என் செல்ல குட்டி🥰
என் செல்ல குட்டி🥰
வழக்கம் போல், அந்த ஆண்டும், கோடை விடுமுறைக்கு, தாத்தா வீட்டிற்க்கு சென்றிருந்தேன். அது, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த, ஓர் அழகிய கிராமம்.🏕️🏡🏠
அழகான வயல் வெளி. அளவான ஆறு, இறக்கம் கொண்ட ஏறி, ஈர்க்கும் தென்றல் காற்று, உயர்ந்த மரங்கள், ஊர் கிணறு மற்றும் குழாய்கள். எருதுகள் மற்றும் எருமைகள். ஏர் பூட்டி செய்யுப்படும் விவசாயம். "ஐ என" வியக்க்கும் சந்தை கடை, மற்றும் திருவிழா.😳😲
ஒவ்வொரு நாளும், ஓர் வகை மகிழ்ச்சியுடன் கடந்து செல்லும், அழகிய பவனம். என் நகரிலோ அல்லது வீட்டிலோ இருக்கும் சிறிய வசதிகள் கூட, அங்கு கிடையாது.😮💨
ஆனாலும், சிரிப்புக்கும், அன்புக்கும், அங்கு பஞ்சமே கிடையாது. இந்த முறை, என்னை வரவேற்க, ஒரு சிறிய உறுப்பினரும், அங்கே இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு, தாத்தா ஒரு பசுவை வாங்கி இருக்கிறார், அவளின் குட்டி தான், அந்த உறுப்பினர். அது ஒரு ஆண் குட்டி. அவனுக்கு நான் வைத்த பெயர் "இர்பூ". என்னோடு சேர்த்து வீட்டில் மொத்தம், ஆறு சுட்டி குட்டீஸ்.
எங்கள் அனைவருக்கும், இர்பூ தான், செல்லம். என்னை போல் அவனுக்கும், நாய், பூனை போன்றவற்றை, பார்த்தால், பயம்.😱
நாங்கள் இத்தனை பிள்ளைகள் இருந்தும், வேறு யாரிடமும் செல்ல மாட்டான். என்னை மட்டும், சுற்றி வருவான். கட்டி இருக்கும் கயிற்றை அவிழ்த்ததும், தாயிடம் பால் குடித்து விட்டு, நேரே என்னிடம் ஓடி வந்து விடுவான். அவ்வளவு பாசக் காரன்.
அவன், என் மடியில் தலை வைத்து உறங்குவதையும், நாங்கள் இருவரும், விலையாடுவதையும், கண்டு ரசிப்பாள், அவன் அன்னை.
எவ்வளவு பாலை குடித்தாலும், புள்ளை தின்றாலும், நான் என்ன கொண்டு வந்து தருவேன் என்று, ஆவலுடன் காத்திருப்பான், இருபூ.😍
பட்டணத்தில் படிக்கும், புழு பூச்சிக்கெல்லாம், பயப் படும் நான், அவனுடன் மட்டும், எப்படி இத்தனை நெருக்கமானேன் என்று, என் தாத்தாவும், வியந்ததுண்டு. என் குரல், சற்று ஓச்சையாக, கேட்டால் போதும், அவனும், தொழுவத்தில் இருந்து, அவன் அம்மா பக்கத்தில் இருந்துமே, மா...மா...மா...மா... என்று, கத்துவான். நான் வந்து பார்த்ததும், தன் தட்டை பல்லை காட்டுவான்.😁
அம்மாவிடம், பாலை குடித்தாலும், அதில் இருந்து இடும், நான் குடிக்கும் காஃபியையும், என்னுடன் ரசித்து, குடிப்பான். அவனுக்கும் என்னை போல், ஜாங்கிரி, என்றால், கொல்லை பிரியம். நான் பேசியதில், அவனுக்கு அப்படி, என்ன தான் புறிந்ததென்று, தெரிய வில்லை.🤔
எல்லாம் புரிந்தது போல, தலையை மட்டும், ஆட்டுவான், என் செல்ல குட்டி. இப்படி கோடை விடுமுறை முழுவதும், அவனுடன் கழிய, பள்ளியும் தொடங்க இருந்தது.🏫📝
பிரிய மனமில்லாமல், அவனை, பிரிந்து வந்தேன், நான். என் உடன் பிறவா சகோதரனை, அது தான் அவனை நான் காணும் கடைசி, என்றும், அறியாமல். எப்போது ஃபோன் செய்தாலும், அவனை பற்றியே முதலில், விசாரிப்பேன்.☎️
வெகு நாட்களாக, சரியாக சாப்பிடாமல் இருக்கிறான் என்றனர்.
தினமும் அழுகிறான், என் நினைவால் இருக்கலாம், என்றார், தாத்தா. மூன்று மாதம் கழித்து, வார கடைசி, விடுமுறையில், அவனை காண, ஆவலாய் சென்றேன், நான்.
அவனின் இடமோ, காலியாக இருந்தது. என் மகிழ்ச்சியும், வெகுவாக குறைந்தது. என் இர்பூ எங்க? யாராவது சொல்லுங்களேன், என்று கேட்டேன். யாரும் சொல்ல வில்லை. அழுது, அடம் பிடித்தேன்.😭
கடைசியாக, அவனை புதைத்த இடத்தை காட்டினார்கள். கலங்கி நின்றன, என் கண்கள். இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஓர் இரவில், பாம்பு கடித்து, இறந்து விட்டான், என்றார்கள். "ஐயோ, இர்பூ! என்று, கதறி அழுதேன். என் குரல் கேட்டு, பல நாட்களாக, தாகத்தில் இருந்தவன், விழித்தான் போல.🥱
அங்கு குலமாய் தேங்கி நின்ற என் கண்ணீரை, மெதுவாய், உள்ளே இழுத்துக் கொண்டான். மௌனமாய் கிடந்தான், "இரபூ"
என் செல்ல குட்டி!😭🥰😇😥
