Jaga Maha

Crime

4  

Jaga Maha

Crime

கொலை

கொலை

2 mins
343


அது ஒரு நகர்புரம் அந்த நகரத்தின் ஒதுக்குபுறமான ஒரு பகுதியில் ஒரு இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு ஆடவனின் சடலம் நாய்களால் கடித்து குதறிய நிலையில் கிடக்க, அவ்வழியாகச்சென்ற சிலர் பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்...


காவல் துறையினர் வந்து பிரேதத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்...

அந்த பகுதியில் உள்ள வீடுகளில் அந்த வாலிபரை பற்றி விசாரிக்க யாருக்கும் எந்த தகவலும் தெரியவில்லை...

அந்த வழியில் இருந்த கடைகளிலும் விசாரிக்க எந்த தகவலும் தெரியாது குழம்பி போயினர்..


அந்த வாலிபரை பற்றிய விவரங்களும்

அறியமுடியாது திணற, அந்த வழக்கை

விசாரிக்க ஒரு திறமையான அதிகாரியை

நியமித்தார் காவல் ஆனையாளர்...


வந்த அதிகாரி தனது விசாரணையை முதலில் இருந்து ஆரம்பித்தார்..

அந்த வாலிபரின் சடலம் கிடந்த இடத்தை சுற்றி தனது தேடலை தொடங்கினார்..

ஒரு உதவி ஆய்வாளரையும் கான்ஸ்டபிள் இருவரையும் தனது உதவிக்கு வைத்து கொண்டு தனது விசாரணையை வழிநடத்திசென்றார் ...


அந்த சடலம் கிடந்த இடத்திலிருந்து சற்று தள்ளி ஓரு பள்ளி மாணவியின் சீருடையின் சிறுபாகம் மட்டும் முட்புதரின் செடியில் மாட்டி கிழித்து சென்ற அடையாளம் இருந்தது.

சற்று தள்ளி ஒரு மாணவியின் அடையாள அட்டையும் கிடைத்தது..

அதைவைத்து அந்த பள்ளிக்குச் சென்று தன் விசாரணையை ஆரம்பிக்க அந்த மாணவி பள்ளிக்கு வந்தே வாரக்கணக்கில் ஆக சந்தேகம் வலுத்தது.


அந்த மாணவியின் வீட்டு விலாசத்தை பள்ளியில் பெற்றுக்கொண்டு அந்த மாணவியின் வீட்டிற்கு சென்று பார்க்க முதலில் பார்க்க மறுத்த மாணவியின் தாயார், அந்த ஆய்வாளரின் பேச்சிற்கு கட்டுப்பட்டு சந்திக்க சம்மதித்தார்..


விசாரணையின் போது முன்னுக்குப்பின் முறனாகவே‌ பதிலித்த மாணவியை விட்டு பிடிப்பதென முடிவெடுத்த ஆய்வாளர், அவளுக்கு பிடித்த விஷயங்களை கேட்க அவளும் சற்று சகஜநிலைக்குவர திடீரென

அந்த வாலிபரின் புகைப்படத்தை அந்த மாணவி பார்க்கும் படி வைத்தார்...


அதை பார்த்ததும் அந்த மாணவியின் உடல் நடுங்க கண்டார்..

பிறகு மெதுவாக அவனை பற்றி விசாரிக்க

தான் பள்ளி செல்லும் வழியில் அவனை பார்த்திருப்பதாகவும்,

அன்று பள்ளி முடிந்துவீட்டிற்கு வரும் வழியில் தனது சைக்கிள் பஞ்சர் ஆனதால் தான் தள்ளிக்கொண்டு வரவும் அந்த வாலிபர் தனக்கு உதவி செய்வதாக கூறி சைக்கிளை பக்கத்தில்ஒரு கடையில் விட்டு விட்டு தன்னை அவனது ஸ்கூட்டியில் ஏற்றி கொண்டு வந்ததாகவும்.


யாரும் அற்ற அந்த பகுதியில் வாகனத்தை நிறுத்தி தன்னை பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் தான் அவனிடம் போராடி அவனை பிடித்து தள்ளியதில் அவன் கீழே கிடந்த கல்லில் மண்டை மோதி அங்கேயே மயங்கிய அவனை அப்படியே விட்டு அவனது வாகனத்தில் வீட்டிற்கு வந்ததாகவும் ஒப்புக்கொண்டாள்..


வழக்கு நீதிமன்றம் செல்ல மாணவியின் வயதையும் அந்த சம்பவம் நடந்த சூழலையும் கருத்தில் கொண்டு அது தன்னை பாதுகாத்துக்கொள்ள நடந்த முயற்சி மட்டுமே என்றும் அதனால் அச்சிறுமியை விடுதலை செய்வதாகவும் தனது தீர்ப்பை வழங்கியது நீதிமன்றம்...


இந்த கதையில் வரும் தீர்வு சரியானதா

என்று எனக்கு தெரியாது எனக்கு தோன்றியதை எழுதினேன் தவறாக இருப்பின் மன்னிக்கவும்..



Rate this content
Log in

Similar tamil story from Crime