Jaga Maha

Classics

4  

Jaga Maha

Classics

சொந்தவீடு

சொந்தவீடு

2 mins
207


நடை பாதையில் படுத்துறங்கும் மனிதன் சின்னதாக பழைய பேனர்கள் கொண்டு தனக்கான ஒரு வீடு கட்ட நினைத்து பழைய பேனர்கள், தார்ப் பாய் கொண்டு அந்த நடைபாதையில் அதிகமாக பயன் படாத இடமாகப் பார்த்து ஒரு ஓரத்தில் குடிசை போட்டுக்கொண்டு வாழ்ந்து வந்தார்,


பிறகு அவரைப் போல ஆதரவற்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இருவருமாக அந்த குடிசையில் குடியிருந்தனர்.அவர்களுக்கு குழந்தைகள் பிறந்தனர்.வாழ்க்கை அதன் போக்கில் தொல்லைகள் இன்றி செல்ல, வந்தது அவர்களின் முதல் சோதனை நடைபாதை ஆக்ரமிப்பு களை அரசு அதிகாரிகள் காலி செய்ய சொல்லி அறிக்கை விட தலையில் இடி விழுந்ததாக என்னிக் கலங்கினர்.


அது ஒரு நகர்புரம் ஆதலால் அங்கு வீட்டு வாடகை அதிகபடியா தலால் புறநகர் பகுதியில் வாடகைக்கு வீடு பார்த்தனர்.இதுவரை அதிக சம்பாத்தியம் இல்லாத அவரால் வாடகை முன்பணம் கொடுக்க இயலவில்லை.அந்த வீட்டின் உரிமையாளர் அவரது குழந்தைகளைப் பார்த்து பரிதாபப்பட்டு சரி நீங்க வாடகை மாத்திரம் கொடுங்கள் என்று கூறினார்.ஒரு அறையில் பாதிதடுத்து சமையலறையாக மாற்றி'யிருந்தனர்.


மற்ற தேவைகளுக்கு வீட்டின் கொள்ளை புறத்தில் அந்த வீட்டில் குடியிருப்பு வாசிகளுக்கு பொது கழிப்பறை மற்றும் குளியலறை இருந்தது. அவர்கள் தங்க எடுத்த வீட்டிற்கு அந்த பகுதியில் உள்ள வீடுகளை விட வாடகை அதிகமாக இருந்தது ஆனால் அந்த வீட்டில் இருந்த பாதுகாப்பு முறைமைகள் அவர்களின் பிள்ளைகளுக்கு ஏற்றதாக இருக்க அவர்களும் அங்கு வீடெடு'த்து அடுத்த நாளே பால் காய்ச்சி குடி புகுந்தனர்.


அங்கு வந்த சில மாதங்களில் இதுவரை தங்களுக்கு கிடைக்காத அரசு ஆவணங்கள் எளிதில் கிடைக்க வீட்டின் உரிமையாளர் உதவினார்.அதனால் அவர் மீது அவர்களுக்கு நல்ல மதிப்பு அதிகமாகியது.அவர்களும் வீட்டு உரிமையாளரின் குடும்பத்தாரோடு நல்லமுறையில் நட்பு பாராட்டினர்.நட்பு உற்ற உறவு எனும் முறையில் வளர்ந்தது. பிள்ளைகள் வளர்த்தனர் அவர்களை அவ்வூரில் உள்ள அரசுப்பள்ளியில் சேர்த்தனர்.


பெற்றோர் இருவரும் பிள்ளைகளுக்காக உழைத்தனர். இப்படியே நாட்கள் செல்லச் செல்ல பிள்ளைகள் வளர்த்தனர். இடப்பற்றாக்குறை ஆனது. இப்பொழுது அடுத்த யோசனையாக சொந்த வீட்டுக்கனவு தலை தூக்கியது.சிறுக சேமித்த பணம் கொஞ்சம் இருக்க மீதி கடன் வாங்கி வீடு வாங்க யோசனை பிறந்தது. அதை வீட்டு உரிமையாளரிடம் சொல்ல நல்லயோசனை நான் உனக்கு உதவுகிறேன் எனக்கூறினார் எப்படியோ முட்டி மோதி ஒரு இடத்தை வாங்கி அதில் கூறை வேய்ந்த வீட்டைக்'கட்டினர்.


அது ஒரு புரநகரைத் தான்டிய இட'மாதலால் அங்கு கம்மியான விலையில் இடம் கிடைக்க வீடுகட்டி புதுமனை புகுந்தனர்.அந்தநன்நாளில் அங்கு வந்திருந்த வீட்டின் உரிமையாளர் அவனிடம் ஒரு தொகையை கொடுத்தார். அவன் பதறி ஐயா நீங்கள் இதுவரை செய்த உதவியே நான் காலத்திற்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன், ஆகையால் இந்த ப்பணம் எனக்கு வேண்டாம் எனக்கூற, அதை மறுத்து இது உன் பணம் தான் நீ இருந்த வீட்டின் வாடகை போக மீதிப் பணம் எனக்கூற அவன் ஆச்சரியமாக பார்த்தான்.


ஆம் நான் உன்னை முதல் முறையாக பார்த்த போது உன்முன்கதையை கேட்ட போதே இதை நான் உனக்காக யோசித்து சேமித் தேன் நானே உனக்காக இந்த பணத்தில் உனக்காக ஒரு வீடு வாங்க இருந்தேன் அதற்கு முன் நீ முந்திக்கொல்லவே உன் முயற்ச்சியை தடுக்க வேண்டாமென விட்டுவிட்டேன் . இப்போது இந்த பணம் உன்னுடையது. இதை நீ உன் பிள்ளைகள் எதிர்கால சேமிப்பில் வைத்து விடு எனக்கூற கண்ணில் நீர் கோர்க்க அவரை இருக்க அனைத்துக் கொண்டான்.



Rate this content
Log in

Similar tamil story from Classics