STORYMIRROR

Chidambranathan N

Romance

3  

Chidambranathan N

Romance

தோழியை வர்ணித்தல்

தோழியை வர்ணித்தல்

1 min
329

அன்பாலே என் கவிதைகளை நேசித்தவளே!
அரவணைப்புடன் என் கருத்துக்களைப் புரிந்தவளே!
அருமையாக உன் மன அழுத்தங்களை அவிழ்த்தவளே!
அதிகமான பாசத்தினால் உறவுகளையும் நண்பர்களையும் இழந்தவளே!
அதிசயத் தோழியே! என் இதயத்தில் நிறைத்தவளே!
அழகாக என்னைக் கொள்ளை கொண்ட மான் விழியாலே!
அரிசியைப் பற்களைக் கொண்டு முத்துப் புன்னகையைப் பூப்பவளே!
அல்லி மலரைப் போன்ற செம்மையான இதழ்களைக் கொண்டவளே!
அன்றில் பறவையைப் போன்ற மூக்குத்தியினை அணிந்தவளே!
அசைகின்ற அழகான காதணிகளைக் கொண்டவளே!
அறிவுச் சுடரான அன்னக்கொடி இடையாகிய பேரழகியே!
அந்திமழை கருமேக கூந்தல் கருப்பான பேரழகியே!
அடர்ந்த கூந்தல் கொண்ட கருப்பு மயிலே!
அத்திப் பழம் போன்ற இரக்கக் குணம் கொண்டவளே!
அலங்கார நகை அணிந்து என் முன் வந்து அழகாக நின்றவளே!
அதிகாரமாக என் மனதைப் புதைத்தவளே!
அன்பாலே புதிய நேசத்தை விதைத்தவளே!
அதற்கும் மேலே என்னை என்ன செய்யப்போகிறாய்!


Rate this content
Log in

Similar tamil poem from Romance