கண் கவர் காடுகள்!
கண் கவர் காடுகள்!
நான் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது, அங்கு சார்ண்ய செய்முறைகள், இருந்தது.
அதில் நானும் பங்கேற்க, புதிய விஷயங்கள் பலவற்றை, கற்றுக் கொண்டேன். தற்காப்பு, முதலுதவி போன்றவை, உட்பட. பயிற்சி தொடங்கிய சில மாதங்களில், சாரண்யர் அனைவருக்கும், பள்ளி சார்பில், ஒரு சுற்றுலா, ஏற்பாடு செய்தனர். அனைவரும் கட்டாயம் வரவேண்டும் என்பது விதிமுறை.
சுற்றுலாவுக்கு பணத்தை கட்டி விட்டு, அந்நாளை ஆவலுடன், எதிர்பார்த்து கொண்டிருந்தோம்.
நாங்கள் அனைவரும். ஒரு வெள்ளிக்கிழமை விடுமுறை வர, அத்துடன் சனி ஞாயிறு சேர்த்து, மூன்று நாட்கள். அதுவும், காட்டு பகுதியில், கேம்ப்பில், தங்க வேண்டும். அதனால் தான், இத்தனை ஆவல். மூன்று நாட்கள், நண்பர்களுடன். அந்த வயதில் மட்டும் அல்ல, எந்த வயதிலும், நண்பர்களுடன் பயணிப்பது, யாருக்கு தான், பிடிக்காது? வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள, அமிர்தி என்னும் காட்டு பகுதிக்கு தான், செல்ல திட்டமிட்டு இருந்தனர். அது என் சொந்த ஊரில் இருக்கும் இடம் என்பதால், முன்பே, பல தடவை அங்கு சென்றிருக்கிறேன். எனினும் இரவில் தங்குவது, புதிய அனுபவம் தான். நாங்கள் எதிர்பார்த்த, அந்த நாளும் வந்தது. அன்று காலை 10 மணி அளவில், நாங்கள் பள்ளியில் இருந்து, புறப்பட்டோம். ஒரு மணி நேர, பயணத்திற்கு பிறகு, அந்த காட்டு பகுதியை, நெருங்கினோம்.
அமிர்தி காட்டை சுற்றி இருந்த கிராமங்களை தாண்டி, அந்த காட்டு பகுதிக்குள், எங்கள் பேருந்து நுழைந்தது. முதலில், அங்கிருந்த முள் காடுகள் தான், எங்களை வரவேற்றன. அவற்றில் இருந்த குரங்கு கூட்டத்தை பார்த்துக் கொண்டே, அந்த இடத்தை கடக்க, அவை எங்களை பசியுடன், "எங்களுக்கு ஏதாவது சாப்பிட தருவீர்களா?" என்பது போல் பாவமாக பார்த்தன. பையில் இருந்த சில பிஸ்கட் பாக்கெட்டுகளை, அவற்றிடம் வீசினோம். அவை, அந்த பாக்கெட்டுகளை, அழகாய் பிடித்துக் கொண்டன. அதான் பின், அங்கே விழும் அருவியில் இருந்து, தன்னை விளக்கிக் கொண்டு ஓடும் ஆற்றை கண்டோம். ஆற்றின் மேல் இருந்த சிறு பாலத்தை கடந்ததும், வன பகுதிக்குள், நுழைந்தோம். சற்று தூரம் சென்றதும், எங்கள் பேருந்து நிற்க, அனைவரும் அதில் இருந்து, இறங்கினோம். எங்கள் பெட்டிகளை எடுத்துக் கொண்டு, ஒதுக்கப் பட்ட, அரசு விருந்தினர், குவாட்டர்ஸுக்கு, சென்றோம். ஆடவர்க்கும், பெண்களுக்கும், சற்று தள்ளி, தனி தனி இடம். விலங்குகள் நடமாடும், வன பகுதி என்பதாலும், அங்கு, குரங்கு மற்றும் பாம்புகளும் அதிகம் என்பதாலும், கூடாரம் அமைக்க, எங்களுக்கு அனுமதி இல்லை.🏕️⛺
பயணித்த களைப்பில், சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு, உணவையும் உண்ட பின், இடத்தை சுற்றி பார்க்க சென்றோம். முதலில் சென்றது, அங்குள்ள விலங்குகள் பூங்கா. அங்கு அதிக மிருகங்கள் இல்லா விட்டாலும், உள்ளவற்றை பார்த்து விட்டு, சற்று சுத்தம் செய்து விட்டு, அங்கிருந்த ஊஞ்சலில், ஆடி கலைத்து, அறைக்கு திரும்பினோம்.
இரவு நேரம், விரகு கட்டைகளை கொண்டு, நெருப்பு மூட்டி, குளிர் காய, சுற்றி நிற்கும் மரங்களை ஆசைய வைத்த, வாடை காற்று, எங்களையும் லேசாய், வருடி சென்றது. இரவில், பூச்சிகளின் ரீங்காரம். தவளைகளின் கிரீச் குரல்.
மற்றும் எங்கோ தூரத்தில், சில மிருகங்களின், உறுமல் சத்தத்துடன், எங்களுக்கு பயமும் ஓட்டிக் கொள்ள, போர்வைக்குள் புதைந்த நான், எப்போது தூங்கினேன்? என்றே தெரியவில்லை. காலை எழுந்ததும், சில பயிற்சிகள் செய்து விட்டு, சாப்பிட்டு, புறப்பட்டோம். அந்த அருவியை தேடி. அது ஒரு நீண்ட, கரடு முரடான பயணமாக இருந்தது.
ஒரு வழியாக, அங்கு சென்று அடைய, எதிர்பார்த்த அளவுக்கு பிரம்மாண்டமாக இல்லா விட்டாலும், ஓர் மிதமான அழகுடன், அந்த நீர் வீழ்ச்சி, இருந்தது. ஒருவர் பின் ஒருவராக, பக்கத்தில் இருந்த பாறை மேல் ஏறி, அருவியின் உச்சிக்கு சென்றோம். அங்கிருந்த இடங்களும், ஆற்றில் ஓடும் நீரையும் பார்க்க, மன நிறைவாக இருந்தது.🥰
அங்கேயே குளித்து விட்டு, சில மணி நேரங்களை செலவழித்து, சில விளையாட்டுகள் விளையாடி, சோர்வாக அங்கிருந்து கிளம்பினோம். மதிய உணவை உண்டு விட்டு, ஓய்வு எடுக்க சென்றோம். மாலை முதல் இரவு வரை, பொக்கிஷ வேட்டை ஆடும் விளையாட்டை விளையாடினோம்.
உண்மையான வன பகுதிக்குள் ஊடுருவி, மறைந்து இருந்த பொக்கிஷங்களை தேடி எடுப்பதும், ஒரு வித திகில் கலந்த, சுவாரஸ்ய அனுபவம் தான். கும் இருட்டில், மரங்களின் நிழல்கள் கூட, அமானுஷ்ய நகள்களாக, தோன்றின. அத்துடன், அன்று இரவும் கழிய, அடுத்த நாள், அனைவருக்கும் விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் அளிக்கப் பட்டது.🎖️🏆
அதை அடுத்து, உணவை முடித்து, ஒரு ஆட்டம் போட்டு விட்டு, அங்கிருந்து கிளம்பி விட்டோம்.🚌🚍
இனி எங்களுக்கும், அந்த காட்டிற்கும், எந்த சம்பந்தமும், இல்லை என்பது போல். உண்மை தானே? அந்த காடு மட்டும் அல்ல, நம் வீடு, நாடு என்று, எதுவும் நமக்கு சொந்தம் இல்லயே? சொல்லவோ இல்லை அப்படி நினைக்கவோ, வருந்தினாலும், அதல்லவா நிதர்சனமான உண்மை???🤔🙏✍️
