அன்பின் குரல்கள்
அன்பின் குரல்கள்


அன்பின் குரல்களிலிருந்து தப்பிப்பதென்பது எப்போதும் சாத்தியப்படுவதே இல்லை.
சில நேரங்களில்
தாழிட்டுக்கொண்ட கதவிற்கு வெளியிலிருந்து கேட்கும் “சாப்பிடலயா?”
சில நேரங்களில்
எங்கிருந்தோ மங்கலாய் கேட்கும் ”எப்படியிருக்க?”
பிறகு எப்போதாவது
தட்டுத்தடுமாறி வரும் ”நல்லாயிருக்கேல?”
பழக்கப்பட்ட குரல்களுக்கு மனம் எப்போதுமே வாலாட்டத் தவறுவதில்லை.
”என்ன பண்ற?“
”இருக்கியா?”
”கொஞ்சம் பேசணும்”
என்றபடி ஆரம்பிக்கும் அன்பின் குரல்களை யாராவது கொஞ்சம் கடனாய் கொடுத்தால் கூட போதுமாய் இருக்கிறது இந்த வாழ்க்கைக்கு.