STORYMIRROR

Shakthi Shri K B

Classics Inspirational Children

4  

Shakthi Shri K B

Classics Inspirational Children

உறவுகளில் உயர்ந்த உறவு

உறவுகளில் உயர்ந்த உறவு

1 min
273

பலரின் வாழ்வின் மறக்க முடியாத நாட்கள் கல்லூரி நாட்கள்,

நட்பின் பட்டாளம் கூடி பல மகிழ்ச்சி நினைவுகள் மனதினுள் அடைக்கப்பட்ட காலம்,

வாழ்க்கையின் லட்சிம் அதை அடைய முடியுமா என்ற கேள்வி தோன்றும் அவ்வப்போது,

வெற்றி பெற உழைப்பும் அத்துடன் நல்ல பண்புகள் அனைத்துமே தேவை,

இவ்வாறு வாழ்வின் முக்கிய தருணத்தில் நல் பண்புகள் புகட்டி கல்வி செல்வத்தை தந்து,

உலகில் இருக்கும் சவால்களை எதிர்கொள்ள என்னை போன்ற பல மாணவர்களை 

உருவாகியதற்கு நன்றி ஆசிரியர்.


உங்களால் தான் இன்று இவ்வுலகில் பல சாதனையாளர்கள் உயர்ந்து இருக்கிறார்கள்,

உங்களை கொண்ட இந்த ஒரு நாள் ஆசிரியர் தினம் போதாது,

உங்கள் வழிகாட்டுதலால் பல மாணவர்கள் சாதனையர்களா உருமாறியுள்ளனர்,

உங்களின் விட முயற்சி பலரின் வாழ்க்கையை பெரும் உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது,

ஆசிரியர் இல்லாத ஒரு உலகை கற்பனையிலும் நினைக்க முடியாது.


எத்தனை உறவுகள் ஒருவரின் வாழ்வில் இருக்கலாம்; 

ஆனால் ஆசிரியர் என்ற ஒருவர் இருந்தால் போதும் அவரின் வாழ்வு நிச்சயம் உயரும்,

மற்றவர்களின் வெற்றியை தன் வெற்றியாக கொண்டுபவர்கள் ஆசிரியர்களே,

அந்த வெற்றியை மற்றவர்கள் பெற அவர்களை தயார்படுத்துபவர்களும் ஆசிரிய பெருமக்களே,

நாம் அனைவரும் போற்றி வணங்க வேண்டியவர்கள் நாமது ஆசிரியர்கள்.

#ThankYouTeacher



Rate this content
Log in

Similar tamil poem from Classics