STORYMIRROR

Sweet Nivi

Others

3  

Sweet Nivi

Others

பிளாக்கி 🐶🐩🐕

பிளாக்கி 🐶🐩🐕

2 mins
0

நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என் பெரியப்பா வீட்டிற்க்கு, அடிக்கடி, சென்று வருவேன். வார கடைசி, விடுமுறையில், முழு நேரமும், அங்கு தான், இருப்பேன்.👧


அவருக்கு, ஆறு ஆண் குழந்தைகள்.


பெண் பிள்ளைகள், கிடையாது.👧


அதனாலோ என்னவோ, தம்பி மகளான என் மேல், தனி பாசம்.🥰


அவர் காவல் துறையில், பணி புரிந்தார். அதுவும், நான் ஆர்வமாக, அவரின் வீட்டுக்கு செல்ல, ஒரு காரணம். அவரின் லட்டி, தொப்பி, விசில் என்று, அனைத்தையும், போட்டு பார்த்து, விளையாடுவதில், எனக்கு பெரும் மகிழ்ச்சி. வாரம் தவறாமல், பாய் கடை பிரியாணி, வாங்கி கொடுப்பார். முதலில், அமைதியாக இருந்த பெரியம்மா கூட, போக போக, பிரச்சனை செய்ய, ஆரம்பித்தார். அவருக்கு, ஒரே ஒரு நாள், நேர்த்தியாக, பதில் அளித்தார்


"இப்ப எதுக்கு டி, இப்படி லோட லொடன்னு பேசிட்டு இருக்க? உன் பசங்க தான், நல்லா தின்னுட்டு, தடி மாடு மாதிரி, ஊரை சுத்திட்டு இருக்கானுங்களே? இந்த பிள்ளைய பாரு. ஒரு சாதாரண குச்சி கூட, இவளை விட, குண்டா இருக்கும் போல. வளர்ற பிள்ளை. அதுவும் பொட்டை பிள்ளை. நாம தானே, வளக்கணும்? இந்த சின்ன பிள்ளைய போய், அந்த எறும மாடுகளுக்கு, போட்டியா பாக்குற?"


என்று திட்ட, அத்துடன், அன்றில் இருந்து, பெரியம்மா மௌன விரதம் தான். இப்படியாக, ஒரு நாள், நான் அங்கு செல்ல, அவர் பெரியம்மா மற்றும், அண்ணன் ஒருவனை, திட்டி கொண்டிருந்தார். அவர்களின் அருகே, ஒரு போமேரனியன் நாய் குட்டி, வாலை ஆட்டி கொண்டு, உட்கார்ந்து, இருந்தது. அதன் வருகைக்கு கிடைத்தது தான், அத்தனை அர்ச்சனைகள். முதலில் முடியாது என்றாலும், அதன் பிறகு, ஒரு விதமாக, ஒப்புக் கொண்டார்.🐕


அதை பார்க்கும் போதெல்லாம், திட்டிக் கொண்டே, இருந்தார். 🐕🐶


ஆனால் அதுவும் சளைக்காமல், அவர் எவ்வளவு திட்டினாலும், அவரின் காலையே சுற்றி வந்தது.


போக போக, அதை பிடித்து போக, அதற்கு தேவையான சோப்பு, சீப்பு, ஷாம்பூ, என்று, எல்லாவற்றையும், வாங்கி வந்தார். அவரே, குளிக்கவும் வைத்தார். அப்படியே, அதற்கு பிளாக்கி, என்ற பெயரையும் வைத்தார். அதுவும் அவர் மேல், அதிக அன்பை கொண்டிருந்தது.🐶


இரவு, அவர் வீடு திரும்பும் வரை, உணவு கூட, உண்பதில்லை. என் பெரியம்மாவை விட, அதுவே அவர் மீது, அதிக அன்பும், அக்கறையும், வைத்திருந்தது. இப்போது நாங்கள் மூவர் தான், பிரியாணி பார்ட்னர்ஸ்.


பிரியாணி ரைஸ், பெரியப்பாவுக்கு, பீஸ், எனக்கு, எலும்பெல்லாம், பிளாக்கிக்கு. மற்றவர்களுக்கு மிச்சமானது, வாழை இலை, மட்டுமே


பல அழகான தருணங்களுடன், நாட்கள் நகர, திடீரென்று ஒரு நாள், என் பெரியப்பா இறந்து போக, பிளாக்கியும், அவரை எண்ணி, ஏங்கி ஏங்கி, இளைத்து போனான்.


அவனுக்கு பிடித்த பிரியாணியை வாங்கி வந்தாலும், அதை தொடக் கூட இல்லை. தொடவில்லை. 🍲🍱


அவனின் இக் கவலைக்கிடமான நிலையை காண சகிக்காமல், நாங்கள் தவிக்க, என் அத்தை முன் வந்து, "அவனை என்கிட்ட குடுத்திருங்க. என் அண்ணன் நியாபகமாய், நான் கொண்டு போய், பொன்னு மாதிரி, பாத்துக்கிறேன்.🐶


இங்கேயே இருந்தா, என் அண்ணன் நெனப்புல, இப்படி தான், இருப்பான்.


என்று சொல்ல, அவனை கொடுத்து அனுப்பினார்கள். சில மாதங்கள் கழித்து, அத்தை வீட்டுக்கு, சென்றிருந்தேன். அங்கு, அவன் அடையாளம் தெரியாத அளவுக்கு, கொழுக் முழுக்கென்று, வளர்ந்து இருந்தான். "என்னடா இது? ஏங்கி போயிருந்த பிளாக்கி, இப்போ வீங்கி போயிருக்கானே?" என்று, நானே, ஆச்சர்யம் அடைந்தேன்.😳👌


ஓரிரு வருடங்கள், ஓடின. அத்தை என் வீட்டிற்க்கு வந்த போது, "அத்தை, பிளாக்கி எப்படி இருக்கான்?" என்று, நான் கேட்க, "அதை ஏம்மா கேக்குற? என் அண்ணன் நியாபகமா, ஆசை ஆசையா வளர்த்தேன். எங்க போனாலும், என் கூடவே ஒடியாருவான். ரெண்டு நாளைக்கு முன்னாடி, கிணத்துல விழுந்து, கத்திட்டு இருந்திருக்கான். அவனை யாரும், கவனிக்கல. அப்படியே தண்ணில மூழ்கி, செத்துறுச்சு மா, அந்த நாய். நான் ஊருக்கு போயிருந்த நேரம், பார்த்து அப்படி ஆகிருச்சு." என்று, என்னிடம் வருத்தப் பட்டார். அவன் இறந்து, பல வருடங்கள், ஆனாலும், இன்றும் எங்களின் நினைவுகளில், வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறான், எங்கள் பிளாக்கி.🐕🐩🐶. 



Rate this content
Log in