காத்திருப்பின் வலி
காத்திருப்பின் வலி
உனக்காக காத்திருக்கும்
ஒவ்வொரு நொடியும் நொடித்து
நிமிடங்களில் நினைவிழந்து
மணி நேரத்தில் மடிந்து
நாட்கள் நரகமாய் நகர்கின்றன...
வாரங்கள் கழியும்முன்
வரமென வந்துவிடு...
மாதங்கள் வேண்டாம்
தாங்காது மனது...
கண் அருவி கரைபுறலும் முன்
கண்முன் னே வந்துவிடு!!!