மேகத்திரை
மேகத்திரை
பட்டுத் தெறிக்கும் மழைத்துளி
வான வீதியை மறைத்தே நின்ற
மேகக் கூட்டங்களை துடைத்தே
நிர்மலமான வானம் தனையே
காட்சிக்கு விருந்தாக்கியதை போல்
மனதை மறைத்திருக்கும்
அறியாமை மேகந்தனையே விலக்கி -
தெளிவான மனம் தனை
கைவசம் கொண்டிடுவோம் !
மகிழ்வலையை எங்கும் பரப்பிடுவோம் !