அப்பு
அப்பு


அன்று அந்த சர்க்கஸ் மைதானம் பரபரப்பாக இருந்தது. காரணம் வெளியூர் மற்றும் உள்ளூர் பள்ளி குழந்தைகள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி இது. பல்வேறு அரசியல் பிரமுகர்களும் பங்கேற்பதாக இருந்தது. அப்புவும் அதே பரபரப்புடன் சுற்றிக் கொண்டிருந்தான்.
அவனுடைய உடைகளை அணிந்துகொண்டு வெளியே வருகையில் குழந்தைகள் வர ஆரம்பித்திருந்தனர். அவனும் ஆர்வமாக இருந்தான். ஒரு பேச்சுக்குரல் அவனை கவனிக்கவைத்தது. கஸ்டடி பிளான் என்று பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் பார்வையும் சரியாக படவில்லை. அவர்களை பின்தொடர்ந்து கவனிக்க ஆரம்பித்தான்.
அவன் விஷயத்தை அறியும் முன்பே நிலைமை கைமீறி போய்விட்டது. யாரும் எதிர்பாராத விதமாக சட்டென்று துப்பாக்கி ஏந்திய 20 பேர் அனைவரையும் சுற்றி வளைத்துவிட்டார்கள். குழந்தைகளின் கழுத்தில் கத்திவைக்கப்பட்டிருந்தது. அனைவரும் அதிர்ந்தனர். அவர்களில் தலைவன் போல் இருக்கும் ஒருவன் ஆரம்பித்தான். தாங்கள் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் என்றும் தற்போது இந்தியா சிறைபிடித்துள்ள அவர்களின் தலைவரை விடுவிக்க வேண்டும் இல்லையெனில் குழந்தைகளை கொன்றுவிடுவதாகவும் மேலும் இன்னும் வெவ்வேறு இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் அது தன் வேலையை காட்டும் என்று மிரட்டி இருந்தனர்.
செய்வதறியாது நின்றனர் அனைவரும். அங்கு பாதுகாப்பிற்காக இருந்த காவலதிகாரிகளையும் சுட்டு
தள்ள ஆரம்பித்திருந்தனர். தான் ஏதாவது செய்தாக வேண்டும் என்று அப்பு எண்ணினான். அவர்களின் முன் போய் நின்று இந்த நிகழ்வுக்காக நாங்கள் மிக கடினமாக பயிற்சி எல்லாம் எடுத்துக்கொண்டோம் இப்பொழுது நீ மெரட்டுவதால் எல்லாம் வீணாகிவிட்டதே என்று பாவமாக கூறினான். அனைவரும் இவன் என்ன செய்கிறான் இப்படி லூசுத்தனமாக என்றே நினைத்தனர்.
அப்பு அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. தீவிரவாதிகள் சற்று கடினமாக அவனிடம் பேசினர். ஆனால் அவன் அவனுடைய முயற்சியை கைவிடவில்லை. மக்களை சரி வர ஆள்வதற்காகவே நாடுகள் பிரிக்கப்பட்டன. எந்த நாட்டில் தங்கவேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை மக்களுக்கு உண்டு. நம்மை பாதுகாக்க தான் சட்டம் இருக்கிறது. தவறு என்று தோன்றினால் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களிடம் கேக்க வேண்டும் அது இல்லாமல் அப்பாவி மக்களையோ குழந்தைகளையோ பணயமாக்க கூடாது என்று நகைச்சுவையில் அவனுக்கே உண்டான தனித்துவதில் கூறினான். அவன் கூறியதும் உண்மை சரி என்று புலப்பட தங்களின் செய்கைக்காக வருந்தி மன்னிப்பு கோரினர். குழந்தைகளையும் விடுவித்தனர். செய்த தவறுக்காக தான் அவர் தண்டனை அனுபவிப்பதால் நாங்கள் மேற்கொண்டு செய்வதற்கு எதுவும் இல்லை என்று கூறிவிட்டனர்.
விஷயங்கள் மற்றவர்களுக்கு சொல்லப்படும் முறை மிகவும் முக்கியம். எங்கு எப்படி பேசினால் அதற்கு பலன் கிடைக்கும் என்று யோசித்து செயலாற்ற வேண்டும்.