தன் வாயாலே சூனியம் வைத்துக் கொண்ட உச்ச நடிகர்..
தன் வாயாலே சூனியம் வைத்துக் கொண்ட உச்ச நடிகர்..
சென்னை: இந்த நடிகருக்கு பெயர்தான் உச்ச நடிகர், ஆனால் அவ்வப்போது எடுக்கும் தவறான முடிவுகளால் நன்றாகவே வாங்கிக் கட்டிக் கொள்கிறார். அப்படித் தான் அவரது கடைசி படத்திற்கு அடிமேல் அடி வாங்கிக் கொண்டு இருக்கிறார். அதற்கு காரணம் அவர் எடுத்த முடிவுதான்.
அதாவது அவரது கடைசி படத்தின் இயக்குநருக்கு நெருக்கமானவர் அந்த இணை இயக்குநர் மற்றும் கதாசிரியர், இயக்குநரின் நண்பரும் கூட. அந்த இணை இயக்குநர் தனக்கு பிடித்த நடிகருக்கு எதிராக உச்ச நடிகரின் ரசிகர்கள் ஏகப்பட்ட வன்மத்தை கொட்ட, பொறுக்க முடியாத அந்த இணை இயக்குநர் பதிலுக்கு உச்ச நடிகரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதில் பியூட்டி என்னவென்றால், அடுத்ததாக அந்த இணை இயக்குநருக்கு நெருக்கமான இயக்குநர் உச்ச நடிகரின் படத்தை இயக்குவதாக இருந்த கால கட்டம் அது. இப்படி இருக்கையில் உச்ச நடிகர் குறித்து இணை இயக்குநர் கொஞ்சம் ஓவராகவே பேசியது, உச்ச நடிகருக்கு அப்செட்டை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இயக்குநரை அழைத்து, உங்க இணை இயக்குநர் இந்த படத்தில் சம்பந்தப் படமால், இருக்க வேண்டும் எனக் மிகவும் ஸ்ட்ரிக்டாக கூறி உள்ளார். அப்படி இருக்கும்போது, இயக்குநரும் வேறு வழி இல்லாமல் தனது நண்பரை அந்த படத்தில் இருந்து விலக்கி வைத்துவிட்டு படம் எடுத்துவிட்டார்.
இயக்குநரின் நண்பர்: படமும் ரிலீஸ் ஆகிவிட்டது. படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. சில ரசிகர்களும் இணையவாசிகளும் படத்தைப் போட்டு அடி அடி என அடித்து வருகிறார்கள். இதற்கு காரணம் படத்தின் திரைக்கதை அந்த அளவுக்கு மோசமாக உள்ளது. இப்படி இருக்கும்போது படத்தில் இயக்குநரின் நண்பர் வேலை பார்க்கவில்லை என்ற தகவல் திரையுலகில் பரவ, அதற்கான காரணத்தை கேட்டுத் தெரிந்து கொண்டுள்ளார்கள். அதன் பின்னர் எழுந்த பேச்சுதான் பெரிய ஹைலைட்.
தனக்கு தானே ஆப்பு: அதாவது உச்ச நடிகருக்கு வேறு யாரும் ஆப்பு அடிக்கத் தேவையில்லை, அவரே தனக்குத் தானே ஆப்பு அடித்து கொள்வார் என்று பலரும் பேசி வருகிறார்கள். கொஞ்சம் அவசரப்பட்டு விட்டோமோ என நடிகர் இப்போது வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறாராம். இப்போது இயக்குநர் தனது அடுத்த படத்தின் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தில் அவரது நண்பர் இணைந்து பணியாற்றுகிறார்.

