நீ எனக்கு!
நீ எனக்கு!
சில்லென்ற மழைத் துளிகளில்
சிலிர்த்திடும் மலரிதழ்களாய்
காதலில் என் மனம்.
நிகழ்வுகளின் இதமான
பகிர்வுகள் நம் இருவரையும்
இணைக்கும் பாலமாகிடுமோ?
சோர்வினில் தேகம்
வலுவிழந்து சுணங்கிடும்
வேளையில் நான்
ஏனோ உன்னைத்
தேடுகின்றேன்!
உன் வலுவான கரங்களின்
பாதுகாப்பு வளையத்தினுள்
கண நேரம் கண் அயர்ந்திட
மீண்டும் வந்திடுமா
பொன்னான நொடிகளே!

