரு
பாட்டி : கொஞ்சம் இல்ல ரொம்ப சீரியஸா இருந்தாலும் எனக்கு கவலை இல்ல, அவரு மண்டைய போட்டாலும் எனக்கு கவலை இல்ல.
தாத்தா : என்ன டா வந்துட்டு இருக்கலாமா.
கிருஷ்ணா : நீ மண்டைய போட்டாலும் வர மாட்டாங்களா. பின்ன பண்ண வேலைலாம் கொஞ்சம் இல்ல.
தாத்தா : சரி வேற என்ன வழி இருக்கு
கிருஷ்ணா : வேற வழி கிடைக்குதான்னு பாப்போம்.
--------இரண்டு நாட்கள் கழித்து ------------
தாத்தா : என்ன டா முகம் ஒரு மாதிரி இருக்கு.
கிருஷ்ணா : இல்ல, ரெண்டு நாளா பாட்டிக்கு போன் பண்றன், எடுக்க மாற்றங்க, எதோ பிரச்சனைன்னு நினைக்கிறன்.
தாத்தா : நேரா போய் பாத்துட்டு வர வேண்டியது தான.
கிருஷ்ணா : சரி நான் நேரா போய் பாத்துட்டு வரேன்.
பாட்டியை நேர்ல போய் பாக்குறான்
கிருஷ்ணா : என்ன பாட்டி போன் பண்ணா எடுக்க மாற்ற, அவ்ளோ பிஸியோ.
பாட்டி : ஆமா டா, கொஞ்சம் பிரச்சனை. உன்னோட உதவி கூட வேணும்
கிருஷ்ணா : ஓ என்ன பிரச்சனை
பாட்டி : கொஞ்சம் பெரிய கதை டா.
கிருஷ்ணா : கேட்பேன் சொல்லு.
பாட்டி : பக்கத்து ஊர்ல ரெண்டு கொலை, கேள்வி பட்டியா?
கிருஷ்ணா : ஆமா ஒரு ஆளும், ஒரு கிழவியும். போலீஸ் கூட கண்டு புடிக்க முடியலன்னு பேசிக்கிட்டாங்க.
பாட்டி : அந்த கொலைல, என்னையும் போலீஸ் சந்தேக படுது.
கிருஷ்ணா : உன்னையா, எப்படி
பாட்டி : சொல்றன், உனக்கு தெரியும்ல நான் ஒரு டிரஸ்ட் மூலமா ஒரு முதியோர் இல்லம் நடத்துறேன்னு.
கிருஷ்ணா : ஆமா.
பாட்டி : நம்ம முதியோர் இல்லத்துல இருக்க, ராமசாமியோட பையன் வீட்ல ஒரு கொலை, ராணியோட பையன் வீட்ல ஒரு கொலை. அது எப்படி ரெண்டு கொலையும், இந்த முதியோர் இல்லத்துல இருக்குற ஆளுங்களோட பசங்க வீட்ல நடக்கும்னு போலீஸ் சந்தேக படுது. கொலை நடந்த ரெண்டு அட்ரசும், கிடைக்கற இடம் முதியோர் இல்லம் தான். முதியோர் இல்லத்துல இருக்கறவங்களுக்கு எதாவது உடம்பு சரியில்லனா, தொடர்பு கொள்ள இவங்க பசங்களோட அட்ரெஸ்ஸ கொடுத்து இருப்பாங்க. அந்த அட்ரெஸ பயன் படுத்தி, இந்த கொலை நடந்து இருக்கலாம். ஒரு கொலைகாரணக்கு, இந்த ரெண்டு அட்ரெஸ்ஸும் கிடைக்கிற ஒரே இடம் இந்த முதியோர் இல்லம் தான். ஒன்னு இந்த முதியோர் இல்லத்துல வேல பாக்கறவங்க கொலை பண்ணி இருக்கணும், இல்ல, கொலைகாரனுக்கு அட்ரெஸ்ஸ கொடுத்து கொலை பண்ண உதவி பண்ணி இருக்கணும். அந்த அட்ரெஸ்ஸ ஆபீஸ்ல ரெண்டு பேரு தான் பாக்க முடியும். ஒன்னு நான், இன்னொருத்தர் ரேகா.எங்க ரெண்டு பேர் மேலயும் சந்தேக படுறாங்க போலீஸ்
கிருஷ்ணா : ஓ, சரி நான் என்ன உதவி பண்ணனும்.
பாட்டி : சொல்றேன், எனக்கு ஒரு தோழி இருக்காங்க அவங்க பெயர் நிர்மலா . ரொம்ப வருஷமான நட்பு. நிர்மலாவும் அவங்க கணவரும் எப்பவும் நம்ம முதியோர் இல்லத்துக்கு பணம், பொருள் உதவி பன்றாங்க.கொஞ்ச நாள் முன்னாடி நிர்மலாவோட பையன், அவங்கள விட்டுட்டு அவனோட பொண்டாட்டியோட தனியா போய்ட்டான். அதனால ரொம்ப கோபத்தோட, அவங்களோட சொத்தை யாராவது நல்ல பசங்களுக்கு எழுதிடணும்னு நிர்மலாவும் அவங்களோட கணவரும் பாத்தாங்க, அப்ப தான் ராஜு, பிரபு, ரெண்டு பேர பாத்தாங்க அவங்க ரெண்டு பேரும் நம்ம முதியோர் இல்லத்துல தான் வேல செய்யுறாங்க. ராஜுவும் பிரபுவும் பெரியவங்கள பாத்துக்குற விதம் ரொம்ப புடிச்சி போயி, அவங்கள தன்னோட வீட்ல வச்சிக்கலாம்னு நிர்மலாவும் அவங்க கணவரும் முடிவு பண்ணாங்க. அது மட்டும் இல்லாம நிர்மலாவும் அவங்க கணவரும், இவங்க செத்த பிறகு அந்த சொத்தை ராஜு பிரபு பேர்ல எழுதலாம்னு
முடிவு எடுத்து இருக்காங்க.
கிருஷ்ணா : இப்ப அவங்க ரெண்டு பேர் சொத்தை எழுதப்போராங்க. எழுதட்டுமே என்ன பிரசன்ன
பாட்டி : ராஜு, பிரபு, ரெண்டு பேரும் கேடிப்பசங்க. முதியோர் இல்லத்துக்கு வந்த பணத்த திருடனவுங்க. கையும் காலுமா மாட்டுனா, வேலைய விட்டு தூக்கணும் நான் இருக்கேன், நிர்மலாவும் அவங்க கணவரும் அவனுங்க மேல சொத்தை எழுதி தர போகிறதா சொல்ராங்க. அது மட்டும் இல்லாம அவங்க தான் இந்த ரெண்டு கொலையை பண்ணி இருப்பாங்களோனு சந்தேக படுறேன்.
கிருஷ்ணா : ஏன் அப்படி சந்தேக படுறீங்க.
பாட்டி : டேய் அவனுங்க நம்ம ஆபீஸ்ல தான் வேல செய்யுறாங்க , அவனங்குலும் கொலை செய்யப்பட்டவங்களோட அட்ரஸ் எடுக்க வாய்ப்பு இருக்கு. அது மட்டும் இல்லாம போலீஸ் கொலையாளிகளை பத்தி ஒரு அடையாளம் சொல்லி இருக்காங்க, ஒருத்தன் நீளமா முடிவச்சி இருப்பான், இன்னொருத்தன் முடி சின்னதா வச்சி இருப்பான்னு. ரெண்டுமே அவங்குளுக்கு பொருந்துது.
கிருஷ்ணா : சரி, அப்ப நிர்மலாக்கு போன் பண்ணி சொல்லிடலாமே.
பாட்டி : டேய் அந்த பசங்க கொலையாளியா இருப்பாங்களோ எனக்கு சந்தேகம் தாண்டா. கண்டிப்பா அவங்க கொலையாளியானு எனக்கு தெரியாது, அப்படி இருக்க ஒருத்தர பத்தி நம்ம எப்படி தப்பா சொல்ல முடியும்.
கிருஷ்ணா : இதுல நான் என்ன உதவி உனக்கு பண்ண முடியும்.
பாட்டி : சொல்றன், நீ நிர்மலா வீட்டுக்கு போய் தங்கி ராஜு, பிரபு மேல ஒரு கண்ணு வச்சிக்கோ. நிர்மலாக்கும் அவங்க கணவருக்கும் எதுவும் நடந்துட கூடாது. உனக்கு ராஜு, பிரபு மேல சந்தேகம் வந்துச்சுனா எனக்கும், நான் ஒரு போலீஸ் கான்ஸ்டேபில் கண்ணன் நம்பர் தரேன், அவருக்கும் சொல்லு. அப்பறம் இந்த கேச பத்தி உனக்கு இருக்க சந்தேகம் கூட நீ அவர் கிட்ட கேட்டுக்கலாம்.
கிருஷ்ணா : நான் எப்படி நிர்மலா வீட்டுக்கு போ முடியும்.
பாட்டி : நான் நிர்மலா கிட்ட பேசுறேன், நீ உன் தாத்தாவுக்கு உடம்பு சரி இல்ல, அதுனால தான் உங்க ஊர்ல இருக்க டாக்டர் பாக்க உங்க வீட்ல தங்கி இருக்கோம்னு நிர்மலா கிட்ட சொல்லு.
கிருஷ்ணா : சரி ஆனா தாத்தா வர ஒத்துப்பாரா.
பாட்டி : அது உன்னோட பிரச்னை.
கிருஷ்ணா : சரி, நான் பேசிக்கிறேன், அவர் கிட்ட.
பாட்டி : சரி பாத்து எல்லாத்தையும் பன்னி. எனக்கு போன் பண்ணி தகவல் சொல்லு உனக்கு ராஜு பிரபு மேல சந்தேகம் வந்துச்சுனா.
பாட்டி சொன்னதெல்லாம் தாத்தா கிட்ட சொல்லி, தாத்தாவ நிர்மலா வீட்டுக்கு வர சொல்றான்.
கிருஷ்ணா : தாத்தா நீ கண்டிப்பா நிர்மலா வீட்டுக்கு வரணும்.
தாத்தா : டேய் நான் வரமாட்டேன்.
கிருஷ்ணா : இப்ப நீ பாட்டிக்கு உதவி பண்ணா தான், அவங்களுக்கு உன்ன புடிக்கும்.
தாத்தா : சரி டா நான் வரேன்.
கிருஷ்ணாவும் தாத்தாவும் நிர்மலா வீட்டுக்கு போய்ட்டாங்க. வீட்ல இருக்க எல்லார் கிட்டையும் ஒரு நல்ல பேச்சு வார்த்தை வச்சிக்கிறாங்க.
சரி, அந்த போலீஸ் கான்ஸ்டபில் கண்ணனுக்கு போன் போட்டு, இந்த கேஸ் பத்தி பாட்டி கேட்டு தெரிஞ்சிக்க சொன்னதால, அவருக்கு கிருஷ்ணா போன் போட்டான்.
கிருஷ்ணா to கண்ணன் : சார் இந்த கேஸ் பத்தி பாட்டி உங்க கிட்ட தெரிஞ்சிக்க சொன்னாங்க.
கண்ணன் : சொல்றன் தம்பி கேட்டுக்கோங்க
1.கொலையாளிங்க ரெண்டு பேரும் ஆம்பள பசங்க.
2.அதுல ஒருத்தன் நீளமா முடி வச்சிருப்பான்.
3. கொலை செய்யறதுக்கு முன்னாடி, முட்டி போட வச்சி சிகரெட்டால சூடு வச்சி இருக்காங்க.
கிருஷ்ணா : ஓ சரி சார் தேங்க்ஸ் தகவலுக்கு.
நிர்மலா வீட்ல, திடீர்னு ஒரு சவுண்ட் நைட்ல, கிருஷ்ணா ஓடி போய் மேல பார்த்தான், அப்போ ராஜுவும் பிரபுவும் குடிச்சிட்டு, சிகெரட்டாள மாத்தி மாத்தி சூடு வச்சி விளையாடிக்கிறாங்க.
கிருஷ்ணா பாட்டிக்கு கால் பண்ணி பேசுறான்.
கிருஷ்ணா : பாட்டி இது மாதிரி ராஜுவும் பிரபுவும், சூடு வச்சி விளையாடறாங்க.
பாட்டி :அப்ப இவணங்கு தான் கொலைகாரங்களா.
கிருஷ்ணா : எனக்கும் அப்பிடித்தான் தோணுது, முதல கொலையாளிங்க, ரெண்டு பசங்கனு சொன்னாங்க, ஒத்துப்போச்சு. அப்பறம் ரெண்டு பேர்ல ஒருத்தனுக்கு நீளமான முடின்னு சொன்னாங்க, ஒத்துப்போச்சு. இப்ப சிகெரட் சூடு வச்சு விளையாடுறாங்க, அதுவும் ஒத்துப்போவுது.
பாட்டி : நம்ம போலீஸ் உதவிய எடுத்துபோம்.
கிருஷ்ணா :கண்டிப்பா, அதுக்கு முன்னாடி ஒரு தடவ இவனுங்க தான் கொலையாளியானு உறுதி பண்ண என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு
பாட்டி : என்ன ஐடியா
கிருஷ்ணா : இவனுங்க நடவடிக்கைகளை நம்ம கவனிக்கனும்
பாட்டி : எப்படி கவனிக்க போற
கிருஷ்ணா : கேமரா வைப்போம், எல்லா ரூம்லையும் கேமரா வைக்க முடியாது, வீடு பெருசு . ஹால்ல மட்டும் வைப்போம். ஒரு வேலை, மத்த ரூம்ல கொலை பண்ண முயற்சி பண்ணா நமக்கு தெரியனும்ல, அதனால நிர்மலா கணவர் சட்டையில் காலர் பட்டன்ல ஒரு பட்டன் கேமரா போல சின்னதா ஒரு கேமரா வைப்போம்.
பாட்டி : சூப்பர், நாளைக்கு கேமரா பதிவு முழுவதும் பாத்துட்டு, எனக்கு சொல்லு.
அடுத்த நாள்:
கிருஷ்ணாவும் தாத்தாவும் வீட்ல இருந்தா, ராஜுவும் பிரபுவும் கொலை பண்ணமாட்டாங்கனு, கிருஷ்ணாவும், தாத்தாவும் வீட்டுக்கு வெளிய கார்ல உட்கார்ந்து போன்ல கேமராவ பாத்துட்டு இருக்கான். எதுனா அசம்பாவிதம் நடந்தா உடனே வீட்டுக்குள்ள போய் தடுத்து நிறுத்திடலாம்னு இருக்காங்க.
கிருஷ்ணாவும் தாத்தாவும் கேமெராவை பாத்திட்டு இருக்காங்க, திடீர்னு ராஜு, நிர்மலா கணவர் பின் கழுத்த நெரிக்கற மாதிரி, கைய வச்சுட்டு போறான், திடிர்னு ராஜு போன் அடிக்க ஆரமிச்ச உடனே நிர்மலா கணவர் திரும்பி பாக்குறாரு, ராஜு எதோ அவர்கிட்ட பேச வந்தா மாதிரி சமாளிச்சிட்டு வரான்.
கிருஷ்ணா உறுதியா ராஜுவும் பிரபுவும் கொலைகாரங்க தான் முடிவு பன்றான்.
கிருஷ்ணா போன்ல நடந்ததை எல்லாம் சொல்றான்
கிருஷ்ணா to பாட்டி : ராஜு உறுதியா கொலைகாரன்.
பாட்டி : அப்போ போலீஸ் கிட்ட போலாம்.
கிருஷ்ணா : போலாம் ஏதும் ஆதாரம் இல்லையே.
பாட்டி : நேத்து அவன் கொலை பண்ண பாத்த வீடியோபதிவு இல்லையா
கிருஷ்ணா : தெரியாம கை பட்டு அழிஞ்சுபோச்சு.
பாட்டி : சரி விடு நாளைக்கு ராஜு, பிரபு, நிர்மலா, நிர்மலா கணவர், அவங்கள தனியா விட்டுட்டு, நீ வெளிய வந்து கேமரா மூலமா பாரு, இந்த வாட்டி போலீஸ் கூட வச்சிக்கோ, எதாவது அசம்பாவிதம் நடந்திட கூடாது.
கிருஷ்ணா : சரி
----------------அடுத்த நாள் -----------
திரும்பவும் ராஜு, பிரபு,நிர்மலா, நிர்மலா கணவர் , எல்லாரையும் தனியா விட்டுட்டு வெளிய 3கான்ஸ்டேபிள் கூட, ஒரு SI, கிருஷ்ணாவும், தாத்தாவும் வெளிய ஒரு கார்ல, கேமரா வச்சி பாத்துட்டு இருக்காங்க, கொலை நடக்கற மாதிரி இருந்தா உடனே 3கான்ஸ்டேபிள் ஓடி போய் நிர்மலாவையும், அவங்க கணவரையும் காப்பாத்திடுவாங்க.
ஆனா நினைச்சிதற்கு நேர் மாறா, நிர்மலாவும், அவங்க கணவரும் வீட்ல இருந்து வெளிய கிளம்பிட்டாங்க.
SI to கிருஷ்ணா : இப்ப என்ன பண்ணலாம்
கிருஷ்ணா : வெயிட் பண்ணலாம் சார் , நிர்மலா திரும்ப வீட்டுக்கு வருவாங்க. அதுவரைக்கும் நிர்மலா எங்க போறாங்கனு பாக்க முடியும்.
SI: எப்படி பாக்க முடியும்.
கிருஷ்ணா : நம்ம தான் நிர்மலா கணவர், சட்டையில ஒரு கேமரா வச்சி இருக்கோம்ல
SI: எஸ் எஸ், வீட்டு ஹால்லையும் ஒரு கேமரா வச்சி இருக்கோம்ல.
கிருஷ்ணா : எஸ் சார், ரெண்டு கேமரா பாக்க போறோம். ஒன்னுல நிர்மலா, நிர்மலா கணவரை பாக்க போறோம். இன்னொன்னுல ராஜுவையும் பிரபுவையும் பாக்க போறோம்.
SI: என்னயா நிர்மலா கணவர் கேமெரால வெறும் ரோடு தான் தெரியுது.
கிருஷ்ணா : அவ்ளோ தான் சார் தெரியும்,அவங்க பைக்ல போய்ட்டு இருக்காங்கல.
SI: நான் அந்த கேமரா பாக்கல, நான் ராஜு, பிரபு கேமரா பாக்குறான்
பாட்டி போன்ல கிருஷ்ணாவுக்கு கால் பன்றாங்க
பாட்டி : டேய் கிருஷ்ணா, நிர்மலாக்கும், அவங்க கணவருக்கும் ஒன்னும் ஆகாதபடி
பாத்துக்குங்க. அவங்க உயிரோட இருந்தா தான் இங்க முதியோர் இல்லத்துல நிறைய பேருக்கு சாப்பாடு.
கிருஷ்ணா : சரி பாட்டி
கிருஷ்ணா பிஸியா நிர்மலா எப்ப வீட்டுக்கு வருவாங்கனு கேமரால பாத்துட்டு இருக்கான். 10 நிமிஷம் கழிச்சி,
பாட்டி போன்ல கிருஷ்ணாவுக்கு திரும்பவும் கால் பன்றாங்க. திரும்பவும் நிர்மலாக்கு ஒன்னும் ஆகாம பாத்துக்க சொல்ராங்க. கிருஷ்ணாவும் கோபமா சரின்னு சொல்லிட்டு போன் வைக்குறான்.
10 நிமிஷம் கழிச்சு திரும்பவும் பாட்டி போன் பன்றாங்க. கிருஷ்ணா போன் எடுத்த உடனே கோபமா பாட்டியை திட்டுறான். நான் நிர்மலாக்கு ஒன்னும் ஆகாம பாத்துக்குறேன்.
பாட்டி : நான் அதுக்கு போன் பண்ணலபா
கிருஷ்ணா : வேற எதுக்கு .
பாட்டி : நான் என்னோட ஆபீஸ் ரூம்ல இருக்க கேமரா வீடியோ பதிவலாம் பாத்தேன், கொலை செய்யப்பட்டவங்க அட்ரெஸ நானும், ரேகாவும் மட்டும் பாக்கல, இன்னொருத்தங்களும் எங்க கம்ப்யூட்டர்ல பாத்து இருக்காங்க.
கிருஷ்ணா : யாரு, ராஜுவும், பிரபுவும் தான.
பாட்டி : இல்ல, நிர்மலா
கிருஷ்ணா : என்ன
கிருஷ்ணா To SI: நிர்மலா கேமெராவ திருப்புங்க.
கேமராவ பாத்தா , நிர்மலாவும், நிர்மலா கணவரும் கத்தியோடு நிக்கிறாங்க. எதிர்ல ஒருத்தன் முட்டி போட்டு இருக்கான், அவன் கையில சிகெரட் சூடோட காயம். எல்லாருக்கும் அப்ப தான் புரிஞ்சிது கொலைகாரங்க நிர்மலாவும், நிர்மலா கணவரும் தான். ராஜூவையும், பிரபுவையும் தான் நிர்மலா கிட்ட இருந்து காப்பாத்தணும்.
நிர்மலா கேமராவ பாத்தா நிர்மலா கணவர், அந்த முட்டி போட்ட பையன கொன்னுட்டாரு.
அப்பறம் போலீஸ் நிர்மலாவையும், நிர்மலா கணவரையும் கைதி செய்து விசாரிச்சனர்.
போலீஸ் to நிர்மலா : ஏன் இந்த கொலைய பண்ணீங்க?
நிர்மலா : என் பையன், என்ன விட்டுட்டு அவன் பொண்டாட்டி கூட போயிட்டான். அந்த மன உளைச்சல்ல இருந்தேன். அப்போ முதியோர் இல்லத்துல கொஞ்சம் பணம் கொடுத்துட்டு, அவங்க பிரச்னையும் கேட்டேன். அப்ப தான் சில பசங்க அவங்க அப்பா அம்மாவ அடிச்சு முதியோர் இல்லத்துல சேர்த்து இருக்காங்க. அந்த மாதிரி பண்ணவங்க அட்ரஸ் முதியோர் இல்லம் ஆபீஸ்ல இருந்து எடுத்து அவங்கள அடிச்சு திருத்தணும் தான் நினைச்சோம்.
போலீஸ் : அப்பறம் எப்படி கொலை பண்ணீங்க.
nirmala: நாங்க அடிச்சு, சிகெரட் நால சூடு வச்சி அவங்க பெற்றோரை அடிச்சுது தப்புனு புரிய வைக்கும் போது, முதல் கொலை நாங்க பண்ணல, அந்த பையன் இதயநோயாளி போல நெஞ்சு வலில செத்துட்டான், ரெண்டாவது கொலை, அந்த வீட்டு பையன் அடிச்சிட்டு இருந்தோம் , திடிர்னு வேலைக்காரி வந்துட்டா, அவளை அடிச்சோம், அடி வேகமா பட்டு அவ செத்துட்டா.
போலீஸ் : அப்போ மூணாவது கொலை
நிர்மலா : ரெண்டு கொலை நாங்க பண்ணாமலே, எங்க மேல பழி வந்துடுச்சி.
இந்த மூணாவது கொலை நம்மளே பண்ணிடுவோம் முடிவு பண்ணோம், அதுனால ரொம்ப அப்பா அம்மாவை கொடுமை பண்ண பையன் அட்ரஸ் எடுத்து அவனை கொலை பண்ணோம். இந்த கொலைய பாத்து நிறைய பேர் அவங்க அப்பா அம்மாவ நல்லா பாத்துக்கணும்னு பயபடுவாங்க. அதுனால இந்த கொலையை பண்ணோம்.
போலீஸ் : உங்கள எப்படி ரெண்டு பசங்கனு அடையாளம் சொன்னாங்க.
nirmala: அதுவா நாங்க பேரும் ஆண் உடையில தான் இருந்தோம், முகமூடி போட்டு இருந்தோம். நான் நீளமா முடி வச்சி இருந்தது அடையாளமா போச்சு
போலீஸ் : ராஜுவும் பிரபுவும் எதுக்கு வீட்டுக்கு கூட்டிட்டு வந்தீங்க.
நிர்மலா : அவங்க ரெண்டு பேரும் முதியோர் இல்லத்துல பணம் மோசடி பண்ணதா கேள்வி பட்டோம், கடைசியா எங்க வேலைய முடிச்சிட்டு, இவங்க ரெண்டு பேரையும் கொன்னுடலாம்னு நினைச்சோம். இவங்க ரெண்டு பேரையும் மட்டும் தான் கொலை பண்ண பிளான் பண்ணோம், மத்தவங்கள அடிச்சி திருத்த தான் நினைச்சோம் ஆனா அதுவும் கொலையா மாறிடிச்சி.
போலீஸ் to ராஜு : நீ ஏன்டா நிர்மலா கணவரை கழுத்தை நெருக்கிரா மாதிரி போன.
ராஜு : நிர்மலாவும், அவங்க கணவரும் செத்த பிறகு சொத்து எங்களுக்குனு அவங்க சொன்னாங்க, அவங்க சாவுற வரைக்கும் எங்களால வெயிட் பண்ண முடியாதுனு ஒரு நாள் போதைல அவர கொள்ள போன, அப்பறம் வேணாம் கிருஷ்ணா ஊருக்கு போன உடனே கொண்ணுக்கலாம்னு விட்டுட்டேன்.
நிர்மலா, நிர்மலா கணவர் ரெண்டுபேரையும் அர்ரெஸ்ட் பண்ணாங்க. ராஜூவும் பிரபுவும் அர்ரெஸ்ட் பண்ணாங்க.
தாத்தாவும் கிருஷ்ணாவும் ஊருக்கு திரும்ப போய்ட்டாங்க
தாத்தா to கிருஷ்ணா : டேய், உங்க பாட்டிக்கு இந்த கொலை கேஸ்ல உதவி பண்ண, என் கிட்ட பேசவானு சொன்ன, போன் பண்ணா திட்டுறா.
கிருஷ்ணா : நீங்க அவங்க வாழ்க்கையே அழிச்சி இருக்கீங்க. அவங்க பேசுற வரைக்கும் வெயிட் பண்ணுங்க.
தாத்தா : நான் வெயிட் பண்றன் பா
------------------------THE END------------------------------------