காதலின் விலை..
காதலின் விலை..
மலர்களோடு ஒரு பேரழகிஒப்பனை செய்யாத
கற்பனைக்கு எட்டாதஇரவி வர்மாவின் ஓவியத்தை விடவும்..அழகிய அவள்.. காவியங்களும் காப்பியங்களும் வர்ணித்து புகழ்ந்தஅத்தனை கற்பனையும் உண்மைதானென்றுஉணர வைக்கும் அளவுக்கு அழகு...
பிரம்மனின் படைப்பில் பிரமிக்க வைக்கும் அழகு..அந்த அழகிய மென்மையான மலர்..
காதலர் தினத்துக்காகபார்த்துப் பார்த்து அழகிய வண்ண வண்ண மலர்களை தேர்ந்தெடுத்து.. அழகுற அலங்கரித்த பூங்கொத்து ஒன்றை படைத்து முடித்து .. அழகின் உச்சமாய் இதயத்தின் வடிவில் ஒற்றைச் சிகப்பு ரோஜா மலரொன்றைபூங்கொத்துக்கு சூடி நிறைவு செய்த அக்கணத்தில்..
அந்த அழகியின் காதல் பூங்கொத்து கிடைக்காதா என்றஏக்கமான காதல் கனவினை எனக்குள்ளேவிதைத்து விட்டாள்..
அழகியின் அழகியபூச்சூடிய பூங்கொத்து எனக்கு(ம்) கிடைக்கும்.. என்ற உண்மை பிறகுதான் புரிந்தது..
அவள் கேட்கும் அதற்கான விலையை பணமாக அந்த அழகிக்கு கொடுத்தாலென்று..
ஆம்.. அவளொரு பூங்கொத்து செய்யும் பூ வியாபாரி..
இரா பெரியசாமி.

