STORYMIRROR

Chidambranathan N

Romance

3  

Chidambranathan N

Romance

எனது காதலைக் கண்டுபிடிப்பாயா?

எனது காதலைக் கண்டுபிடிப்பாயா?

1 min
237

உன்னை இனக்கவர்ச்சியுடன் பார்ப்பதில்லை என் உள்மனம்!


உன்னைப் பார்ப்பதாலே வாழ்கிறேன் என்கிறதே என் உள்மனம்!


உன்னுடன் பேசிக்கொண்டு இருப்பதல்ல என் நட்பு! 


உன்னுடன் பேசிக்கொண்டு உன்னைப் பார்த்துக் கொள்வதே என்பதே என் நட்பு!


உன்னுடைய அறிவாற்றலை நேசிக்கிறேன் என்பதல்ல என் நேசம்! 


உன்னுடைய அறிவாற்றலை நேசித்துக் கற்றறிந்து வாழ்வதே என் நேசம்! 


உன்னுடைய சொந்த வாழ்கையை நினைத்து உனக்குக் கோபம் வருகிறது என்மீது என்பதல்ல உனது கோபம்!


உன்னுடைய கோபத்தை என்மீது மட்டுமே காட்ட வேண்டும் என்பதே கோபம்!


உன்னைப் பிறர் ஆத்திரக்காரியெனக் கூறச் சொல்லாது என்னவள் அமைதியானவள் எனக்கூறக் கேட்பதே என் விருப்பம்!


உன்னுடைய அத்திரத்திலும் நான் தனியாய் மட்டுமே இருந்து உன்னை நேசிப்பதே என் விருப்பம்!


Rate this content
Log in

Similar tamil poem from Romance