கடற்கரை
கடற்கரை
வணக்கம் நண்பர்களே 🙏🙏🙏
கடற்கரையில ஒரு நாள் முழுக்க செலவிடனும்னு, சின்ன வயசுல இருந்தே, எனக்கு ஒரு தீரா ஆசை.🌊
என்ன தான் பல தடவ, கடற்கரைக்கு போயிருந்தாலும், ஒரு மணி நேரத்துக்கு மேல, நாங்க அங்க செலவு செஞ்சதில்ல. அதானோ என்னவோ, எனக்கு அப்படி ஒரு ஆசங்க. அந்த ஆசைய, என் வீட்டுக்காரர் கிட்ட சொன்னேன்.🤵
மனுஷன், என்ன நெனச்சாரோ, தெரியல. மூனே மாசத்துல, மூணு நாள், டூர் பிளான் பண்ணிட்டாரு.🧳
வேற எங்க? எல்லாம், நம்ம ராமேஸ்வரம் தான். மனசு முழுக்க சந்தோஷம், ஒவ்வொரு பார்வையிலும், எதிர்பார்ப்பு. இப்ப வருமா? எப்ப வரும்னு? ஒரு வழியா, ராமேஸ்வரம், பஸ் ஸ்டேண்ட்ல வந்து இறங்கினோம். அங்க இருந்து, ஒரு ஆட்டோ புடிச்சு, போனோம், போனோம், போயிட்டே இருந்தோம். அங்க கொலுத்துற வெயிலுக்கும், எனக்கு இருந்த பசிக்கும், நான் ரொம்ப டென்ஷன் ஆகிட்டேன். ஒரு மனுஷன், எவ்ளோ நேரம் தாங்க, ரெண்டையும், பொறுத்துக்க முடியும்? என் பொறுமைய இழந்து, இன்னும் எவ்ளோ தூரம்ன்னு, கேட்டேன்?🤨😠
அப்ப அந்த ஆட்டோ, ஒரு மேட்டை, கஷ்ட பட்டு, ஏற முடியாம ஏருச்சு.🛺
அதை பாரத்தவரு, இதோ, இந்த மேடு ஏறி இரங்கினதும், நாம தங்க போற ஹோட்டல், வந்துடும்னு சொன்னாரு. அந்த மேடு இரங்குனதும், என் முன்னாடி, முதல்ல வந்தது, கண்ணுக்கு குளு குளுன்னு இருக்குற, பறந்து விரிஞ்ச கடல். அதுவே, ஒரு அதிர்ச்சி தான். அதுக்கு மேல ஒரு இன்ப அதிர்ச்சியா, அந்த கடல் ஓரம் இருந்த ஹோட்டல்ல, கடலை பார்த்த மாதிரியே, பெரிய ஜன்னல் வச்ச, ரூம். நைட், பகலுன்னு, எந்நேரமும், பார்த்து ரசிச்சு கிட்டே, இருக்கலாம்.
அங்க போயி, குளிச்சு, சாப்டு, ஓய்வு எடுத்துட்டு, சாயங்காலம் அந்த கடலோரம், காத்தார கொஞ்ச தூரம், நடந்து போயிட்டு வந்தோம். அடுத்த நாள், எங்க ஹோட்டலுக்கு பக்கத்துல, இருந்த வாட்டர் ஸ்போர்ட்ஸ், நடக்குற இடத்துக்கு போனோம். போட், ஃபக், டியூப்ன்னு, நிறைய இருந்தது. அதை எல்லாம் விட, எனக்கு பிடிச்சது என்னன்னா?
அங்க, ஒரு ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு, கடலுக்குள்ள நடந்து போகலாம். என்ன தான் கதையா இருந்தாலும், இப்படியான்னு? நீங்க நினைக்கிறது, எனக்கு கேக்குது. 🧏
ஆனா, நான் கதை சொல்லலங்க.🙅
நிஜமா தான் சொல்றேன். அந்த பகுதில, ஆழமும் கம்மி, அலைகளும் கம்மி. கால் முட்டி அளவுக்கு தாங்க தண்ணி. அது ஒரு வித்தியாசமான, அனுபவம் தாங்க. ஒரு நாள் முழுக்க, அங்கேயே, இருந்துட்டோம். அடுத்த நாள் காலைல, கோவில், தீர்த்தம், எல்லாம் முடிச்சிட்டு, கிளம்பினோம்.
எங்கன்னு கேக்குறீங்களா? நம்ம தனுஷ்கோடி. அங்க இருந்து தான், இராமாயணத்தில் சொல்லப் படுற, இலங்கை வரைக்கும் இருந்த, ராமர் பாலம், துடங்குது. அந்த இடத்தை நெருங்கும் போதே, ஈரக் காத்து, என்னகளை, சிலிர்க்க வச்சது. அந்த இடம், எவ்ளோ அழ்குனு, வர்ணிக்க, வார்த்தையே இல்ல. ரெண்டு பக்கமும், கடல். அதுக்கு நடுவுல, நேரான, தார் சாலை. ஒரு பக்கம், அலையே இல்லாம, அமைதியா இருக்குற கடல். இன்னொரு பக்கம், வரிசையா அசைந்து ஆடிட்டு நிக்கிற, சவுக்கு மரங்களுக்கு இடையில, தெரியுர, அலை ஆடும் கடல். ரெண்டு பக்கமும் பார்க்க பார்க்க, ஒரே ஆச்சர்யம். கடல் ஒண்ணா இருந்தாலும், கரை ரெண்டுன்னு தான் நினைக்க தோணுச்சு. இந்த காதல் மாதிரி. காதல் ஒண்ணா இருந்தாலும், மனசு ரெண்டு தானே? ஒருத்தர் சாந்தம்.
இன்னொருத்தர், சீற்றம். அங்க தாங்க, ஒரு நாள் முழுக்க, கடல்ல நின்னு, ரசிச்சு, சாந்தோஷத்துல குதிச்சு விலையாடுனேன். ஓடி வந்து, காலை தொடுற அலை, கண்ணுக்கு எட்டுற தூரம் வரைக்கும், சுத்தி நிக்குர கடல், இதை எல்லாம் பார்க்கும் போது, என் மனசுக்கு, தோனுனது,
"ஆடி வரும் அலை கடலே,
உன்னை கண் எதிர் காண்கையில்,
நீ ஓடி வந்து, என் பாதத்தை முத்தம் இடுகையில், என் மனதில், ஓயாமல் அடிக்கும், எண்ண அலைகளும், ஓய்ந்து, போனதெங்கோ?
நன்றி, வணக்கம்🌊🙏🌊
