மார்கழி மாலை
மார்கழி மாலை

1 min

344
மார்கழி மாலை
மனதிற்கு இதமூட்ட
மதியும் மயங்கியது
மங்கை அவளின்
மதுரக் குரல் கேட்டு
மெல்ல தலை திருப்பி பார்க்க
மயில் போல் நடந்து வந்தாள்
மஞ்சள் தேவதை
மறைய போகும் சூரியனும்
மடி சாய மறுத்தது
மார்கழி மாலையில்
மிதந்து வரும்
மெல்லிசைப் பூவைக் கண்டு
மறுகணமே மறைந்துவிட்டாள்
மனதினை கொள்ளையடித்து விட்டு
மேகங்களுக்கு நடுவிலே...
மார்கழி மாலை
மறக்க இயலாமல் போனது
மண்ணில் வாழும் காலை வரை..