ஏழுகடல் தீவு
ஏழுகடல் தீவு


சக்திமான் அன்று ஏழுகடல் தீவு வழியாக பறந்து கொண்டிருந்தான். அவனும் அவனின் நண்பன் சிட்டியும் அங்கே உள்ள புதையலை எடுத்து மக்களிடம் கொடுக்க வேண்டும் என்று எண்ணியிருந்தனர். அதை பற்றி சிந்தித்து கொண்டிருந்தான். கீழே மக்கள் கதறும் சத்தம் அவனுக்கு கேட்டது. உடனே தரையில் இறங்கி பார்த்தான். அங்கே வேற்று கிரஹ உயிரினம் ஒன்று அவர்களின் குடிசையை எரித்து பயமுறுத்திகிண்டிருந்தது. பற்றி எரிந்து கொண்டிருந்த நெருப்பை அணைக்க முற்பட்டான். ஒரு சில வீடுகளை மட்டுமே மீட்க முடிந்தது. அங்குள்ள மக்களின் நிலையை பார்த்து அவன் கவகைக்குள்ளானான்.
மக்களை பிரச்சினைகளில் இருந்து விடுவிக்க எண்ணினான். அவனின் நண்பனான சிட்டி ரோபோவிடம் பேசினான். அவனும் உடனே வருவதாக கூறினான். சிட்டி வந்தபின் அவனே நேரில் வேற்றுகிரக உயிரினத்தை பார்த்தான். அவனை பார்த்தால் வேற்றுகிரக வாசிபோல் தெரியவில்லை. தன்னை போல் ஒரு ரோபோவாக இருக்க வேண்டும் மேலும் அதனை யாரோ தவறான முறையில் உபயோகிக்கிறார்கள் என்று புரிந்
துக்கொண்டான். சக்திமானிற்கும் தெரியப்படுத்துனான். இருவரும் சேர்ந்து திட்டம் தீட்டினர்.
சிட்டி அவனுடைய கருவியை வைத்து அந்த மர்ம ஜந்துவை செயலிழக்க வைத்து ஆராய ஆரம்பித்தான். அவன் நினைத்தது போல் அது ரோபோ தான். அதை இங்கே அனுப்பிவைத்ததற்கான நோக்கத்தையும் தெரிந்துகொண்டான். மிகப்பெரிய அரசியல்வாதி ஒருவன் விஞ்ஞானியிடம் ஏழுகடல் தீவை அவர் கைப்பற்ற வேண்டும் என்றும் அதற்காக ஒரு ரோபோவை உருவாக்க சொல்லியதும் தெரியவந்தது. மக்களிடம் இனிய எந்த ஆபத்தும் நேராது என்று நம்பிக்கை கொடுத்து அவர்களின் இருப்பிடத்தை சரி செய்து அவர்களுக்காகன புதையலை பத்திரமாக அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு பாதுகாப்பை உறுதி செய்து கொடுத்தபின் திரும்பினர்.
செல்லும் வலியில் அந்த அரசியல்வாதியின் வீட்டிற்கு முன்னால் தூள் தூளாக ஆக்கபட்ட ரோபோவை வீசி எரிந்து அதனோடு ஒரு கடிதத்தையும் இணைத்திருந்தனர். அதில் நாங்கள் இருக்கும் வரை மக்களுக்கு எந்த ஆபத்தும் நெருங்காது என்று குறிப்பிட்டுருந்தனர்.