இதயத்தின் இசையே💙
இதயத்தின் இசையே💙
என் நெஞ்சினில் நினைவுகளைக் குவித்தாய் நீ,
என் இதயத்தினில் இதமான இசையானாய் நீ,
என் வெதுமானத்தில் வீசிய பனிக்காற்று நீ,
அருகினில் இருந்ததால் உன் அன்பினை அலட்சியம் கொண்டேன் நான்,
இன்று கூட்டிற்கு செல்ல ஏற்பாடுகளுடன் நீ,
உன் அன்பின் ஆழத்தினை உணர்ந்த ஏமாளியாய் நான்,
என் காதலே ...
என்னை நீங்கி சென்றாலும்,
என்னை இயக்கும் இதயத்தினில் உன்னை சிறை பிடிப்பேன் நான்...