கொடுமைகளைக் களைந்து விடு!
கொடுமைகளைக் களைந்து விடு!


அவனா என்னை லவ் பண்றேன்னு சொன்னான்!..........
ஆமாம்.....
நீ என்னிடம் அவனுக்கு தூதா?. .
ஆமா. வரக்கூடாதா?
நான் படிக்கணும்..சும்மா உட்காந்து சாப்பிடமுடியாது
கல்யாணம் பண்ணிட்டு படிக்க சொல்றான்
நாளைக்கு குறளகத்துக்கு வந்து நிற்க சொல்!
அப்ப சரி சொல்லப்போறியா?
நீ வராதே!
எப்பவும்போல சாப்பிடுகிற நேரம்தான்.
ஆமா.அதுதான் தேர்வுமுடிஞ்சுவர்ற நேரம்..
ரகு நேராக திலீப்பிடம் நிலையைச் சொன்னான்.
சரியான திமிர்பிடித்தவளா இருக்காளே......ஒருதடவை எல்லாரும் ருசி பார்த்துட்டு தூக்கி எறியலாம்னு பார்த்தா விடமாட்டார்கள் போலிருக்கு!
நாளைக்கு குறளகம் வர சொல்லி இருக்கா........
அங்கே சாப்பாடு சாப்பிடுவேன் ஹோட்டல்இருக்கா?
இருக்கு..ஆனால் விலை அதிகம்...அவ சாப்பிட மாட்டார்கள்
நான் ஓசியில் வாங்கி கொடுத்தாகூடவா?
அவங்க அப்பா கட்டிக்கொடுக்கிற பாக்சில்தான்தின்னுட்டு இருப்பா.....
சும்மா அவ முகத்தை திருப்பினால் இலட்சம்ரூபாய் தருவாங்கடா!
அப்ப நீ அவளை கல்யாணம் செஞ்சு குடும்பம் நடத்த பேசலையா?
அவகிட்ட அழகு மட்டும்தாண்டாஇருக்கு........
அவள் நல்ல குணமான பெண்.
அது யாருக்குடா வேண்டும்?குடும்பம்னு ஒரு சிறைக்குள் நான் சிக்க தயார் இல்லை.
அப்படி பணத்தை வீசி பெண்பிடிக்க உனக்கு அசிங்கமாக இல்லையா?நான் வர்றேன்..நாளைக்கு உன் பின்னாடி சுமத்தினா எனக்கும் எவனும் பெண் தர மாட்டான்.உன்னை போலிசுலதான்பிடிச்சுதரணும்.
போலிசுக்கு இலஞ்சம்கொடுத்தால்போதாதா!
நாட்டுல நடக்கிற கெட்டவிஷயங்களை கரெக்டா பிடிச்சிட்டு உன் விஷயங்களை சாதிச்சுக்கிற நீ இறந்தாலும் தப்பு கிடையாது எனக்கூறி கையில் இருந்த கத்தியால் குத்திக் கொன்றான்
லைட்ஸ் ஆஃப். அட்டகாசமா பண்ணித்தந்திருக்கீங்கஜி..இந்த படம் வெள்ளிவிழாதான்..என்றபடி வந்த டைரக்டரைப் பார்த்தபடி இருந்தான் நகுல்..