STORYMIRROR

Harini Ganga Ashok

Comedy Children

4  

Harini Ganga Ashok

Comedy Children

நகைச்சுவை

நகைச்சுவை

1 min
672

நகைச்சுவை என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒன்று.


மிஸ்டர் பீனும் சந்தானமும் சந்தித்து கொண்டால் என்ன ஆகும் 🤔


மிஸ்டர் பீனும் சந்தானமும் ஒரு கல்யாண வீட்டில் சந்தித்து கொள்கின்றனர். அப்பொழுது சந்தானம் பீனிடம் கல்யாண வீட்டிற்கு மாடுகளை கூட்டிக்கொண்டு வர மாட்டார்கள் ஏன் தெரியுமா என்று கேட்டார். அதற்கு பீன் அது முட்டிவிடும் என்பதாலா என்று கேட்டார். அதற்கு சந்தானம் வாய் விட்டு சிரித்து கூறினார் கல்யாணம் என்பது ஆயிரம்காலத்துப் பயிராம் அதனால் மாடு மேய்ந்து விடும் என்று பயந்து கூட்டிவர மாட்டார்கள் என்றார். இருவரும் வெடித்து சிரித்தனர்.


மிஸ்டர் பீனிடம் ஒருவர் கேட்டார் நீங்க ஒரு பல் டாக்டர் தானே என்று அதற்கு அவர் சொன்னார் இல்லை இல்லை நான் முப்பத்திரண்டு பல்லுக்கும் டாக்டர் தான் என்று. மீண்டு பலத்த சிரிப்பு சத்தம் ஒலித்தது.


சந்தானம் அருகில் இருந்த மற்றொருவரிடம் ஒரு கேள்வி கேட்டார். யானை ஒன்று வேகமாக ஓடிச்சென்று ரேஷன் கடையில் நின்றது முதலில் அது என்ன வாங்கும் என்று சொல்லு என்றார். அதற்கு பதில் இல்லாமல் விழித்தார். அதற்கு மிஸ்டர் பீன் பதில் அளித்தார். முதலில் மூச்சு வாங்கும் என்று. கல்யாண மண்டபத்தில் உள்ள அனைவரும் சிரித்தனர் அந்த பதிலில்.


அங்கிருந்த அனைவரையும் சிரித்த முகத்தோடு பார்த்த பொழுது மிஸ்டர் பீன் மற்றும் சந்தானத்திற்கும் அத்துணை மகிழ்ச்சி.


பிறரை சிரிக்க வைப்பது சாதாரணமான விஷயம் அல்ல. வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்று அன்றே நம் முன்னோர் கூறி சென்றனர். முடிந்த வரை நம்மை சுற்றி உள்ளோரை மகிழ்ச்சியாக சிரித்த முகத்தோடு இருக்குமாறு பார்த்து கொள்வோம்.


திருமணம் முடிந்து கிளம்புகையில் ஒருவர் சந்தானத்திடம் வந்து நான் உங்களை வந்ததில் இருந்து கவனிக்கிறேன் நீங்கள் ஏன் உங்கள் தங்க சங்கிலியை கடித்துக்கொண்டே இருந்தீர்கள் என்று அவரின் அதிமுக்கிய கேள்வியை எழுப்பினார். அதற்கு சந்தானம் அவரிடம் நான் ஒரு நகைச்சுவை நடிகன் என்று காட்டுவதற்காக என்று சொல்லி விடைபெற்று சென்றார்.



Rate this content
Log in

Similar tamil story from Comedy