மகிழ்
மகிழ்
காலம் யாவும் பேசும் சொற்றொடர் நீ,
புன்முறுவலுடன் கள்ளத்தனம் புரியும் கார் மேகம் நீ,
முத்துக்கள் சிந்தும் மழைத்துளி நீ,
புன்னகை கொஞ்சும் வானவில் நீ,
சில்லென்று சிலிர்க்கவைக்கும் சாரல் நீ,
மனம் விரும்பும் மண் வாசனை நீ,
செவி கேட்கத்தவிக்கும் இசை நீ,
செல்ல சிணுங்கலின் தென்றல் நீ,
கண்ணைப்பறிக்கும் மின்னல் ஒளி நீ,
கர்வம் தவிர்க்கும் பெரும் புயல் நீ,
ஆர்ப்பரிக்கும் ஆரவாரம் நீ,
அயராது ஓடும் கால்களும் நின் அழகினில் அசைய மறுக்கும் மழை நீ ❤️
- மழலை மொழியும் மழையின் ஒலியும் நம்மை என்றுமே மனதார மகிழ வைக்கும் ❤️

