STORYMIRROR

Shakthi Shri K B

Classics Inspirational Children

4  

Shakthi Shri K B

Classics Inspirational Children

என்னை மாற்றியவளே

என்னை மாற்றியவளே

1 min
285

என் வாழ்வில் முக்கிய தூண் நீயே,

நீ இன்றி நான் ஒரு போதும் அசைந்ததில்லை,

என் வாழ்வின் ஒளி காட்டி நாயகியே,

வாழ்க்கை பயணத்தில் என்னக்கு துணையை நின்றவளே,

என்னை விட்டு ஒரு பொழுதும் நீங்காதவளே,

பிறந்த நொடி முதல் இன்று வரை என்னை தாங்குபவளே,

என் முயற்சி அனைத்திலும் என்னை ஊக்குவித்தவளே,

நான் படிக்க தவறிய பொழுது தட்டிக்கொடுத்தவளே,

என் கல்வி படிப்பில் நான் சிறக்க உன் அலுவலக பணியை விட்டவளே,

உன் அன்பு மகளின் வெற்றியில் உன் வெற்றி உள்ளது என கூறியவளே,

என் வாழ்க்கை சிறக்கவே தன் சிறகுகளை விரித்தவளே,

கவலைகள் பல வந்த பொழுதும் அதை என்னிடம் நெருங்காமல் தடுத்தவளே,

என் கண்ணீர் ஒரு துளி சிந்தினால் தன் கண்ணில் கடல் அலை வர்வழைதவளே,

நான் அலுவலக பண்ணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து பொது,

என் மகள் என்னை போல இருக்க வேண்டும் என எண்ணியவளே,

யாரும் எதிர் பாராது இருபது ஐந்து ஆண்டு பின் அலுவலக பணிக்கு திரும்பியவளே,

என் மகளை ஒருவரும் குறைகூற கூடாது என சிந்தித்தவளே,

உன் செய்யலை கண்டு வியந்தேன் கனவின் முக்கியத்துவத்தை உணர்த்தியவளே,

என்னை போல ஒரு மகளை ஈன்றதற்கு நீ பெருமை அடைய செய்வேனே,

திருமணம் ஆனால் என்ன குழந்தை பெற்றால் என்ன தன் கனவு பண்ணிய,

ஒவ்வொரு பெண்ணும் செய்யலாம் என என்னைக்கு உணரத்தியவளே,

பாசத்தில் குணத்தில் மட்டும் இன்றி வாழ்வின் வெற்றி பாதையிலும் என்னை ஊக்குவித்தவளே,

நீ என்றுமே என் தாய் மட்டும் அல்ல என்னை வழி நடத்திய ஆசானும் அனவளே,

என் அன்னையே உன் துணை இருந்தால் போதும் இந்த உலகையே வென்றிடுவேன் நான்.


நீ என்றுமே என் #திஇன்ஸ்பைரிங்வுமன் & #வுமன் ஆப் டுடே



Rate this content
Log in

Similar tamil poem from Classics