ஒற்றை நட்சத்திரம்
ஒற்றை நட்சத்திரம்


அன்புள்ள நாளேடே,
மேகம் பூசிய வானத்தில்
ஒற்றை நிலவொன்று
ஒய்யாரமாக பவனி வர
நட்சத்திரப் பரிவாரங்களெலாம்
மின்னி மின்னியே தங்கள்
மகிழ்வலை தனை ஒளியென பரப்ப -
சில தினங்களாய்
நிலவதுவும் ஓய்வெடுக்கச்
சென்றதோ என்னவோ ?
நட்சத்திரப் பரிவாரங்களும்
நிலவுக்கு சேவகம் செய்ய
சென்று விட்டனவோ?
எப்படியோ வழி தவறிய
ஒற்றை நட்சத்திரம் மட்டும்
வானில் தன் ஒளிக்கீற்றினை வீசி
உறவுகளை தேடி நிற்கிறதோ ?