மூன்றாம் உலக போர்
மூன்றாம் உலக போர்


நம் கற்பனைகளுக்கு அளவு என்பது கிடையாது. அதை தடுக்கவும் யாராலும் முடியாது. நம் உள்ளம் கவர்ந்த அமரேந்திர பாகுபலி மூன்றாம் உலக போரில் பங்குபெற்றால் என்ன நடக்கும்??? வாருங்கள் பார்ப்போம்.
மூன்றாம் உலக போர் மூண்டது. இமையமலைக்காக நடக்கவிருக்கும் மாபெரும் போர். பாகுபலி, கேப்டன் அமெரிக்கா, தார், சூப்பர்மேன், ஹல்க் போன்றோர் எதிரி படையினரை அடித்து துவம்சம் செய்து கொண்டிருந்தனர். இரு பக்கமும் உயிர் பலி அதிகம் தான்.
மந்திர சக்தி இயந்திர சக்தி சூழ்ச்சி வியூகங்கள் என்று ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு முயற்சியில் ஈடுபட்டு போரிட்டு கொண்டிருந்தனர்.
நாட்கள் நொடிகளாக கடந்து சென்றது. பதினெட்டாம் நாள் போரில் எதிரி படையினர் ஹல்க்கை தவிர மற்ற அனைவரையும் அவர்களின் வசம் வசப்படுத்தினர். பாகுபலி மற்றும் ஹல்க் இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை எதிரிகளின் செயலை கண்டு வீரர
்கள் திடுக்கிட்டனர். தோற்றுவிடுவோம் என்ற பயம் ஒட்டிக்கொண்டது. விரைவில் முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருந்தான் பாகுபலி. ஹல்க்கிடம் சில மூலிகை செடிகளை குறிப்பிட்டு அதனை உடனே கொண்டுவருமாறு கூறினான். ஹல்க் அவனை பார்த்தபொழுது "முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்.", என்று கூறினான்.
ஹல்க் துரிதமாக சென்று அந்த மூலிகைகளை பறித்து வந்தான். பாகுபலி அதனை அரைத்து அம்புகளில் தேய்க்குமாறு கட்டப்பாவிடம் கூறினான். அதன்படி பணிகள் வேகமாக சென்றது. ஒரே வில்லில் நூற்றுக்கும் மேற்பட்ட அம்புகளை எய்து எதிரிகளை துவம்சம் செய்தான் பாகுபலி. அவர்களின் தலைவனை சிறைமீட்டு, "இயற்கைக்கு காக்கவும் தெரியும் அழிக்கவும் தெரியும். இரண்டும் நாம் நடந்து கொள்ளும் விதத்தை பொறுத்து தான். " என்றான் பாகுபலி அவனுக்கே உரித்தான குரல் தொனியில்.
தன் நண்பர்களை வசியத்தில் இருந்தும் வெளிக்கொணர்ந்தான் பாகுபலி.