Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Chidambranathan N

Romance Classics Fantasy

3  

Chidambranathan N

Romance Classics Fantasy

முன்னாள் காதலியின் நினைவலைகள்

முன்னாள் காதலியின் நினைவலைகள்

1 min
139


மகிழ்ச்சிகளும் துயரங்களும் நிறைந்த வாழ்க்கையில் தனது முன்னால் காதலனை நினைத்து ரகசியமாக ஏங்கும் முன்னால் காதலி!

வாழ்க்கையின் கவலைகளைத் தற்காலிகமாக மறந்துவிட முன்னால் காதலனின் நினைவுகளை ரகசியமாக நினைத்து மகிழும் முன்னால் காதலி!

தன்னுடைய சிந்தனைகளில் முன்னால் காதலனின் கண்ணியமான செயல்பாடுகளை நினைத்து ரகசியமாக உருகும் முன்னால் காதலி!

திருமணமானாலும் தன்னுடைய ஆழ்மனதில் தனது முன்னால் காதலனின் அழகினையும் அறிவாற்றலையும் விடாமுயற்சியையும் உரிமையுடன் ரகசியமாக ரசித்து ஏங்கும் முன்னால் காதலி!

வருடங்கள் பல கடந்து சென்றாலும் அந்த முன்னால் காதலனின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கும் முன்னால் காதலி!

என்றாவது ஒரு நாள் தனது முன்னால் காதலனுடன் சந்தித்து அன்புடன் உரையாட வேண்டும் என்று தனது ஆழ் மனதில் ஆசையினைக் கொண்டிருக்கும் முன்னால் காதலி!

காதலிக்கும் வயதில் அந்தக் காதலனுடன் கனவுலகில் வாழ்ந்திருந்த அந்த முன்னால் காதலி!

கல்லூரியில் பயிலும் காலங்களில் தன்னை ஒரு சிகப்புத் தேவதையாக நினைத்துத் தனது ஒரு தலைக் காதலுடன் ஏக்கம் கொண்டிருந்த அந்த முன்னால் காதலி!

தன்னை விட்டுப் பிரிந்த அந்த முன்னால் காதலன் தனக்கான ஒரு வாழ்க்கையினை அமைத்துக் கொண்டு சிறப்புடன் வாழ்வதனைக் கண்டு மகிழ்ச்சி கொள்ளும் அந்தச் சிகப்புத் தேவதையாகிய அந்த முன்னால் காதலி! 

முதிர்ச்சியான வயதினை அடைந்தபிறகு அந்தப் பழையக் காதலினைச் சூரிய காந்தி மலருக்கு ஒப்பாக நினைத்து மகிழ்ச்சி கொள்ளும் அந்த முன்னால் காதலி!

முன்னால் காதலின் நினைவுகளை மனதிற்குள் புதைத்துக் கொண்டு எஞ்சிய அழகிய வாழ்க்கையினை மகிழ்ச்சியுடன் நகர்த்திக்கொண்டிருக்கும் அந்த முன்னால் காதலி!


Rate this content
Log in

Similar tamil poem from Romance