வள்ளிமலை🙏
வள்ளிமலை🙏
எல்லாருக்கும் வணக்கம். இந்த வாரம் நான் சொல்லப் போற கதை, வேலூர் மாவட்டத்துல இருக்குற வள்ளிமலை முருகன் கோவிலை பத்தி தான். கடவுளை பத்தியோ, கோவில்களை பாத்தியோ, புகழ்ந்து பாட, இல்ல ஆராய்ச்சி செய்ய, எமக்கு தெரியாது. இந்த பதிவு எதுக்குனா? அந்த வள்ளிமலைல நான் பார்த்து ரசிச்சு, என்னை மெய் சிலிர்க்க வச்ச விஷயங்களை, பகிர்ந்துக்க தான். நான் ரொம்ப பக்தி உள்ள, ஆள் எல்லாம், இல்லங்க. அவ்ளோ ஏன்? என் வீட்ல, எனக்கு கடவுள் பக்தி இருக்குன்னு சொன்னா? யாரும் நம்ப மாட்டாங்க. அப்புறம் ஏன் கோவிலுக்கு போனேன்னு கேக்குறீங்களா? சும்மா தாங்க. வீட்லயே எவ்ளோ நேரம், அடைஞ்சு கிடக்கிறது? அதான் ஒரு ஃபக் ரைட் போலாம்னு கிளம்பிட்டாம். என் சொந்த ஊர், வேலூர் தான். என் வீட்ல இருந்து, வள்ளிமலை போறதுக்கு, ரெண்டு மணி நேரம் ஆச்சு. போற வழில, அங்கங்க நிறுத்தி, புடிச்சதெல்லாம் வாங்கி சாப்டு கிட்டு, பாக்குறதை எல்லாம் ரசிச்சு கிட்டு, ஜாலியா போனோம். அது வரைக்கும், வறண்டு கிடந்த பூமி. கொலுத்துற வெயில்ல போன எங்களுக்கு, அந்த வள்ளிமலைய சுத்தி, செழிப்பான வயல் வெளி, தண்ணி நிரம்பி வழியுற ஏரி. 🏕️
பச்சை பசேல்னு இருக்குற காடு மலைகளை பார்க்க, கண்ணுக்கு குளிர்ச்சியாவும், மனசுக்கு இத்மாவும், இருந்தது. நல்ல வெயில் வேற, தான் சில்லுன்னு கூழும், மொரும் குடிச்சிட்டு, கோவிலுக்கு போனோம். இந்த இடத்துல தான், தமிழ் கடவுள் முருகப் பெருமான், வள்ளி குறத்திய திருமணம் செஞ்சதா, நான் சொல்லலங்க.🛕
புராணம் சொல்லுது. அந்த காலத்துல, குறவர்கள் எல்லாருமே, வேட்டையாடுரத தான், பிரதான தொழிலா, வச்சிருந்தாங்க. அவங்களோட குடியிருப்புமே, மலை அடிவாரத்தில, இல்லை, மலை முகடுகள்ல தான், இருந்திருக்கு. அந்த மாதிரி ஒரு இடம் தான், வள்ளிமலை. இன்னைக்கு, இந்த மலையை சுத்தி, நிறைய ஊர் இருக்கு. ஒரு சாதாரண, ஊரு மாதிரி தான் இருக்கு. ஆனா வள்ளிமலை முருகன் கோவில் இருக்கு பாத்தீங்களா, அது ரொம்ப பிரசித்தி பெற்றது. என்ன தான் ஆளுங்க கட்டுன படிக்கட்டுகள், சீர்படுத்துன கோயிலா இருந்தாலுமே, அந்த மலைல, அவ்ளோ இயற்கை அழகு இருக்குங்க. வேலூர்னாலே, வெயில் கொளுத்தும்னு தான், சொல்லுவாங்க. எவ்வளவு கொளுத்துற வெயிலா இருந்தாலும், அங்க வெயில் பெருசா தெரியலன்னு தான், சொல்லணும். அதுவும், கோவிலுக்கு அடிவாரத்துல இருக்குற குளத்துல காலை நெனச்சிட்டு, படியில கால வெச்சோம்னு வைங்களேன்? எந்த சூடும் தெரிறது இல்ல. அது என்ன மாயம் மந்திரம்னு தெரியல, அவ்ளோ குளிர்ச்சி. கண்ணுக்கு மட்டும் இல்ல. உடம்புக்கும், மனசுக்கும், தான். நாங்களும், குளத்துல கால் கழுவிட்டு, படி ஏறினோம். படிகள் அதிகம் தான். அதுல ஏறி ஏறி, மூச்சு வாங்குனது தான், மிச்சம். ஆனாலும், எப்படியோ முட்டி மோதி, மேல ஏறி போயிட்டோம். அங்கேயும் மத்த கோயில்கள் மாதிரி, கோபுரத்தோட, கொடிமரத்தோட, தான், அந்த கோயிலும் இருந்துச்சு. ஆனா இந்த கோவில் ஓட சிறப்பு என்ன தெரியுங்களா? வெளிய இருந்து பாக்க சாதாரணமா தெரிஞ்சாலும், உள்ள போய் பாக்கும் போது, ஒரு குகைக்குள்ள, போகனும். அதிக வெளிச்சம் கிடையாது. காத்து வசதி கிடையாது. அந்த காலத்துல, எப்படி சாமி கும்பிட்டு இருப்பாங்களா? அப்படியே தான், நாமளும் கும்பிடனும். இந்த காலத்துல, எல்லா கோயில்களையுமே, அரசாங்கம் புதுப்பிச்சுட்டு வராங்க. ஆனா, அந்த கோவில்கள்ள இருக்குற பழமை மாறாம, எந்த அளவுக்கு பாதுகாக்குறாங்கன்னு கேட்டா? அது ஒரு கேள்வி குறியா தான் இருக்கு. இந்த வள்ளிமலை கோவில், சின்னது தாங்க. இங்க இருக்கிற சிலைகள் எல்லாமே, கல்லால மலைலயே செதுக்குன சிலைகள் தான். பகல்ல போனா, உள்ள இருக்குற மங்களான இருட்டுல, சிரிச்ச முகமாகவும், தம்பதி சமயதராவும் காட்சி அளிக்குற முருகரை, தரிசனம் பண்ணிட்டு வரலாம். வெளிய வந்து, அங்க இருக்குற பாறை மேல உக்காந்தா? அடிக்குற காத்துக்கு, அங்க இருந்து கிளம்ப, மனசே வராது.🥰
கோவ்இலை சுத்தி வர்றதுக்கு, செதுக்கப் பட்ட, படிகள் இருக்கு. அந்த கோவிலை மட்டும் இல்ல, அதை சுத்தி அமஞ்சு இருக்குற குகையையும், சேர்ந்து தான் சுத்தி வரணும். அந்த காலத்துல இருந்த அளவுக்கு, செழுமை இல்லைனாலும், மலைக்கு உண்டான குளிர்ச்சியும், மனசுக்கு தேவை படுர மகிழ்ச்சியும், நிச்சயம் இருக்குங்க.
இந்த நிகழ்வை பகிரும் போது, முருகனை பத்தி, மனசுல உதிச்ச நாலு வரிகள்
" சீரும் சிறப்பும் பெற்ற வஞ்சி அவள், மலை குறத்தி வள்ளி என்பவலாம்.
அவளை போலவே, செழித்து ஓங்கி, அவளின் பெயர் பெற்று நின்றதாம்,
அவள் வசிக்கும், வள்ளிமலை எனும் மலர்சோலை. மன்னவன் அவனை
காண ஏங்கும் மனம் போல, வள்ளிமலையும் ஏங்கியதாம், அவன் பொற்பாதம், பதிய. அவன் வண்ண மயிலும், அங்கே பசியாற. அந்த பெண்மயிலை மனந்தானடி, வடி வேலனும், தன் மனதார. "
உங்களுக்கும் இந்த மாதிரி ஒரு அனுபவம் வேண்டும் என்று நினைத்தால், கண்டிப்பா வள்ளிமலை கோவிலுக்கு சென்று அந்த முருகனையும், வள்ளி தேவியையும், வணங்கிட்டு வாருங்கள். நன்றி வணக்கம் 🙏🙏🙏
