அழகிய மரணம்
அழகிய மரணம்
பட படவென அடிக்கும் இதயம்
துடிதுடித்து போனதே முதல் முறை உணை கண் பார்க்க,
விரல் கோர்க்கும் ஆசை தூண்டுதே
உள்ளே உயிரணுக்கள் மாறுதே.
மாலை மாற்றிட மனம் ஏங்குதே
இருமனம் ஒரு மணமாக திருமணம் தவில் ஒளி முழங்குதே,
கண் இமைக்க காலம் ஓடுதே
காதல் மீண்டும் மலருதே
சிறு நரைமுடியுடன் நகை பூக்குதே
உன் விரல் கோர்த்து நடை சேற்குதே
விழி அசைவினில் மறுமுறை வாழ்ந்திட கண் மூடுதே ❤️

