STORYMIRROR

Jaga Maha

Classics

3  

Jaga Maha

Classics

அல்லி

அல்லி

1 min
223

அல்லி பெயருக்கேற்ப தன் குடும்பத்துடன் ஒட்டியும் ஒட்டாமல் இருந்தாள்...


கஷ்டபடும் குடும்பம் தான் தன்னால் இயன்ற வேலையை செய்து தனது குடும்பத்தை நடத்தி வந்தாள் அல்லி...


கூடப்பிறந்த பிறப்பு இரண்டையும் தன்னையும் விட்டு சென்ற தன் தாயை நினைத்து திட்டி தீர்த்தாள் மனதில்.,.


குடிகார தந்தைக்கு வாழ்க்கை பட்டு தன் கடமையை சரியாக செய்யாது பாதியில் தன் சந்தோஷம் ஒன்றே முக்கியமாக கருதி இளம் பிஞ்சுகளை தன் குடிகார கணவனிடம் விட்டுச்சென்ற தாயினால் தனது உறவுகள் தன்னையும் தன் உடன் பிறப்புகளையும் வார்த்தையால் வதைப்பது இப்பொழுதெல்லாம் பழகியிருந்தது....


ஓரளவு தன் உடன் பிறப்புகளான சகோதரர் கள் வளர்ந்திடவும் அவர்கள் மீதும் அதிக பாசம் வைக்காது தள்ளியே நிறுத்தி தன் கடமைகளை செய்திட்டாள்....


அல்லி பெயரைப் போலவே நல்ல குணமும் 

உண்டு அவளுக்கு திருமண பருவம் வரவும் சகோதரர்கள் இருவரும் தேடித் திரிந்து நல்ல மணமகனை தேர்ந்தெடுத்தனர் ...


தங்களுடைய குடும்ப சூழலை மறைக்காது

மணமகனிடம் சொல்லி சம்மதம் வாங்கிய பிறகு தான் தன் திருமணத்திற்கு சம்மதித்தாள் அல்லி....


புகுந்த வீட்டில் நல்ல பெயர் எடுக்க அவள் மிக மெனக்கெடவில்லை அவள் குணம் அப்படி அனைவரையும் மதித்து பார்த்து பார்த்து அனைவரது தேவையையும் பூர்த்தி செய்தாலும் யாரின் தனிப்பட்ட விஷயத்தில் தலையிடாமல் தனித்திருப்பாள்...


உதவி கேட்டால் அன்றி மற்ற உறுப்பினர் விஷயத்தில் தலையிட மாட்டாள்...


அவளுக்கும் குழந்தைகள் பிறந்தன தாயாக தனதன்பை செலுத்தி வளர்த்தாலும் ஏதோவொரு வெறுமை வாழ்க்கையில் அவளுக்கு இருந்து கொண்டு தான் இருக்கிறது வாழ்வில்....


அனைத்து உறவுகள் அன்பை பொழிந்தும்

தனது சிறுவயதில் தன் தாயினால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் உறவுகளுடன் ஒட்டாது மனதலவில் தனித்தே இருக்கிறாள்....


எதுவும் நிறந்திரமில்லை யாரும் கடைசி வரை தன்னுடன் இருக்க போவதில்லை என்று நினைத்து தனித்திருந்தால் தண்ணீரில் அல்லி போல இந்த அல்லியும்....



Rate this content
Log in

Similar tamil story from Classics