Salma Amjath Khan

Drama Romance Others

4.6  

Salma Amjath Khan

Drama Romance Others

உன்னை என்றும் காதல் செய்வேனே

உன்னை என்றும் காதல் செய்வேனே

4 mins
23.5K


வேலைகளை எல்லாம் முடித்து விட்டு பிரியா வீடு திரும்பும்போது மணி ஆறரை ஆகியிருந்தது. வண்டியை போர்டிகோவில் நிறுத்திவிட்டு வாசலில் நின்றிருந்த வண்டியை பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்த பிரியாவை புன்னகையுடன் வரவேற்றாள், லட்சுமி. 


        லட்சுமி என்பவள் செல்வியின் அத்தை. கடந்த வருடம் ரகுவின் வீட்டிற்கு பத்து நாட்கள் வந்து தங்கியபோது பிரியாவுடன் நல்ல பழக்கம். எதிர்பார்க்காத நேரத்தில் அவளுடைய வரவு பிரியாவிற்கு அதிர்ச்சியையும் மகிழ்ச்சியையும் தந்தது. அவள் அருகில் சென்று ஆசியையும் பெற்றுக்கொண்டாள்.


" அம்மாடி பிரியா எப்படி இருக்க?"


 " நல்லா இருக்கேன் ஆண்ட்டி. நீங்க எப்படி இருக்கீங்க? நீங்க மட்டும்தான் வந்தீங்களா? வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?"


"எல்லாரும் நல்லா இருக்கோம். உன்ன பாக்க தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்."


 " என்ன பாக்கவா?" அவள் கண்கள் கேள்வியை பிரதிபலிக்க, இலட்சுமி பேசத் தொடங்கினாள்.


 " விஷயம் என்னன்னா சிவாவுக்கு பொண்ணு பார்த்திருக்கேன். அடுத்த மாசம் கல்யாணம். அதுதான் அண்ணனுக்கும் உனக்கும் பத்திரிக்கை வச்சிட்டு உன்கிட்டயும் சொல்லிட்டு போலாம்னு வந்தேன்."


கடந்த ஆண்டு 10 நாட்கள் தங்கி இருந்த போது இருவரின் மனதிலும் பெரிய இடம் பெற்றிருந்தாள். சிவாவும் பிரியம் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். 


வருடங்களாக பழகியவர்களிடமே பாசத்தை எதிர் பார்க்க முடியாமல் இருந்த பிரியாவிற்கு சில நாட்களே பழகிய பாசம் அவளை நெகிழ வைத்தது. 


தன்னை சுற்றி இருப்பவர்கள் தன்மீது எவ்வளவு பாசம் வைத்துள்ளனர் என்று எண்ணும்போது கண்கள் குளமாக மாறுகிறது.


ரகுராம், பரிமளா, செல்வி, லட்சுமி, சிவா இவர்கள் அனைவரும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தன்னை நேசிப்பதும் அவளுக்கு ஆறுதலாக இருந்தது. இந்த நேசிப்பு என்றும் குறைந்துவிடாது என்றும் ஏங்குகிறது ,அவள் மனம்.


 " என்னம்மா? எதுவும் பேசாம நிக்கிற. வருவல்ல." 


 "என்ன ஆண்டி இப்படி கேக்கறீங்க. கண்டிப்பா வருவேன்."


 " அதான பார்த்தேன். நீ வராம இருந்த அவ்ளோதான்" என சிவா சொல்ல பிரியா புன்னகையை மட்டும் பதிலாக தந்தாள்.


 " சரி எனக்கு ரொம்ப நேரமாச்சு.இப்போ போனா தான் நான் 11 மணிக்கு வீடு போய் சேர முடியும்."


" சரி போயிட்டு வாங்க." ரகுராம் சொன்னவுடன் லக்ஷ்மி தன் கைப்பையை எடுத்துக்கொண்டு கிளம்பினாள். சிவாவும் மற்றவர்களும் அவர்களை தொடர்ந்தார்கள்.

காரின் முன் நின்று கொண்டு

     

 "அண்ணே பத்து நாளைக்கு முன்னாடியே வந்துடனும். வரும்போது மறக்காமல் ப்ரியாவையும் கூட்டிட்டு வந்துடுங்க. அப்போ நான் கிளம்புறேன்."


 " பிரியா அண்ணனோட சேர்ந்து வந்துடும்மா" எனக்கூறி காரில் ஏறி அமர்ந்து கொண்டாள். ரகுராமின் ஆசியையும் பரிமளாவின் ஆசியையும் பெற்றுக் கொண்டான்,சிவா. 


 " நல்லா இரு சிவா" ரகுராம் மனதார ஆசீர்வதித்தார்.


" நான் உங்களுக்காக காத்திருப்பேன். நீ வந்துரு செல்வி. internal அது இதுன்னு சொன்னா என் அத்தை பையனுக்கு கல்யாணம் postponed பண்ணிடுங்கன்னு சொல்லிடு. 


அப்படியும் கேட்கலன்னா எனக்கு ஒரு போன் மட்டும் பண்ணு. காலேஜ்ஜ தூக்கிடுவோம் ."

சிவாவின் பேச்சு எல்லோரையும் நகைக்க ,


 "அப்பறம் ப்ரியா மேடம் அது இதுன்னு காரணம் சொல்லாமல் கல்யாணத்துக்கு பத்து நாளைக்கு முன்னாடியே வந்து சேருங்க"


 "சரி மாப்பிள்ளை சார். நீங்க கெளம்புங்க. நாங்க வந்துருவோம்."என பிரியா கலாய்க்க வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்,சிவா.


 சிவாவின் திருமணத்தை பற்றி நினைத்துக்கொண்டே பிரியா தன் அறைக்கு சென்றாள். இந்த வீட்டிற்கு வந்த புதிதில் தனக்கு என்று யார் இருக்கின்றார்கள் என்று நினைத்து அழுத அந்த அறையில் இன்று தனக்கு என்று இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று சந்தோஷப்பட்டாலும், இது எதுவுமே நிரந்தரமில்லை என்று நினைக்கும் போது கவலையாகவும் இருந்தது.


கண்கள் தானாக கலங்கி நின்ற போது ,செல்வி வருகிற சப்தத்தை கேட்டு கண்களை துடைத்துக் கொண்டு சகஜ நிலைக்குத் திரும்பினாள்.


" அக்கா "செல்வி கத்த,  


 "அக்கா நெட் தீர்ந்திருச்சு. உங்க லேப்டாப்பில் தரேங்களா நான் ஆன்லைன் ரீசார்ஜ் பண்ணி தரேன்."


 " எடுத்துக்கோ செல்வி. பெட் மேல தான் இருக்கு."

பிரியா அனுமதி அளித்ததும் பெட்டின் மீது இருந்த லேப்டாப்பை தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டு ஆன் செய்தாள்.


" அக்கா பாஸ்வேர்ட் கேக்குது" அருகில் வந்து பாஸ்வோர்ட் போட்டுக்கொடுக்க செல்வி ரீசார்ஜ் செய்து கொண்டாள்.


" அப்புறம் எங்க போனீங்க? இன்னைக்கு." பிரியா மெதுவாக பேச்சுக் கொடுத்தாள்.


 " அக்கா இன்னைக்கு விடுங்க. நாங்க பெங்களூர் போலாம்னு இருக்கோம். இன்னைக்கு ஒரு படத்துக்கு போனோம். படத்துல ஃபுல்லா பெங்களூர் தான்.


கட்டடங்கள் சூப்பரா இருக்குகா. அதான் அத நேர்ல போய் பார்க்கலாம்னு பிளான் போட்டிருக்கோம்."


 "சென்னைனா பரவால்ல காலேஜ் போயிட்டு வர்ற மாதிரி ஏமாற்றுவ இப்போ பெங்களூர்ல எப்படி போவ? வீட்டுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்."

   

 " தெரியாதுக்கா. அதுக்கு தான் சூப்பர் பிளான் வெச்சிருக்கோம்."


" என்ன பிளான் ?"

   

 "எங்க காலேஜ்ல இருந்து எங்களை என். எஸ்.எஸ் கேம்ப் கூட்டிட்டு போறேன்னு சொன்னாங்க. அதுக்கு எல்லாரும் என்றும் கண்டிப்பா வரும்னு சொன்னாங்க. அம்மாவும் அப்பாவும் எப்படியும் போன்னு தான் சொல்வாங்க .


அவங்க ஏழுநாள் கூட்டிட்டு போவாங்க. ஆனா நாங்க பத்து நாள்ன்னு சொல்லிட்டு கேம்ப் முடிச்சு நேரா பெங்களூர் போய் மூணு நாள் என்ஜாய் பண்ணிட்டு வருவோம். எப்படி இருக்கு எங்க பிளான்?"


" கேவலமா இருக்கு."


"என்னக்கா சொல்றீங்க?"

  

" பின்ன என்ன? ஏதோ காலேஜை கட் அடித்து ஊரு சுத்துரீங்க.சரி சின்ன பிள்ளைங்கன்னு நானும் விட்டா தெரியாத ஊரில் போய் மூன்று நாள் தங்க போகிறேன் சொல்ற. 


பொம்பளைங்க அப்படி எல்லாம் வெளிய தங்க கூடாது. அது உங்களுக்கு சேஃப்டி இல்ல. தெரியாத ஊரு ஒரு தெரியாத மாநிலம் தெரியாத மொழி நீ கண்டிப்பா போகக்கூடாது ."


"அக்கா ப்ளீஸ்...."


" நீ எவ்வளவு சொன்னாலும் நடக்காது. போகக்கூடாது."


 " அக்கா "செல்வி அழுத குரலில் கெஞ்ச , 


 "செல்வி நான் சொன்னா உன் நல்லதுக்கு தான் இருக்கும். உனக்கு பெங்களூர் சிட்டி பாக்கனும்னா என்கிட்ட சொல்லு. நான் அங்கிள் கிட்ட பேசி சுத்திக்காட்டுறேன் . ஃப்ரெண்டோட நோ சான்ஸ். சொன்னா புரிஞ்சுக்கோ."


" சரிக்கா" 

   

 " தேட்ஸ் குட். சரி வேற என்ன நடந்தது இன்னைக்கி."

  

 "வேற ஒன்னும் இல்ல."ஜார்ஜ் இறங்கிய செல்போன் போல் சொல்ல, பிரியாவுக்கும் பாவமாக இருந்தது. தன் கல்லூரி ஞாபகம் மின்னலாய் வந்து சென்றது.


பிரியாவும் தன் நண்பர்களுடன் பெங்களூர் சென்ற நினைவு வந்து கண்கள் கண்ணீரை சிந்த தயாராக இருந்தது. செல்வி துயரை உணரமுடிந்தது.


பெற்றோருடன் சென்றாலும் நண்பர்களுடன் செல்வதைப் போல் வராது. அது ப்ரியாவுக்கும் தெரியும் . இன்னும் இந்த வருடங்களில் அவளது கல்லூரி முடிந்து விடும். 


இந்த வாய்ப்பை அவள் இழந்துவிட்டால் மீண்டும் அவளால் இந்த வாய்ப்பை பெற முடியாது. இந்த நேரத்தில் பிரியா தோழியாய் இருக்க ஆசை பட்டாள்.


 " கேம்ப் எப்போ?"


 " இன்னும் சொல்லல." சார்ஜ் இறங்கியே பதில் சொன்னாள், செல்வி . 


"அதுக்குள்ள நான் ஒரு பிளான் போடுறேன்."


 " நெஜமாவாக்கா" பிரியா தலையசைத்தாள்.

  

 அவளை கட்டிக்கொண்டு அவள் கன்னத்தில் ஒரு முத்தம் அளித்து விட்டு ,"தேங்க்ஸ்" சொல்லி சென்றுவிட்டாள். ஒருவேளை அவள் மீண்டும் மனது மாறி விடுவாளோ என நினைத்தவளாய்.Rate this content
Log in

Similar tamil story from Drama