கண்டது கனவா நிஜமா
கண்டது கனவா நிஜமா
பல நாள் கண்ட கனவடா இன்று அது மெய் சிலிர்த்து போனதென்ன..!
அன்றோ கண் விழிகள் தேடிய பார்வை இன்றோ ஊரெங்கும் உன் முகமே தெரியுதடா..!
நீ தீண்டிய மறுகணமே என் கைகள் புரண்டு தவிக்குதடா..!
உன்னை பின்னாலிருந்து கட்டி அணைக்க மனமோ ஏதோ சுடும் வெயிலிலும் பனி போல் உருகியதடா..!
உன்னை இரசித்த மறுகணமே விழிகளோ உன்னை விலக மறுக்கிறது...
உன் இதழ்களை பிணைந்து ருசித்தது எங்கோ சொர்கத்திலே கண்ட கனவா நிஜமா என்று சிரிக்கிறது..!
பார்க்கின்ற பார்வையிலே கட்டி இழுத்தாய் விரல்களை கோர்த்து உன்னை அனைத்தேன் பஞ்சு மெத்தையும் தோற்று போனது உன் காலடி முன்னாலே..
உன் தீண்டலும் என் தேடலும் உன் கண்ணில் கண்ட பரிதவிப்பும் உன் அன்பால் என்னை கொல்லுதடா..!
தொலை தூரம் நீ இருந்தாலும் மறுகணமே கண்முன் நின்றாயே கனவா நிஜமா இன்றும் புரியாமல் நிற்கிறேன் நான்..