Arul Prakash

Comedy Romance

4  

Arul Prakash

Comedy Romance

இம்சை அரசன்

இம்சை அரசன்

8 mins
383


ஒரு ஊரில் ஒரு அரசன், இவர் தந்தை போரில் இறந்த காரணத்தால் சிறு வயதில் அரசன் ஆகியவன், இவன் பெயர் ராஜேந்திர பூபதி.


மன்னன் ராஜேந்திர பூபதியும், அவரின் மந்திரி பாண்டியனும் பேசி கொள்கிறார்கள்.


ராஜேந்திர பூபதி to பாண்டியன் : என்ன மந்திரியாரே. என்கிட்டே எதோ பேச வேண்டும் சொல்லி அழைத்தீர்கள், பேசாமல் நிற்கிறீர்கள்.


பாண்டியன் : அதாவது வாரம் இரண்டு நாட்கள் எங்கயோ சென்று விடுகிறீர்கள். எங்கே என்று சொல்லுங்கள்.


ராஜேந்திர பூபதி : மந்திரியாக கேட்டால் சொல்லமாட்டேன், என் 20 வருட நண்பனாக கேட்டால் சொல்கிறேன்.


பாண்டியன் : நான் முதலில் உன் நண்பன், சொல்லு.


ராஜேந்திர பூபதி வெட்க படுகிறான்.


பாண்டியன் : நீ வெட்கபட்டு இருபதாவது தடவை பார்க்கிறேன் . எந்த பெண் என்று சொல்


ராஜேந்திர பூபதி : நம் பக்கத்து நாடு,கிம்பர் நாட்டில் ரெண்டு பெண்கள், நம் நாட்டு கண்ணப்பன் வீட்டுக்கு வருகிறார்கள், அதில் ஒருத்தி.


பாண்டியன் : ராஜ வம்சத்தின் பெண் தான் நீ கல்யாணம் பண்ண வேண்டும் என்று உன் அம்மா சொல்லி இருக்கிறார்கள் அல்லவா.


ராஜேந்திர பூபதி : அவள் உடையை பார்த்தால் ராஜா வம்சம் போல் தான் தெரிகிறது.


பாண்டியன்: சரி விடு நான் பாத்து கொள்கிறேன்.


ராஜேந்திர பூபதி : எதுவாக இருந்தாலும் சொல்லிவிட்டு செய்.


பாண்டியன் : நம் ஆட்கள் கிட்ட சொல்லி அந்த பெண்ணை கடத்தி விடலாம்.


ராஜேந்திர பூபதி : டேய் தப்பாகிவிடும்.


பாண்டியன் : நீ பேசிப்பார், அந்த பெண்ணுக்கு பிடிக்கவில்லை என்றால் திரும்ப கொண்டு போய் விட்டுவிடுவோம்.


ராஜேந்திர பூபதி : எதோ ஒன்று செய். நம் நாட்டில் யாருக்கும் விஷயம் கசிய கூடாது.


அந்த பெண்ணை கடத்திட்டு வந்துடுறாங்க. முகத்தை காட்டுகிறார்கள்.


ராஜேந்திர பூபதி : யார் இந்த பெண்.


பாண்டியன் : யார் என்று கேட்கிறாய், அப்போது பெண்ணை மாற்றி தூக்கி வந்து விட்டார்களா 


அந்த பெண் : யார் நீங்கள், கிம்பர் நாட்டு அரசன், தங்கச்சி தேவி நான், என்னையே கடத்தி இருக்கிறீர்களா 


ராஜேந்திர பூபதி to தேவி : ஒரு கொள்ளைக்கார பெண்ணை தூக்கி வர சொன்னேன், பதிலாக உன்னை தூக்கி வந்து விட்டார்கள், மன்னித்து விடு.


தேவி : இது பொய் என்று நன்றாக தெரிகிறது. எனக்கு உண்மை வேணும்.


ராஜேந்திர பூபதி : சரி, உன் கூட ஒரு பெண் வரும் அல்லவா, அந்த பெண்ணை எனக்கு பிடித்து இருந்தது, அந்த பெண்ணுக்கு என்னை பிடித்து இருக்கிறதா என்று கேட்க தான் இப்படி செய்தோம். 


தேவி :ஓ அவள் என் வேலைக்காரி, என் சிறுவயதில் இருந்து தோழியும் கூட.


ராஜேந்திர பூபதி : வேளைகாறியோ. அவள் துணி மணி பாத்தால் ராஜ வம்சம் போல் தெரிந்தது.


தேவி : அவள் என் தோழி அல்லவா, என் துணிகளை அவளுக்கு கொடுப்பது உண்டு.ஏன் வேலைக்காரிய பிடிக்காதோ உமக்கு, பெரிய ராஜாவோ 


ராஜேந்திர பூபதி : ஆம் நான் இந்த நாட்டின் அரசன்.


தேவி : ஐயோ அப்போ ராஜேந்திர பூபதி நீங்கள் தானா.


ராஜேந்திர பூபதி : ஆம்.


தேவி : எனக்கு உங்கள் மீது காதல் உண்டு.


ராஜேந்திர பூபதி : காதலா, இப்போ தான் என்னை நீ பார்க்கிறாய்.


தேவி : இந்த நாட்டு மக்களுக்கு நீங்கள் நிறைய நன்மைகள் செய்து இருக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன், அது மட்டும் இல்லாமல் நீங்கள் போர் செய்தது இல்லயாம், போருக்கு எதிரானவர் என்பது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.


பாண்டியன், ராஜேந்திர பூபதி காதில் "போர் என்றால் உனக்கு பயம் என்று அவளுக்கும் இந்த நாட்டுக்கும் தெரியாது போல"


ராஜேந்திர பூபதி : ராஜ ரகசியத்தை வெளியே சொல்லாதே டா.


தேவி : என் மீது உங்களுக்கு காதல் வருமா.


ராஜேந்திர பூபதி : வாய்ப்பே இல்லை.


தேவி : எதனால், நான் அழகாய் இல்லையா, பல மன்னர்கள் என்னை திருமணம் செய்ய காத்து கொண்டு இருக்கிறார்கள்.


ராஜேந்திர பூபதி : நீ அழகு தான்.


தேவி : பின்பு.


ராஜேந்திர பூபதி : நீ


தேவி : நான்


ராஜேந்திர பூபதி : நீ கருப்பாய் உள்ளாய்.


தேவி : அடேங்கப்பா தங்க நிறத்தில் ஜொலிகிரீர்கள் நீங்கள்.


ராஜேந்திர பூபதி : சிறு வயதில் இருந்து அந்த எண்ணம் ஒட்டி கொண்டது.


தேவி : பெரிய இங்கிலாந்து அரசர், நிறம் பாத்து தான் பேசுவார். என்னை கொண்டு போய் விட சொல்லு உங்க ஆட்களிடம். நான் திரும்ப வர மாட்டேன் என்று நினைக்காதே உன்னை காதலிக்க செய்யாமல் விடமாட்டேன். இந்த கருப்பு நிற பெண் தான் உனக்கு.


தேவியை கொண்டு போய் விட்டு விடுகிறார்கள்.


ராஜேந்திர பூபதி to பாண்டியன் : டேய் என் நிறத்தை இப்படி பேசிக்கிறாலே. நீ என்னை நினைக்கிறாய்.


பாண்டியன் : நீ தான் முதலில் அவள் நிறத்தை பற்றி பேசினாய்.


ராஜேந்திர பூபதி : நான் என்ன அவ்ளோ கருப்பாகவா உள்ளேன்.


பாண்டியன் : மந்திரியாக சொல்லவா, நண்பனாக சொல்லவா.


ராஜேந்திர பூபதி : நண்பனாகவே சொல்லு.


பாண்டியன் : உன்னையும் ஒரு எரும மாட்டையும் நிக்க வைத்தால், எருமை வெளுப்பாக தெரியும்.


ராஜேந்திர பூபதி : இதற்க்கு நீ மந்திரியாகவே சொல்லி இருக்கலாம்.


பாண்டியன் : மந்திரியாக சொல்லவா.


ராஜேந்திர பூபதி : அய்யா ஆள விடு.


ராஜேந்திர பூபதி தன் அரண்மனைக்கு சென்று விடுகிறான். அவன் அம்மா வைதேகியிடம் பேசி கொண்டு இருக்கிறான்.


வைதேகி : நீயா,திடீர் என பார்ப்பதற்கு உன் நண்பன் பாண்டியன் போல் இருந்தாய்.


ராஜேந்திர பூபதி : அம்மா நான் அவனை விட பார்க்க நல்லா இருப்பேன்.


வைதேகி : ரெண்டு பேரும் சுமார் மூஞ்சி குமாரு தான்.


ராஜேந்திர பூபதி : நான் கோபமாக போகிறேன்.


அடுத்த நாள் அரசபையில் எல்லா பஞ்சாயத்தையும் முடிச்சு வைக்கிறான் ராஜேந்திர பூபதி. பக்கத்தில் அவன் அம்மா ஒரு நாற்காலியில் உட்கார்ந்து இருந்தார்.ஒரு வேலை ஆள் மன்னனிடம் பேசுகிறான்.


வேலை ஆள் : மன்னா உங்களை பார்க்க 20 பெண்கள் வந்து இருக்கிறார்கள்.


ராஜேந்திர பூபதி : என்னவாம்.


வேலை ஆள் : அதை உங்களிடம் தான் சொல்லுவார்களாம்.


ராஜேந்திர பூபதி : சரி வர சொல்லு.


அந்த பெண்கள் வந்துட்டாங்க.


ராஜேந்திர பூபதி : உங்கள் பிரச்னை என்னை வென்று சொல்லுங்கள்.


அந்த பெண்கள் : நாங்கள் 19 பேரும் உங்களை கல்யாணம் செய்ய விரும்புகிறோம்.


ராஜேந்திர பூபதி : ஹா ஹா ஹா,இவளோ பேரை நான் எப்படி மனக்க முடியும்.


அந்த பெண்கள் : நாங்க கேட்பதை கேட்டு விட்டோம், முடிவு உங்களுடையது.


ராஜேந்திர பூபதி : சரி ஒருத்தர் மட்டும் ஏன் அமைதியாக உள்ளார்.


அந்த பெண்கள் : அவள் உங்க மந்திரி பாண்டியணை விரும்பிக்கிறாள்.


ராஜேந்திர பூபதி : ஐயோ, நான் அவனிடம் சொல்லிவிடுகிறேன். அவனுக்கு வேறு வேலை கொடுத்து இருக்கிறேன். சரி நீங்கள் புறப்படுங்கள்.


ராஜேந்திர பூபதி அவன் அம்மாவிடம் "இப்போது தெரிகிறதா என் அழகின் வலிமை ".


வைதேகி : டேய் ஒரு ராஜாவை மனக்க எவளும் ஆசை படுவாள்.


ராஜேந்திர பூபதி : நீ ஒத்து கொள்ள மாட்டயே.


கொஞ்சம் நேரம் கழித்து.


அந்த பெண்களுக்கு, பாண்டியன் காசு கொடுத்து கொண்டு இருந்தான். வைதேகி பார்த்து விட்டு.


வைதேகி : ஏன்னடா அவங்களுக்கு பணம் கொடுக்கிராய்.


பாண்டியன் : அது வந்து


வைதேகி அந்த பெண்களிடம் : ஏன் பணம் வாங்குகிறீர்கள்.


அந்த பெண்கள் : ராஜாவை மனக்க விரும்பிகிறோம் என சொன்னால் காசு தருவதாக மந்திரி சொன்னார்.


வைதேகி : கூப்பிடு டா உன் ராஜாவை.


ராஜேந்திர பூபதி : என்ன அம்மா


வைதேகி : எதற்கு டா இப்படி செய்தாய்.


ராஜேந்திர பூபதி : நீ தான் எங்களை சுமார் மூஞ்சி குமாரு என்றாயே, எங்களின் அழகை உனக்கு உணர்த்தவே அப்படி செய்தேன்.


வைதேகி : நீங்கள் இருவரும் சுமார் மூஞ்சி குமார் இல்லை, ரொம்ப சுமார் மூஞ்சி குமார்.


சொல்லிட்டு வைதேகி சென்று விடுகிறாள்.


ராஜேந்திர பூபதி to பாண்டியன் : டேய் 20 பெண்ணில் ஒருத்தி உன்னை மனக்க வேண்டும் என்று சொல்லுகிறாள்.


பாண்டியன் : உங்க அம்மா என்னையும் தானே அசிங்க படுத்தினால், எனக்கும் என் அழகின் வலிமையை காட்ட வேண்டாமா.


ராஜேந்திர பூபதி : நம் ராஜ தந்திரங்கள் எல்லாம் வீணாகி விட்டாதடா.


அடுத்த நாள் அரசபையில்.


வேலை ஆள் : அரசே உங்களை பார்க்க ஒரு பெண் வந்து இருக்கிறாள்.


ராஜேந்திர பூபதி : யாராக இருந்தாலும் இப்போ பார்க்க முடியாது என்று சொல்லு.


வேலை ஆள் : கிம்பர் நாட்டு இளவரசி தேவி என்று சொல்ல சொன்னாங்க.


ராஜேந்திர பூபதி : சரி வர சொல்லு.


ராஜேந்திர பூபதியும் தேவியும் ஒரு விருந்தினர் அறையில் பேசி கொண்டு இருக்கிறார்கள்.


ராஜேந்திர பூபதி : என்ன இந்த பக்கம்.


தேவி : உங்களை 20 பெண்கள் மனக்க விரும்பியதாக செய்தி.


ராஜேந்திர பூபதி : அது எப்படி உனக்கு தெரியும்.


தேவி : உங்கள் அரசபையில் என் ஆள் இருக்கிறார்கள்.


ராஜேந்திர பூபதி : எப்படி தெரியும் என்று சொல்லு.


தேவி : வந்த இருபது பெண்ணில் ஒருவர் என் தோழி.


ராஜேந்திர பூபதி : போச்சு டா, எல்லாத்தையும் சொல்லிவிட்டாரா, எத்தனை தோழிகள் தான் உனக்கு இந்த நாட்டில்.


தேவி : சும்மா 20 பெண்கள் மனக்க விரும்புவதை விட, நான் உன்னை உண்மையில் விரும்புகிறேன் ஏற்றுக்கொள்ளுங்கள்.


ராஜேந்திர பூபதி : அது வந்து.


தேவி : கருப்பு என சொன்னிர்கள், நான் பத்ரகாளி ஆகி விடுவேன்.


ராஜேந்திர பூபதி : எனக்கும் பிடித்துவிடும் போல தான் தெரிகிறது.


தேவி : அருமை, இந்த மாற்றத்தை தான் நான் எதிர்பாத்தேன்.


ராஜேந்திர பூபதி :சரி. என் அரண்மனையை சுற்றி பார்க்கலாம் வா.


தேவி பக்கத்தில் இருந்த வாளை எடுக்கிறாள் 


தேவி : இது என்ன வாள்.


ராஜேந்திர பூபதி : இது போரில் உபயோகிக்கபடும் வாள்.


தேவி : வா நம் இருவரும் வாள் சண்டையிட்டு பாப்போம்.


ராஜேந்திர பூபதி : சண்டையா.


தேவி ஒரு வாளை எடுத்து ராஜேந்திர பூபதியிடம் வீசுகிறாள். ராஜேந்திர பூபதிக்கு கத்தி பிடிக்க கூட தெரியவில்லை. தேவி கத்தி எடுத்து விளையாடுகிறாள். கடைசியில் ராஜேந்திர பூபதியை வீழ்த்திவிடுகிறாள். ராஜேந்திர பூபதி வியந்து பார்க்கிறான்.


தேவி : ஓ கத்தி வீச தெரியாதா.அதனால் தான் போர் செய்வது இல்லையா எந்த நாட்டிடமும். நான் எதோ நீங்க அகிம்சைவாதினு நினச்சேன் 


ராஜேந்திர பூபதி : ஒரு பெண் என்பதால் விட்டுவிட்டேன்.


தேவி : அப்படியா நம்பிவிட்டேன். நீ எப்படி இருந்தாலும் உன்ன மனக்க விரும்புகிறேன். சரி நான் கிளம்புகிறேன் நேரம் ஆகி விட்டது.


இரண்டு நாட்களாக ராஜேந்திர பூபதி சோகமாக உள்ளான். ஒரு பெண்ணிடம் தோற்றுவிட்டதாக நினைத்து வருந்துகிறான்.


வைதேகி to ராஜேந்திர பூபதி : ஏன்டா ரெண்டு நாளா சோகமாக இருக்க.


ராஜேந்திர பூபதி : கிம்பர் நாட்டு பெண்ணிடம், வாள் சண்டையிட்டு தோற்றுவிட்டேன். நம் நாடு முழுவதும் தெரிந்தால் கேவலம்.


வைதேகி : சரி அந்த பெண்ணையே கல்யாணம் செய்து கொள், தன் காதலியை ஜெயிக்க வைப்பதற்காக தோற்றேன் என்று சொல்லி கொள்ளலாம்.


ராஜேந்திர பூபதி : இப்போ என்ன பண்ணலாம்.


வைதேகி : அவளை பெண் கேட்கலாம், இரண்டு நாட்களில். 


ராஜேந்திர பூபதி : சரி அம்மா.


ஒரு சாமியார் ராஜேந்திர பூபதியை பார்க்க வருகிறார்.


சாமியார் : காலி பூஜைக்கு உங்க அம்மா வந்து இருந்தார்கள். ஒரு சொம்பு பூஜை தீர்த்ததை கொடுப்பது வழக்கம், இந்த வாட்டி தவறுதலாக சொம்பில் இருந்த கள்ளை கொடுத்து விட்டேன். போதையில் இருப்பார்.


ராஜேந்திர பூபதி : இதற்கு ஏன் பதட்டம், கள்ளை சாமிக்கு படைக்கும் தீர்த்தம் தான அதுவும். ஒரு நாள் குடித்தால் ஒன்றும் ஆகாது.


வைதேகி, கள் குடித்த போதையில், ராஜேந்திர பூபதி ஒரு பெண்ணிடம் கத்தி சண்டையில் தோர்த்தது சொல்லிவிடுகிறாள். நாடு முழுக்க தெரிஞ்சு விடுகிறது. ராஜேந்திர பூபதி இதை கேட்டு வருத்தம் அடைக்கிறான்.


இரண்டு நாள் கழித்து, கிம்பர் நாட்டு அரசர் கஜபதியை பார்த்து தேவியை பெண் கேட்கிறார்கள். ஒரு பெண்ணிடம் கத்தி சண்டை போட தெரியாதவனிடம் என் தங்கச்சியை கட்டி தர மாட்டேன் என்று சொல்லிவிடுகிறார்கள். ராஜேந்திர பூபதி மனம் வேதனையுடன் திரும்புகிறான். எல்லா நாட்டு மக்களுக்கும் ஒரு மன்னன் ஒரு பெண்ணிடம் தோற்றுவிட்டான் என்ற செய்தி பரவியது.


வைதேகியும் ராஜேந்திர பூபதியும் பேசி கொள்கிறார்கள்.


வைதேகி : பூபதி, இனி சண்டை பயிற்சி செய்ய வேண்டிய நேரம்.


ராஜேந்திர பூபதி : சரி அம்மா. நாளை முதல் பயிற்சி எடுக்கிறேன்.


பயிற்சி எடுத்து 1 மாதம் ஆகிறது.


ஒருவர் வைதேகியிடும் ஒருநாள் உங்க பையன் பயிற்சி செய்வதை கண்டு வியந்தேன் என்று சொன்னவுடன், வைதேகி மகிழ்ச்சியில் என்ன பண்ணுவது என்று தெரியாமல் பேசி கொண்டு இருந்தாள்.


வைதேகி to மந்திரி பாண்டியன் : என்னடா பூபதி பயிற்சியில் கலக்குவதாக கேள்விபட்டேன். கிம்பர் நாட்டிடம் போர் புரிந்து தேவியை பூபதிக்கு கல்யாணம் செய்ய வேண்டும், ஓலையை அனுப்பு.


பாண்டியன் : இருங்கள், பூபதியை பற்றி யார் என்ன சொன்னார்கள்.


வைதேகி : பயிற்சியில் ஒரு மாட்டை அடக்கி விட்டாணாமே.


பாண்டியன் : மாடு தான் சின்ன மாடு.


வைதேகி : சின்ன மாடு என்றால்.


பாண்டியன் : முதலில் கன்னுகுட்டி அடக்குகிறேன், பின்பு மாடு என்று சொல்லிவிட்டான்.


வைதேகி : அப்போ பூபதி ஒருவன் ஐந்து பேரை அடித்தது.


பாண்டியன் : எல்லாம் நம் வேலை ஆட்கள், மன்னனை எப்படி திருப்பி அடிப்பது என்று தெரியாமல், அடிவாங்குகிறார்கள்.


வைதேகி : வில் அம்பு பயிற்சியில் நன்றாக செயல் பட்டதாக சொன்னாங்க.


பாண்டியன் : தவறுதலாக நம் ஆட்கள் மீது அம்பை எய்து விட்டான். இப்படியே செய்தால் நிறைய வேலை ஆட்களை இழக்க வேண்டி இருக்கும்.


வைதேகி : ஆமாம் பெண்கள் பயிற்சி கூடத்தில் என்ன செய்கிறார்கள்.


பாண்டியன் : பெண்களை பார்த்தால் தான் உங்கள் பையன் ஊக்கத்துடன் பயிற்சி செய்கிறான்.


வைதேகி : நீ சொல்லும் தகவல்களை எல்லாம் பயிற்சியாளர் தானே சொல்ல வேண்டும், அவர் எங்கே.


பாண்டியன் : பூபதியின் வேகத்தை கூட்ட, பலுவான பொருளை தூக்கி கொண்டு போக வேண்டும், பலுவான பொருள் கிடைக்காத காரணத்தாலும், பயிற்சியாளர் நேரம் சரிஇல்லாத காரணத்தாலும், பயிற்சியாளரை தூக்கி கொண்டு ஓடினான், பயிற்சிலாறை இருபது அடி பள்ளத்தில் தள்ளி விட்டான், அவர் கால் உடைந்து விட்டது.


வைதேகி : பூபதிக்கு ஒன்னும் ஆகவில்லையே.


பாண்டியன் : அவனை தவிர, அனைவருக்கும் அடிபட்டது.


கிம்பர் நாட்டுக்கு ஒரு ஆபத்து வந்தது, லடாக் என்னும் மிக பெரிய நாடு கிம்பர் மீது

போர் புரிய வந்தது. கிம்பர் நாடு பயத்தில் இருந்ததை அறிந்து, ராஜேந்திர பூபதி லடாக் நாட்டு அரசனிடம் பேச்சு வார்த்தை நடத்தினான். ராஜேந்திர பூபதியின் பேச்சு ஆற்றளால் அந்த போர் நடக்காமல் நின்றது. அதுவும் இல்லாமல் அந்த நாட்டு அரசன், ராஜேந்திர பூபதிக்கு நண்பன்.


ராஜேந்திர பூபதி கிம்பர் நாட்டு அரசன் கஜபதியை சந்தித்தான், தேவியும் கூட இருந்தாள்.


கஜபதி : யார் நீ என் நாட்டை போரில் இருந்து காப்பாற்றுவதற்கு , உன்னை போல வீரம் இல்லாத நாடு என்று நினைத்தையா .


ராஜேந்திர பூபதி : எப்படியும் தேவியை நான் மனக்க போகிறேன். அதனால் ஒரு சிறிய உதவி.


கஜபதி : உன்னை போல் பயந்தவனுக்கு என் தங்கச்சியை தர மாட்டேன்.


ராஜேந்திர பூபதி : வார்த்தை விடாதீர்கள்.


கஜபதி : அப்படி தான் பேசுவேன் என்ன செய்வாய்.


ராஜேந்திர பூபதி : எனக்கும் கோபம் வரும்.


கஜபதி : ஹா ஹா ஹா நீ இந்த நாட்டின் தலை சிறந்த வீரனுடன் பேசி கொண்டு இருக்கிறாய். என்னுடன் ஒத்தைக்கு ஒத்தை சண்டை செய்து ஜெயிச்சு விட்டு, என் தங்கச்சியை கூட்டி செல்.


தேவி : அண்ணா வேண்டாம். (அழுகையுடன்).


ராஜேந்திர பூபதி: சண்டைக்கு நான் தயார்.


சண்டையில் ராஜேந்திர பூபதிக்கு நல்ல அடி, ரத்தம் கொட்டியது. விட முயற்சியுடன் சண்டை போட்டான். ஒரு நேரத்துக்கு மேல் தேவியால் பார்க்க முடியாமல் சண்டையை நிறுத்தி அழுக ஆரமித்தால்.


ராஜேந்திர பூபதி நிக்க முடியாமல் நிக்க, கஜபதிக்கு அவன் மேல் இரக்கம் வந்தது.

ராஜேந்திர பூபதி நடக்க முடியாமல் நடந்து போக, கஜபதி அவனை கூப்பிட்டான்.


கஜபதி : நீ கோழையில்லை, என் தங்கைக்காக என்னை போல ஒரு பெரிய வீரனை எதிர்க்க துணிந்து விட்டாய். நீ ஒத்து கொண்டால், உனக்கு நான் பயிற்சி தருகிறேன், உன்னை ஒரு வீரன் ஆக்குகிறேன்.


ராஜேந்திர பூபதி : நான் இதற்க்கு ஒப்பு கொள்கிறேன்.


கஜபதி : ஆனால் ஒரு ஒப்பந்தம், நீ ஒரு போரில் ஜெயித்தால் மட்டுமே, என் தங்கை உனக்கு.


ராஜேந்திர பூபதி : நான் இதற்க்கு ஒப்பு கொள்கிறேன்.


ஆறு மாதம் பயிற்சிக்கு பின் ராஜேந்திர பூபதி ஒரு பெரிய வீரன் ஆனான். முதல் தடவை போரில் வெற்றி கண்டான். தேவியை மனந்தான்.


கிம்பர் நாட்டுக்கு இரு நாடுகள் சேர்ந்து போருக்கு வந்தது, அப்போது ராஜேந்திர பூபதியின் நாடும், கிம்பர் நாடும் சேர்ந்து அந்த இரு நாடுகளை போரில் வீழ்த்தியது.


---------------------The End------------



Rate this content
Log in

Similar tamil story from Comedy