Jaga Maha

Classics

4  

Jaga Maha

Classics

காக்கைக்கும் தன் குஞ்சு

காக்கைக்கும் தன் குஞ்சு

2 mins
183


      

          

            ஆம் அவரவர் பிள்ளைகள்                   

            அவரவர்க்கு உசத்தி.

       

 அது ஒரு ஒண்டி குடித்தனம். அங்கு ஐந்தாறு குடும்பங்கள் வாழ்ந்து வந்தனர்.

அதில் ஒவ்வொரு குடும்பத்திலும் இரண்டு

குழந்தைகள் இருந்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளே

ஒற்றுமையின்றி இருக்கையில் அங்கு

இருந்த குழந்தைகள் ஒற்றுமையாக

இருந்தனர், குடும்பங்களின் பெரியவர்களும் கூட ஒற்றுமையுடன்

இருந்தனர்.


அந்த வீட்டின் மாடியில் ஒரு பெரிய போர்ஷன் காலியாக இருக்க அதில் சற்று

வசதி வாய்ந்த குடும்பம் ஒன்று குடி வந்தது.

ஆடம்பரமான பொருட்களுடன் அந்த வீட்டில்

குடியேறியது, அந்த குடும்பத்தில் ஒற்றை ஆண் பிள்ளையும் அப்பா அம்மா வேலைக்குச் செல்பவர்களாக இருந்தனர்.


அங்கு குடிவந்த புதிதில் யாரோடும் ஒட்டாதிருந்த அந்த குடும்பம் பிறகு

அவர்களின் தேவைக்கு மட்டும் பேசி பழகினர்.

அந்த வீட்டின் பிள்ளையும் கூட தேவைக்கு

மட்டுமே பேசிப்பழக அவர்கள் அப்படித்தான்

என கண்டும் காணாது விட்டனர் மற்ற

குடும்பங்கள்.


நாட்கள் நகர ஊரடங்கு காலம் ஆரம்பிக்க

எல்லா குடும்பங்களின் குழந்தைகள்

பெரியவர்கள் என வீட்டில் அடைய

எவ்வளவு நேரம் வீட்டிற்குள் அடைவது

அனைத்து பிள்ளைகளும் அந்த வீட்டின்

மாடியில் தஞ்சம் விளையாட தஞ்சம் புகுந்தனர்.

ஒற்றுமையாக இருந்த அந்த குழந்தைகளை

பார்த்து பொறாமை கொண்ட அந்த புதிதாக

வந்த சிறுவன் ஒவ்வொரு குழந்தையாக

தன்னிடம் இருந்த விளை உயர்ந்த விளையாட்டு பொருட்களை கொடுத்து

தன்னிடம் நெருங்கச் செய்தான்.


அந்த குடித்தனத்தில் ஒரு ஏழைக் குடும்பம்

வாழ்ந்து வர அவர்களின் பிள்ளைகள் இருவர் இருந்தனர்.

அந்த சிறுவன் இவர்களிடம் மட்டும் ஒதுக்கத்தை காட்டிட மற்ற குழந்தைகளும்

அவர்களை ஒதுக்க ஆரம்பித்தனர்.


இவையனைத்தும் கண்ட பெற்றோர்கள்

இவை நல்லதல்ல என்று நினைத்து குழந்தைகளுக்கு புரிய வைக்க முயன்றனர்.

குழந்தைகளின் பெற்றோர் தனித்தனியாக

தங்கள் குழந்தைகளிடம் விபரம் கேட்க

அவர்கள் கை காட்டியது அந்த புதிய

குழந்தையை தான்.


ஆதலால் அந்த குழந்தையின் தாயிடம்

சொல்லி முறையிட என் மகன் அப்படிதான்

தராதரம் பார்த்து தான் பழகுவான்.

அவனோட ஸ்டேடஸ்க்கு ஏத்த மாதிரி அவன்

வளருகிரான் அதில் தப்பென்ன இருக்கு

நாளைக்கு வீட்டில் இருந்து விளை உயர்ந்த

பொருட்களை உடைத்து சேதப்படுத்தினால்

அவங்களால் வாங்கி தரமுடியுமா என்று

கேட்க தவறு குழந்தை மீது அல்ல தாய் மீது

என்று நினைத்து அங்கிருந்து சென்றனர்.


இவையனைத்தும் கேள்வி பட்டு அந்த

ஏழை பெற்றோர் தங்கள் பிள்ளைகளை

தங்கள் வீட்டிற்குள் அவர்களின் திறன்

மேம்பட கைவினை பொருள்கள் செய்ய

பழக்கினர்.


தடைக்காலம் நீள அவர்கள் செய்த கைவினை பொருட்களின் என்னிக்கை

கூடி வீட்டில் வைக்க இடமில்லாமல்

என்ன செய்வது என்று யோசிக்க

மொபைலில் வீடியோ எடுத்து

அதை சந்தைப்படுத்தினான் அந்த வீட்டின் சிறுவன்.

அதன் மூலம் அவனுக்கு வருமானம்

வர தன் பிள்ளையின் திறன் கண்டு

பெற்றோர் மகிழ்ந்தனர்.



Rate this content
Log in

Similar tamil story from Classics