STORYMIRROR

Sweet Nivi

Thriller

4  

Sweet Nivi

Thriller

சிநேகிதியே!

சிநேகிதியே!

7 mins
24

நான் கல்லூரியில் படித்து கொண்டிருந்த, வசந்த காலம், அது.


படிப்பு, விளையாட்டு, காதல், நட்பு, குறும்பு என்று, எல்லாம் இருந்தது, என் வாழ்வில். அதில் அழையா விருந்தினராக வந்தாள், அவள்.💃 


நான் கொஞ்சம் அமைதியான பொண்ணுங்க. ஒரு படத்துல, அப்பா, மகன் கிட்ட சொல்லுவாறே, இருக்குற இடம் தெரியாம, இருந்துட்டு போயிடனும் டா மகனேன்னு, அதே மாதிரி இருந்தவ.


ஹாஸ்டல்ல தங்கி, படிச்சிட்டு இருந்தேன். நல்லா படிப்பேன்.📖📝


எனக்குன்னு, ஒரு காதலன். அவன் பேர், இந்திரஜித். நான், ஆர்த்தி.👩‍❤️‍👨


எங்க ரெண்டு பேருக்கும், ஸ்கூல்ல இருந்தே பழக்கம். அவன் என்னை, ஆரூ, நான் அவனை, இந்தர்ன்னும் செல்லமா கூபட்டுக்குவோம்.🥰😘


அவனும், வெளியூர்ல தங்கி படிச்சிட்டு, இருந்தான். மாசத்துக்கு ஒரு முறை பார்த்துப்போம். தினமும் ஃபோன்ல பேசுவோம். லாங் டிஸ்டன்ஸ் லவ் தான். உண்மையா!


நல்லா தான் போயிட்டு இருந்தது.🙂


திடீர்னு, ரெண்டு, மூணு, நாளா, அவன் என்கிட்ட, சரியா பேசல.🗣️😏


என்னன்னு? கேட்டேன். "ஒண்ணும் இல்ல. நீ சப்டியா? சரி தூங்கு."ன்னு சொல்லிட்டு, ஃபோனை வாச்சிடுவான். நானும், பொறுத்து பொறுத்து, பார்த்தேன். ஒழுங்கா, பேசுற மாதிரி, தெரியல. அவன் கவனம், வேற யார் பக்கமாவது திரும்பிடிச்சோ? சந்தேகப் பட்டேன்.


அப்படி எதுவும் இல்ல. என் இந்தர், தங்கம். கடைசியா சண்டையே போட்டேன். "உனக்கு என்னதான் டா பிரச்சனை? நான் ஏதாவது தப்பு செஞ்சுட்டேனா? வீட்ல ஏதாவது பிரச்சனையா?" இப்படி எனக்கு தெரிஞ்ச, எல்லாத்தையும், கேட்டேன்.


இல்லன்னு ஒரே வார்த்தைல சொல்லிட்டான். "அப்புறம், என்ன?❓


சொன்னா தானே தெரியும்? இப்படி அமைதியா இருந்து, என்னை கொலைகாரி ஆக்காத." என்று, சொன்னேன். ஒரு வழியா சொல்ல ஆரம்பிச்சான். வாங்க, எல்லாரும், சேர்ந்தே, தெரிஞ்சிக்குவோம்.👥🤦


"எங்க காலேஜ்ல, ரம்யான்னு ஒரு பொண்ணு படிச்சா. என் வகுப்பு தான். ரொம்ப நல்ல பொண்ணு."💃


அவன் சொன்னதும், "பொதுவா, நானும் அப்படி தான்னு, எல்லாரும் சொல்லுவாங்க. ஆனா, உன் கண்ணுக்கு மட்டும் தான், பதற்காலியா தெரியுறேன் போல."


நான் சொல்ல, "ஆரூ" என்றான். 😜


"சாரி, சாரி. சொல்லு"ன்னு, சொன்னேன். அவன், "சாதாரண குடும்பத்தை சேர்ந்தவ தான். நல்லா படிப்பா. எல்லார் கிட்டயும், நல்லா பழகுவா. ரெண்டு வாரமா, வகுப்புக்கு வரல. போன வாரம், அவ இறந்துட்டான்னு, திடீர், செய்தி.😳😲


தற்கொலை. நாங்க எல்லாரும், கிளம்பி போனோம். ஆனா, அவங்க வீட்டுக்கு போனப்ப தான், அதிர்ச்சி."


"ஏன்? அப்படி என்ன நடந்தது?" நான் கேட்டேன். "அது, தற்கொலை இல்ல, கொலைன்னு தான் தோணுச்சு."😵


இந்தர் சொன்னதும், "எனக்கு குலையே நடுங்கிருச்சு. என்னடா சொல்ற? கொலையா?"ன்னு திரும்ப கேட்டேன். "ஆமா, ஆரூ. அந்த பொண்ண, வீட்ல ஒரு மூளைல, வெறும் தரைல, கிழிஞ்ச துணியோட, கை கால் விரிஞ்சு, அங்கங்கே இரத்த காயம், பெல்ட்ல அடிச்ச மாதிரியும், சூடு போட்ட மாதிரியும், தழும்பு. கண்ணெல்லாம் பிதுங்கி, முகமெல்லாம் வீங்கி, கரிஞ்ச உதடு, கலஞ்ச தலை முடினு, பாக்கவே அலங்கோலமா இருந்தது அவ உடம்பு. அவ அப்பா, குடிச்சிட்டு எங்கேயோ விழுந்து கெடக்க, அவ அம்மா, அழுவுர மாதிரி நடிச்சு கிட்டு இருக்க, அவ தம்பி மட்டும், அவ பக்கத்துல உக்காந்து, தேம்பி அழுது கிட்டு இருந்தான்." அவன் சொன்னதும், "அடக் கடவுளே! எந்த பொண்ணுக்கும், இப்படி ஒரு நிலமை வரக் கூடாது." நானும், வருத்தப் பட்டேன். "அவ வீட்ல யாரும், அவளை சரியா நடத்துறது கிடையாது. அவ அம்மாவுக்கும், பல பேருக்கும், தொடர்பு இருக்குன்னு சொல்றாங்க. அந்த ஊரே, அவளையும், தப்பா தான் பேசுச்சு.🗣️ 


அவளையும், அதே மாதிரி, செய்ய சொல்லி, தொல்லை குடுத்து இருக்காங்க. அதுக்கு ஒத்துக்காம, அவ சண்டை போட்டு, இருந்திருக்கா


அன்னைக்கு ராத்திரி, பிரச்சனை பெருசாக, அவளை அடிச்சு, கைய காலை கட்டி, வாய பொத்தி, கரெண்ட் ஷாக் வச்சிருக்காங்க."😱


அதை கேட்டதும், "போதும் இந்தர்.🤚


இதுக்கு மேல, என்னால கேக்க முடியாது." என்று, சொன்னேன்.😱🤬 


அவன் நிறுத்த வில்லை. "நாங்க தான் அவ உடலை சை செஞ்சு, துணி எல்லாம் வாங்கி குடுத்து, பெஞ்ச், வெள்ளை துணினு எல்லாம், ஏற்ப்பாடு செஞ்சோம்.😳🤦


இதெல்லாம், அப்ப எங்களுக்கு தெரியாது. கொஞ்ச நாள் கழிச்சு, அவ தம்பியையும், சித்தப்பாவையும், பார்த்தோம். "பிள்ளைங்கல, நானே வளத்துக்குறேன். என்கிட்ட விட்ருங்கன்னு, சொன்னேன் தம்பி.


நான் ஊர்ல இல்லாத நேரம் பார்த்து, அந்த பாவிங்க, இப்படி அநியாயமா, கொண்ணுட்டாங்களே" என்று, தலையில் அடித்துக்கொண்டு அழுதார். நாங்களும், கண் கலங்கிட்டோம்." அவன் சொல்லி முடித்ததும், என் விழிகளும், குலமானது. அவளின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க, அந்த காலேஜ் ஏ, ஒன்று கூடியது. என்று இந்தர் சொல்ல, "நம்ம கைல என்னடா இருக்கு? எல்லாம், விதி." என்று, நான் சொல்ல, " விதியாவே இருந்தாலும், அவளோட தப்பு, என்ன இருக்கு?" என்று, அவன் என்ன கேட்ட கேள்விக்கு, என்னிடம் பதில் இல்லை. ஒரு வழியா எல்லாரும் சேர்ந்து போராடி கொலைதான், என்பதை நிரூபிச்சு, அவங்களுக்கும் தண்டனை வாங்கி கொடுத்தாங்க.


"என்னதான், கலகலன்னு எல்லார் கூடவும், நான் பேசினாலும், நம்மள பத்தி, யார்கிட்டேயும், சொன்னதில்ல


ஆனா, அவ கண்டு பிடிச்சிட்டா. அவ கிட்ட, உன்னை பத்தி சொன்னேன்.


"பரவால்ல, டா. ரொம்ப நல்ல பொண்ணா இருக்கா. அவளை மிஸ் பண்ணிடாதேன்னு, சொன்னா.👥🗣️


ஆனா, நிஜமாகவே ரொம்ப நல்ல பொண்ணு தெரியுமா?" என்றான்.🤦


"சரிடா, புரியுது." என்றேன். "அது இல்லப்பா. எனக்கு தினமும், ஸ்னாக்ஸ் எல்லாம், கொண்டு வருவா, தெரியுமா?" என்றான். நான் தளைல அடிச்சிகிட்டு, "அட ச்சே. தீனி பண்டாரம். திங்கறதிலேயே இரு.🥪


நான் கூட, நீ மனசு கஷ்டத்துல பேசுறேன்னு பார்த்தா, உனக்கு ஸ்நாக்ஸ் போச்சுன்னு, தான் கவலை. போய் வேற வேலை இருந்தா பாருடா." என்று, திட்டினேன்


"உன்கிட்ட சொன்னதுக்கு அப்புறம் தான், எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கு. ஏதோ பெரிய பாரம் குறைஞ்ச மாதிரி இருக்கு. நான் சொன்ன எல்லாத்தையும் பொறுமையா கேட்டதுக்கு, தேங்க்ஸ்.


என்றான். "அடுத்த ஜென்மத்துல, ஒரு நல்ல குடும்பத்தில பிறந்து, நல்ல வாழ்க்கைய, அவ வாழத்தான் போறா." என்று, நான் சொன்னேன்.


அவன் பாரம் குறைந்து விட்டது, அது என் மீது ஏறியது, என்று, எனக்கு தெரியவில்லை. எங்க பார்த்தாலும், எவ்வளவு பேர் கூட இருந்தாலும், தனியா இருந்தாலும், யாரோ என்னை கூப்பிடற மாதிரியே, இருக்கும். அடிக்கடி, எங்கேயாவது ஜன்னல், இல்ல கதவுகிட்ட, யாரோ நிக்கிற மாதிரி இருக்கும். சில நேரம் தூங்கும் போது, யாரோ என் படுக்கைல, கால் கிட்ட உக்காந்து,

என்னை பாக்குற மாதிரி இருக்கும். 


நான் முதல்ல இந்த விஷயத்தை அதிகமா யோசிக்கிறதுனால தான், இப்படி நடக்குதுன்னு நினைச்சேன்.


ஆனா, போக போக, இந்த பிரச்சனை பெருசாச்சு. இதனால சரியா சாப்பிடாம, தூங்காம, படிக்க முடியாம, ரொம்ப கஷ்டப்பட்டேன்.😱


ஒரு நாள் ராத்திரி, அசந்து தூங்கிட்டு, இருக்கும் போது, என்னை சுத்தி, ஒரே இருட்டு.🌑🌘👽


கொஞ்ச தூரத்துல, ஒரு எரி மேடை. அங்க ஏ எரிஞ்சிகிட்டு இருந்தது.


அங்க இருந்த படிகட்டுல, ஒரு பொண்ணு, தலைவிரி கோலத்தோட குத்தங்கால் வச்சு, முகத்தை அதுக்குள்ள மூடிகிட்டு, சத்தமா அழுதுகிட்டு, இருந்தா. பக்கத்துல இருக்குற, முள்ளு காட்டுல இருந்து, நான், பார்த்துட்டு இருந்தேன்.👀👁️😭


அவளை பார்க்க, பாவமாவும், பாயமாவும், இருந்துச்சு. தலையை தூக்கி பார்க்காமலே, என்கிட்ட பேசுனா. எனக்கு நடந்தது, நியாயமா ஆரு? நான் என்ன தப்பு செஞ்சேன்?


நானும், நல்லா வாழ தானே ஆசை பட்டேன்? எனக்கு இப்படி ஒரு முடிவா


நீ சொல்லு, என் இடத்துல இருந்தா, உன்னால இதை ஏத்துக்க முடியுமா?


அவள் கேட்டதும், அது ரம்யா. என்று, எனக்கு புரிந்தது. என் பயத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, அவளை நோக்கி நடந்தேன். 10 அடி தூரத்தில், நின்று விட்டேன். "அழாத ரம்யா.😭😟


உனக்கு நடந்தது, அநியாயம் தான்.


அதுக்கு இங்கே, உட்கார்ந்து அழரது தான் தீர்வா? இங்க தனியா என்ன பண்ணுவ? என் கூட வா, போலாம்.


அவளை அழைத்தேன். "நிஜமா தான் சொல்றியா? இப்ப என்னால, எங்கேயும் வர, முடியாது. நான் இங்கேயே, தான் இருக்கணும்."🙍🙅


என்று சொன்னாள். "அப்போ நீ, என்னை கூப்பிட்டதுக்கு, என்ன காரணம்? இத்தனை நாள், யாரோ என்னை கூப்பிட்ட மாதிரி, இருந்தது.


நீ தான், என்னை கூப்பிட்டியா?ன்னு, கேட்டேன். "ஆமா" என்றாள். "ஏன் ரம்யா? உனக்கு என்கிட்ட இருந்து, என்ன வேணும்? என்கிட்ட என்ன சொல்லணும்னு?" கேட்டேன். அவ என்னை, பார்த்தா. பயத்துல "ஆ.....ஆ என்று, கத்தினேன். அந்த அளவுக்கு, கோரமா இருந்தது, அவளோட முகம்


அழுது கொண்டே, "பயப்படாதே ஆரு. நான் இப்படி இல்ல. என்னை இப்படி, பண்ணிட்டாங்க." என்றாள்.


இந்தர், அவளை கடைசியாக பார்த்தது போலவே இருந்தது, அவளின் தோற்றம். எனக்கு திக் என்று, இருந்தது. "நான் எப்படி இருந்தேன், தெரியுமா?" என்னை கேட்டாள். நானும் மனுஷி தானே?


பேய பார்த்தா, பயம் வரத் தானே செய்யும்?" அவளை கேட்டேன். 😱😰


"புரியுது." ஒரே சொடக்கு. அதுல, அவளோட பழைய தோற்றம், வந்தது


அவ்வளவு அழகான முகம். அதிலும், அந்த சிரிப்பை, ஒரு முறை பார்த்தால், எளிதில் யாரும், மறக்க மாட்டார்கள். நான், வாயை பிளந்து, நின்றேன். உனக்கா இந்த நிலைமை


உன்னையா, இப்படி பண்ணிட்டாங்க


அவங்க எல்லாரும், மனுஷங்களே கிடையாது. அவங்களுக்கு தான், வாழ்றதுக்கு, எந்த தகுதியும், இல்ல.


கவலைப்படாத ரம்யா. உனக்கு நிச்சயம், நல்லது நடக்கும்." என்றேன். "அதுக்கு தான், உன்னை கூப்பிட்டு இருக்கேன்." என்றாள். "நீ என்ன சொல்ற ரம்யா? எனக்கு புரியல. நான், உனக்கு என்ன பண்ண முடியும்?" என்று, கேட்டேன்.


"உன்னை பத்தி, கேட்டதுல இருந்தே, உன்னை நேர்ல பாக்கணும்னு, நெனச்சிருக்கேன். ஆனா,  போட்டோல தான், பார்த்தேன்.📷🖼️


"ஏன்னு தெரியல. எனக்கு உன்னை பிடிச்சு இருந்தது. நீயும், என்னை பத்தி தெரிஞ்ச நாளிலிருந்து, என்னை நெனச்சு வருத்தப் பட்டு இருக்க. நாம பார்க்காமலே, ரெண்டு பேருக்கும், ஒரு புரிதல். அதான், உன்னை தேடி, வர வச்சது. எனக்கு நீ, நிஜமாகவே உதவி பண்ண நினைக்கிறாயா?" கேட்டாள், ரம்யா.


என்னால முடிஞ்சா, நான் கண்டிப்பா செய்றேன்னு" சொன்னேன். "நல்லா யோசிச்சு தான், சொல்றியா?" ன்னு, கேட்டாள். "நிஜமா தான், சொல்றேன்


உறுதியாக, சொன்னேன். "நான், உனக்கே மகளா, வந்து பொறந்தா, நீங்க ரெண்டு பேரும், எனக்கு ஒரு நல்ல வாழ்க்கைய தருவீங்களா?😳


 கேட்டாள், ரம்யா. நான் ஆடிப் போனேன். என்னால பதில் சொல்ல முடியல. கண் முழிச்சு பார்த்தா, கனவு. யார்கிட்டயும் சொல்ல முடியல. பேச வார்த்தையும், வரல.😱


இத பத்தி, தோழி கிட்ட சொன்னா, "போ டி பைத்தியம்." என்று, சொன்னாள். அம்மா கிட்ட சொன்னா, "அந்த ஆத்மா சாந்தி அடைய, கடவுளை வேண்டுன்னு," சொன்னாங்க. இந்தர் கிட்ட சொன்னா, "நல்ல மனநல டாக்டரா பாக்களாமான்னு? நக்கல் பண்றான்.


"அடேய்! நீ எல்லாம் மனுஷனே இல்ல தெரியுமா? வெளில போற ஓநானை தூக்கி, என்மேல போட்டுட்டு, இப்ப என்னை கிருக்கின்னு சொல்றியா?"ன்னு கேட்டேன். அவனும், "சரி. அடுத்த தடவ, அவ உன்னை கூப்பிட்டா, என்கிட்ட பேச சொல்லுன்னு" சொன்னான். "டேய்! அதென்ன ஆட்டோவா? இல்ல, கால் டாக்ஸியா?


இங்க போ, அங்க போன்னு, வழி சொல்றதுக்கு. பேய் டா! அசிங்கமா திட்டுறதுக்குள்ள, ஃபோனை வச்சிட்டு, ஓடிடு"ன்னு, சொன்னா, "என்ன இருந்தாலும், அவ என் உண்மையான ஃப்ரெண்ட் டி."👥👍


என்றான், பெருமையாக. "ஏன்டா எருமைனு?" கேட்டேன். அவன் சொன்னான் பாருங்க, ஒரு காரணத்தை, நான் அப்படியே, ஷாக் ஆகிட்டேன். "என்னை மாதிரியே யோசிச்சு, குழந்தை விஷயத்தை சொல்லி இருக்கா பாரேன்! எனக்கு ஓகே தான். நீ கொஞ்சம் மனசு வச்சா...." என்றான், விளையாட்டாக.


"இந்த ரணகளத்துலயும், உனக்கு ஒரு குதூகலம் கேக்குதா? ஃபோன வச்சிட்டு, திரும்பி பாக்காம ஓடி போயிடு." மிரட்டி விட்டு, வைத்தேன்.


யாருமே என்னை புறிஞ்சிக்கல. 🤯


என் பயத்தை, நானே சந்திக்க, முடிவு பண்ணிட்டேன். ஒரு நாள், சாமி படத்துக்கு முன்னாடி உக்காந்தா இருந்தப்ப, கதவு ஓரத்துல இருந்து, "ஆரு, ஆருன்னு," ரம்யா என்னை கூப்டது, கேட்டச்சு. அதுக்கு மேலயும் தாங்க முடியாம, "ஐயோ, ரம்யா! ஏன் என்னை இப்படி தொரத்துற? நீ கேட்டத, என்னால இல்லன்னும், சரின்னு சொல்ல முடியல." என்றேன்


"எனக்கு, அதிக நேரம் இல்ல. நீ உன் பதிலை சொல்லிட்டா, உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன். ஆனா உன்னை தவிர வேற யார் கிட்டயும், இத நான் கேக்க மாட்டேன்." என்று சொன்னாள், ரம்யா. "ஏன்? உனக்கும் என்னை பார்த்தா, பைத்தியம் மாதிரி, தெரியுதா?" என்று, கேட்டேன்.


"என்னோட சினேகிதியா, தெரியுற.


நீ ரொம்ப நல்லவ ஆரு. உன் கூட இருக்கணும்னு ஆசை பட்டு தான், அப்படி கேட்டேன். நீ அதை தொந்தரவா நெனச்சா...." அவள் சொல்லி முடிப்பதற்குள், என்னையே அறியாமல், அந்த வார்த்தைகள் வந்தன, "சாமி சாட்சியா வச்சு, சொல்றேன். கேக்குறது, முடியும்னா, நான் அதை ஏத்துக்குறேன்." என்று, சொல்லி விட்டேன். அவளும் நிம்மதியாக கிளம்பி விட்டாள்.💃💃


அதன் பின், அந்த குரல், கேட்கவே இல்லை. இந்த சம்பவம் நடந்து, 12 வருடங்கள், ஆகிறது. பல தடவை, அவளை பற்றி நினைத்து இருக்கிறேன். இப்பொழுது உன்னிப்பாக, நினைவு இருக்க காரணம், திருமணம் ஆகி, ஐந்து வருடங்கள் கழித்து, சில சிக்கல்களை தாண்டி, பிறந்த என் அழகிய பெண் குழந்தை. அவளின் முகத்தை பார்க்கும் போதெல்லாம், என் சினேகிதி, ரம்யாவின் முகமும், சிரிப்பும் தான், நினைவுக்கு வருகிறது. நான் நம்பி விட்டேன், ரம்யா சொன்னது, உண்மை என்று.


நீங்கள்?????     நன்றி வணக்கம்🙏


Rate this content
Log in

Similar tamil story from Thriller