தவிப்புகள்....
தவிப்புகள்....
எங்கோ நான் தவறவிட்ட
இளமைக் கனவுகளை
உன் சிரிப்பெனும்
நூழிழையால் இணைத்தாய்
என் வாழ்வுடனே!
இணைப்பு இழந்த நூழிழையாய்
சட்டென்று காற்றினில்
மறையும் மேகமாய்
என் இதயத்தின் இடம் மறந்திட
என்னைவிட்டுப் பிரிந்தாய்.
காதல் புள்ளிகளால் வரைந்த
வாழ்க்கையெனும் கோலத்தின்
இணைப்பு கோடுகள் தடம் மாறிட
தடுமாறிய நெஞ்சத்துடன்
உன்னை விட்டுப் பிரிந்தேன்.
பிரிவின் தவிப்பு தந்த
வேதனையின் வலி
ஒவ்வொரு துளி இரத்தத்திலும்
ஆழமாய் ஊடுறிவிட
துடிக்க மறந்த இதயத்திற்கு
உயிரூட்டிட மறுபடியும்
தேவை நீ எனக்கு!