என்னுள், விழுந்த மழையே!
என்னுள், விழுந்த மழையே!
பிரகாசமான காலை பொழுதுடன், கதிரவன் உதிக்க, வீடே எழுந்தது.☀️
குழந்தையாய் இருந்த, என்னை தவிர. நான் மட்டும், கண்மூடி உறங்க, மற்றவர்கள் பரபரப்பாக, அவர்களின் பணிகளை, செய்தனர்.
திடீரென்று கரு மேகங்கள் சூழ, இடியுடன் கூடிய மழை பெய்தது.⛈️
அலறி அழுதேன், நான். அம்மா ஓடி வந்து, திறந்து கிடந்த, ஜன்னல் கதவுகளை, வேகமாக அடைத்தாள்.
இருந்தும், என் முகத்திலேயே, பச், பச்சென்று அடிப்பது போல், அந்த கண்ணாடியின் மேல் வந்து விழுந்த, முதல் மழையை, வியப்புடன், பார்த்து, ரசித்தேன், நான். 😯😲🫣😁
பருவங்கள் மாறி வர, வருடங்கள் ஓடி விட, நானும் வளர்ந்து, ஆடி, பாடி, விளையாடினேன். என் அரண்மனை, மணல் வீட்டை, உன் பெரும், துளிகளால் நனைத்து, தரை மட்டம் ஆக்கினாய், நீ. வருத்தப் பட்டு, அழுத என்னை தேற்ற, காகிதக் கப்பல், செய்து கொடுத்தார், அப்பா. ⛵⛵⛵
ஒன்றல்ல, ஒரு டஜன் கப்பல் செய்து, அதே மழை வெள்ளத்தில், மிதக்க விட்டு, அது மூழ்காமல், அழகாய் அசைந்து சென்றதை பார்த்து, உன்னை வென்றதாக, ஏளனமாக சிரித்தேன். மழலையில் இருந்து, பள்ளி பருவம் வந்ததும், ஏனோ?⁉️
தினமும், நீ வர காத்திருந்தேன்.🧏🧏
பள்ளிக்கு, விடுமுறை அளிக்க.🤷🤷
ஆனால் நீயோ, அப்போதெல்லாம் வராமல், என்னை மோசம் செய்து, பள்ளி முடித்து வரும் போது, மெல்ல வந்து, என்னை நனைத்து, நாசம் செய்தாய். காய்ச்சலில், படுக்க வைத்தாய். இலையுதிர் காலத்தில் மறைந்து, வசந்த காலத்தில், கால் பதிக்கும், வண்ண மலர்களை போல, பூத்து குலுங்கினேன் நான்.
என் கல்லூரி பருவத்தில். கண்ணில் காதலோடு, என்னை தீண்ட வந்தாயோ? என் செல்ல மழையே!
என்று, உன்னை கொஞ்சி, விளையாடினேன். உன்னில் தெப்பமாய், நனைந்த போதும்.🤦🌧️
அன்று கசந்த நீயும், இன்று இனித்தது ஏனோ? மணம் முடித்த நான், என் மணாலனின் கை பிடித்தும், உன்னுடன், நடந்தேன். பல நாட்கள் என் பணி முடித்து நான் வருகையில், என்னை வரவேற்க, வீதியில் துடங்கி, வீடு வரை, உன் அன்பை, துளிகளாய், பொழிந்தாய்.
இப்படி உன் அன்பில் நனைந்து, திளைத்த நான், இன்றோ, பிழைக்க வந்தேன், ஓர் பாலை வனத்தில்.🥵🥵
இங்கே, சுட்டெரிக்கும் சூரியன் உண்டு. போர்வைக்குள் சுருங்க செய்யும் குளிரும் உண்டு. அத்துடன் உன்னை எண்ணி ஏங்கும், என் மனமும் உண்டு. என்னுள் விழுந்த மழையே, நீ உண்மையில், ஓர் அரிய, துணையே !!! 👭👩❤️👩👯💐💐💐
