கண்ணீர் துளிகளாக
கண்ணீர் துளிகளாக
உன் நினைவுகள் என்னிடத்தில்
உப்பு கரிக்கும் கண்ணீர் முத்துகளாக
என் கன்னங்களின் சரிவினில்
உருண்டு ஓடியே
என் தோள்களை நனைத்தது.
உப்பு படிந்த கன்னங்களின்
சுவை அறிந்திட
நேரமில்லை உனக்கு.
போராடும் உள்ளத்தினில்
வேரோடிய எண்ண்ங்களில்
என்றும் நீ தான்!