மூன்றெழுத்து நடிகரை மடக்க கிடைத்த கொக்கைன் வழக்கு..
மூன்றெழுத்து நடிகரை மடக்க கிடைத்த கொக்கைன் வழக்கு..
சென்னை: தமிழ் சினிமாவை மொத்தமாக பயத்தில் ஆழ்த்தியுள்ள விஷயமாக மாறி இருப்பது கொக்கைன் வழக்குதான். இந்த வழக்கில் ஏற்கனவே இரண்டு நடிகர்கள் கைது செய்யப்பட்டு இருந்தாலும் இன்னும் காவல்துறை தனது விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் திரைத்துறையில் தற்போது காதும் காதுமாக இந்த வழக்கு தொடர்பான பேச்சு பரவலாகவே இருக்கிறது. இந்த வழக்கில் சில பெரிய நடிகர்களின் பெயர்கள் அடிபடுகிறது என கூறப்படுகிறது.
இந்த வழக்கு விசாரணையையில் காவல்துறைக்கே பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது என கூறப்படுறது. குறிப்பாக தமிழ் சினிமாவில் இருக்கும் சில நடிகர்கள், நடிகைகள் என பலரது பெயர்கள் இதில் அடிபடுகிறதாம். காவல்துறை தரப்பில் உரிய ஆவணங்களை சேகரித்த பின்னர் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. எனவே காவல்துறை இந்த வழக்கு தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.
நடிகர்களும் நடிகைகளும்: இந்நிலையில் இந்த வழக்கு இவ்வளவு தீவிரப்படுத்த இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது அரசியலில் கவனம் செலுத்தி வரும் நடிகரின் பெயரும் அவருக்கு நெருங்கியவர்களின் பெயரும் இந்த வழக்கில் அடிபடுவதாக ஒரு பேச்சு உள்ளது. எனவே இந்த வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தி, ஆதாரங்களைத் திரட்டினால் அந்த நடிகர் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும் என கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் இந்த நடிகருக்கும் நெருக்கமான நடிகை ஒருவருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் சர்ச்சை நடிகர் ஒருவருக்கும் இந்த போதைப்பொருள் விஷயத்தில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தேர்தலுக்குள் முடிவு: மேலும், நன்றாக இருந்த நடிகர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மொத்தமாக அவரது நடவடிக்கைகள் மாறியதற்கு பின்னணியிலும் இந்த போதைப்பொருள் புழக்கம் காரணமாக இருக்குமோ என்ற சந்தோகம் பலருக்கும் எழுந்துள்ளது. மொத்தத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னதாக இந்த வழக்கை முடித்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதில் காவல்துறை தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கோலிவுட் வட்டாரத்தில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவில் இருப்பவர்களும் திக் திக் மனநிலையில் இருக்கிறார்களாம்.
