பாசமலரே
பாசமலரே
சிறுவயதிலே கள்ளங்கபடமில்லாமல் நான் வாங்கிய தின்பண்டங்களை ஒளித்துவைத்து அதை திருட்டுத்தனமாக பார்த்து இரசித்து திருடி தின்றுவிட்டு செல்வான் அவன்..
காரணமோடு ஆசை காட்டி ஏமாற்றி தன் வலையில் சிக்கவைத்து அடிவாங்கி கொடுப்பான் அவன்..
அதே நேரத்தில் மிதி வண்டியை அழுத்தி சென்று முன்னால் அமரச்செய்து வேகமாக ஓட்டிச்செல்வான் அவன்..
தான் செய்த தவறை மறைக்க என்னை ஏமாற்றி கடையில் ஏலக்காய் பருப்பியும் தேன்மிட்டாயும் வாங்கி கொடுத்து ஏமாற்றி செல்வான் அவன்..
தந்தையின் பாசத்தை காட்டி பிடித்ததை வாங்கி கொடுத்து இழுத்துச்செல்வான் அவன்..
பொறுப்புகளும் ஆசைகளும் நிறைவேற்றவேற்றமென்று எப்பொழுதும் திட்டி தீர்ப்பான் அவன்.
இரத்தபந்தங்கள் என்றுமே குறையாத அன்புடன் தேங்கி நிற்கும் பாறைக்கு நடுவே உள்ள நீர்போல் அவன்..
கொட்டி தீர்க்க நேரம் வரும்போது அடித்து பாறையை மூழ்கடித்துவிடுவான் அவன்.
அவன்தான் என் அண்ணனவன்..