பிரிதல்...
பிரிதல்...

1 min

450
என் வெறுமையான மனதிற்குத் தெரியும்
மறுபடியும் தொடர்புகள்
துண்டிக்கப்பட்டதா என்று.
தேவையற்ற கேள்விகளால்
நம் மனதின் இருண்ட பக்கங்கள்
இருவருக்கும் தெரிந்திட
இதயத்தில் நீங்காத வலி!
நீடித்த கண்ணீரினால்
உன் இமைகள் வீங்கியே
உப்பரித்த பார்வையாய் மங்கியது.
கண்ணீர் கறை படிந்த உன்
மென்மையான கன்னங்களிரண்டும்
உன் வாழ்வின் சோகத்தினை நீக்கிட
என்னை மீண்டும் அழைக்க
என் கைகளின் அணைப்பினில் நீ
உன் வாழ்வினைத் தர
சம்மதமா!