மழை...
மழை...


மேகத்தை பிரிந்து வருகையில்...யாரை சந்திக்க ஆசைப்பட்டாய்....
யார் மீது விழுந்து ஸ்பரிசிக்க ஆசைப்பட்டாய்......
என் மீது என்றால்...எந்த உணர்வைக்கொடுக்க நினைத்தாய்...
ஸ்பரிசம் தடைப்பட்ட போது உன் மனநிலை எப்படி இருந்தது......
பார்வையில் நான் வருடியது உனக்கு உணர்ந்ததா...
நானும் உன்னை தழுவ ஆசைப்பட்டது உனக்கு புரிந்ததா...
என் மனம் உன்னோடு பேசியது உனக்கு கேட்டதா....
உனக்கும் எனக்கும் இடையில் யாரும் இல்லாத விடுமுறை நாளில் வரச்சொன்னேன் ..உன் செவியில் விழுந்ததா......
வரும்போது...நீயும் நானும் இறுகத்தழுவிக் கொள்ளலாம்.. எந்த தடைகளுமின்றி....எந்த இடைவெளியுமின்றி......வான் பார்க்க உன்னில் நானும்...என்னில் நீயும். கரைந்துவிடலாம்....காதலோடு...