மலைகளின் அரசி
மலைகளின் அரசி
வானுயர்ந்த மலைகள், தொடர்ந்து இருப்பதை பார்த்தால், அலை அலையாய் விரிந்து கிடக்கும் மங்கை அவள் கருங் கூந்தல், என்று தோன்றும், அந்த மலை தொடர்ச்சி.
அதில் மேகங்களை முட்டி நிற்கும் மரங்களில், பூத்து குலுங்கும் வண்ண மலர்கள், மங்கை அவளின் கூந்தலை, வண்ண கோர்வையாய் அலங்கரித்து, அந்த கூந்தலுக்கு, அழகு சேர்த்தன. அவள் மீது செல்லும், கரடு முரடான சாலைகள், அவளின் அங்கங்களின், வளைவு நெளிவுகளாய் மாற, ஆங்காங்கே இருந்த பள்ளத் தாக்குகளும், ஒவ்வொரு அங்கத்திற்கும் இடையே ஆன வெற்றிடங்களாய் தோன்றின.
ஆங்காங்கே இருந்த வீடுகளும், கட்டடங்களும் கூட, அவள் அணியும் அணிகலன்கலாய், மின்னி, அவளின் அழகை மெறுகேற்றின.🥰
பச்சை கம்பளம் விரித்ததை போல், பறந்து விரிந்த புற்களை கொண்ட, பச்சை உடம்புக்காரி. அவளிடம் இருந்து, ஆங்காங்கே உருவெடுக்கும் அறுவிகளும், அவளின் வியர்வை எனும் தீர்த்த துளிகளாய் தித்திக்க, விழும் போதும், நதியாய் ஓடும் போதும், அவை எழுப்பும் ஓசையே, அவளின் கால் கொலுசாய் மாறும், மாயமென்ன? இத்தனை அழகுடன் சேர்த்து, தன் வளங்களையும், வாரி வழங்குவதாள் தான், அவள் அரசி எனும் பெயர் பெற்றாளோ? ஆம், அவள் தான், அந்த மலைகளின் அரசி என்று மக்களால், அன்போடு அழைக்கப் படும், நீலகிரி (எ) ஊட்டி.
அவளின் இயற்க்கை அழகை பார்க்க இரு கண்கள் போதாது.👀😍
பார்க்க பார்க்க, என்றும், திகட்டாது.
