Jaga Maha

Classics

3  

Jaga Maha

Classics

திருநம்பி

திருநம்பி

4 mins
289


       சென்னை மெரினா கடற்கரை மாலை நேரம் ஞாயிறு விடுமுறை தினம் வேறு கூட்டம் அலை மோதியது.

கடற்கரை மணலில் அமர்ந்து கடலை வெறித்தபடி நான்.....

என்னை சுற்றி என்ன நடக்கிறது யார் யார்

இருக்கின்றனர் என்று எதுவும் என் சிந்தைக்கு எட்டவில்லை தூரக் கடலையும்,

நீலவானையும் வெறித்திருந்த என்னுள்

ஆயிரம் கேள்விகள் விடை தெரியாக்கேள்விகள்.

நேரம் போவது தெரியாமல் அமர்ந்திருந்த

என் சிந்தையை கலைத்தது என் மொபைலில் ஒலித்த என் தாயின் அழைப்பு

பட்டுமா எங்கிருக்கீங்க செல்லம் பட்டுகுட்டி

பட்டுமா பட்டுகுட்டி என என் தாயின் குரலில்

ஒலித்த என் மொபைல் அழைக்க எடுத்துப்

பார்க்க என் தந்தை தான் அழைத்திருந்தார்..

எடுத்து பதிலளிக்க மனமில்லாமல் கட் செய்து மறுபடியும் ஹேன்ட்பேக்கில்

வைத்து எழுந்து மணலை தட்டிவிட்டு என்

மனக்குழப்பங்களுக்கு சிறிது நேரம் விடை

கொடுத்து என் பல்சர் பைக் நின்றிருந்த

இடத்திற்கு சென்று பைக்கை ஸ்டார்ட் செய்து வீட்டிற்கு கிளம்பினேன்.

முக்கால் மணிநேரத்தில் வரவேண்டிய

தூரத்தை,ஒன்றரை மணி நேரம் கழித்து

வந்திருக்கின்றேன்.

என்னை பார்த்து கதவை திறந்து கொண்டு

ஓடிவந்த என் தந்தை பட்டுமா என்னடா ஏன்

ஃபோன் எடுக்கலை நான் பயந்து போய்ட்டேன் டா என்று என் மீதான அன்பில் கேட்டதும் நான் கறைந்தே போனேன்.

அந்த பாசத்திற்கு முன் என் மனக் குழப்பங்களுக்கு சற்று முற்றுப்புள்ளி வைத்து, அப்பா ஏன் இவ்வளவு பதற்றம் படுறீங்க எனக்கென்ன ஆகப்போகிறது.

நான் டிரைவிங் ல இருக்கும் போது ஃபோன்

எடுக்க மாட்டேன் னு தெரியுமில்லையா பா

உங்களுக்கு.

அதுமட்டுமில்லாமல் இன்னிக்கி டிராபிக்

அதிகம் பா மெட்ரோ ட்ரைன் காக அங்கு அங்கு தோண்டும் பணி வேறு நான் என்ன சின்ன குழந்தை யா பா என்று சிரிக்க

அப்பா முகத்தில் சற்றே தெளிவு.

சரி ப்பா உள்ள விடும் ஐடியா இருக்கா

இல்லை பணஷ்மென்ட் தர போரிங்களா

என்று அப்பாவை பார்த்து தலை சாய்த்து கண்ணடித்து நான் கேட்டதும் அப்பா சிரித்து

போக்கிரி பொண்ணே என என்னை அனைத்துக்கொள்ள இருவரும் வீட்டிற்குள்

சென்றோம்.

அப்பாவும் நானும் சேர்ந்து இரவு உணவை

எடுத்துக்கொண்டு அப்பாவின் அறைக்குச்

சென்றோம் அங்கு அம்மா படுக்கையில்

இருந்தவாறே என்னை பார்த்து சற்று

கோபமாக முகத்தை வைத்துக்கொண்டு

ஏன் வர லேட் என வாய் குளரியபடி கேட்க.

என் கண் கரித்துக்கொண்டு வர என்னை

சமாளித்து அது டிராஃபிக் ல மாட்டிகிட்டேன்

மா இனி லேட் பண்ணாமல் வந்திடுவேன்

என்று கூறி அவரை தூக்கி அமரவைத்து

அவருக்கு கொண்டு வந்த இட்லியை எடுத்து தட்டில் வைத்து ஊட்டப்போக.

அப்பா என்னை தடுத்து என் மனைவிக்கு

நான் தான் ஊட்டுவேன் என உரிமை போராட்டம் நடத்த எனக்கு சற்று வருத்தமாக

இருப்பினும் அவரின் பாசத்தை புரிந்து கொண்டு அவரிடம் தட்டை நீட்ட அதை

அவர் சிரித்து கொண்டே வாங்கி அம்மாவிற்கு ஊட்டிவிட துவங்கினார்.

நான் மெத்தையின் அருகே சேர் எடுத்துப்

போட அப்பா அதில் அமர்ந்து ஊட்டிக்கொண்டிருந்தார் நான் சுவற்றின்

ஓரமாக இருந்த சோஃபாவில் அமர்ந்து

அவர்களிடம் அன்றைக்கு நடந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டிருந்தேன்.

பிறகு நானும் அப்பாவும் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு அந்த பாத்திரத்தை எடுத்து

வைத்து விட்டு வந்து அம்மாவிற்கு பெட் பேன் வைத்து அவர் இயற்கை உபாதை கழிக்க அதை சுத்தம் செய்து அவருக்கான

மருந்துகளை கொடுத்துவிட்டு எனது அறைக்கு வந்தேன்.

எனது அறைக்கு வந்ததும் எனை சற்று நீங்கிய குழப்பம் மறுபடியும் எனை ஆளத்துவங்கியது.

நான் யார் என என்னை நானே கேட்டுக் கொள்கிறேன். கண்ணாடி முன் நின்று

என்னை பார்த்து நானே என்னை கேட்கிறேன் நான் யார்.

என் குழப்பத்திற்கு காரணம் நானே, ஆம்

நான் ஒரு பெண்ணாக இருந்தாலும் மனதளவிலும் உடலில் ஹார்மோன் மாற்றங்களால் ஆணாக மாறியவள்.

திரு நம்பி என் அடையாளத்தை இந்த சமூகத்திற்காகவும் என் வயதான பெற்றோருக்காகவும் மறைத்து வாழும்

துரதிர்ஷ்டசாலி.

என் மனதிற்கு பிடித்த விஷயங்களை

வெளிப்படையாக செய்ய முடியாது

தடுமாறும் மூன்றாம் மாற்று பாலினத்தவள்.

இதுவரை எனது மாற்றத்தை மறைத்து

வைத்த என்னால் இனி மறைக்க இயலாது

என் தந்தை எனக்கு திருமண ஏற்பாடுகள்

செய்ய ஆரம்பித்து விட்டார் இதில் எனக்கு

சிறிதும் உடன் பாடு இல்லை.

அதற்காகவே இன்று வேலைக்கு மட்டம்

போட்டு ஹார்மோன் சம்பந்தப்பட்ட

மருத்துவரை பார்க்க சென்றிருந்தேன்.

என்னை பரிசோதித்த மருத்துவர்

எனது பீரியட்ஸ் சுழற்சி முறை குறித்து

கேட்க அது சரியாக எனக்கே நினைவில்

இல்லை வெகு மாதங்கள் ஆயிற்று

அம்மாவின் உடல் நலம் குன்றி போணதிலிருந்து என் மாத சுழற்சியை

கவணிக்க தவறியிருந்தேன்.

இதற்கு வைத்தியம் என்றால் உடல் உறுப்பு

மாற்று சிகிச்சை, மற்றொன்று மனோதத்துவம்.

இதில் உனக்கு எது தேவையோ அதை

நீயே முடிவு செய் எனக்கூற அந்த குழப்பமே

என்னை வதைத்துக் கொண்டிருந்தது .

நெடுநேரம் விழி மூடி படுத்திருந்த நான்

நித்ரா தேவியின் கருணையால் எப்போது

உறங்கினேன் என்று தெரியாமல் உறங்கி

போனேன்.

பொழுது புலர்ந்தது என் மனமும் தெளிந்த

நீரோடையாக இருந்தது.

மெல்ல எழுந்து வேலைகளை முடித்து விட்டு

என் பெற்றோர் அறைக்கு சென்று பார்க்க

ஆயாம்மா வந்திருந்தார்.

அவருடன் சேர்ந்து அம்மாவிற்கான பணிவிடைகளை செய்து அவருக்கு உடை

மாற்றி அமரவைத்து வெளியே வந்த போது

அப்பா கோவிலுக்கு சென்று வந்திருந்தார்.

ஆயாம்மா கிளம்பியதும் அனைவரும்

சேர்ந்து சாப்பிட்டுவிட்டு எடுத்து வைத்து

விட்டு மெல்ல பேச்சை ஆரம்பித்தேன்.

அப்பா அம்மா நான் ஒரு விஷயத்தை

சொல்வேன் ஆனால் அதை நீங்கள் எப்படி

எடுத்துப்பீங்கன்னு தெரியலைனு சொல்ல.

என்ன டா புதிர் போடுர யாரையாவது

காதலிக்கிறியா எனக்கேட்க

எனக்கு அவரின் எதிர்பார்ப்பும் ஆசையும்

என்னை கலங்கச் செய்தது.

எனக்குள் தைரியத்தை வரவழைத்து கொண்டு மெல்ல கூற ஆரம்பித்தேன்.

அப்பா எனக்குள் நிறைய ஹார்மோன்

மாற்றங்கள் நிகழ்கின்றன.

நான் பெண்ணாக பிறந்து ஆணாக மாறிக்கொண்டிருக்கிறேன் இந்த விஷயம்

தான் என்னை அரித்துக்கொண்டிருந்தது.

என நான் கூறி அவர் முகம் பார்க்க.

அப்பாவிடம் பேரமைதி அம்மாவின் கண்கள்

கண்ணீர் வற்றாமல் வடிந்து கொண்டிருந்தது.

உனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை னா நேராக சொல் டா எதுக்கு இல்லாததை

எல்லாம் சொல்ற எனக்கேட்க.

நான் மருத்துவரை சந்தித்ததை கூறி

எனது மெடிக்கல் ரிப்போர்ட் காட்ட

பிறகு விதி விட்ட வழி இதுவரை பெண்ணாக இருந்த இனி பையனா இருக்கப்போற அவ்வளவு தானே விடும்மா

பார்த்துக்கலாம் என்று அவர் எனக்கு ஆறுதல் கூறி தலை கோதிச்செல்ல

எனக்கு புதுத் தெம்பு வந்தது.

நாட்கள் செல்லச் செல்ல என்னை நானே மாற்றிக்கொண்டிருந்தேன்.

என் நீண்ட கூந்தலை அழகாக பாய் கட்

செய்து கொண்டேன். பார்க்க பெண்

தோற்றத்திலும் மனதில் ஆணாகவும்

வலம் வந்தேன் என் மீதான பாசத்தை

என் பெற்றோர் எள்லளவும் குறைக்காது

அதே பாசத்துடன் இருந்தனர்.

நான் மனோதத்துவ நிபுணர்கள் ஆலோசனைகள் பெற்று வருகிறேன்

அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் தான் நான் அவரை சந்திக்க நேர்ந்தது.

அவரின் பெயர் ஆதிரன். நாங்கள் முதலில்

அறிமுகம் ஆனது மனோதத்துவ முகாமில்

என்னை போன்றே அவரும் மூன்றாம்

பாலினத்தை சேர்ந்தவர் ஆகையால்

எங்கள் பழக்கம் பின்னர் ஒருவருக்கு ஒருவர் பிடித்து போக இதோ இன்று

எங்கள் திருமணம் மிகவும் எளிமையாக

ரிஜிஸ்டர் ஆஃபிஸில் முடிந்தது.

பிறகு எங்களுக்கு தெரிந்த ஆஸ்ரமத்தில்

மதியம் லஞ்ச் பிறகு எங்களுக் கென ஒரு

பெண் குழந்தை யை தத்தெடுக்க முடிவு

செய்து அதன் படியே எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டோம்.

அனைவரும் உணவை முடித்துக் கொண்டு

அலுவலக அறையில் நான் என் கணவர்

அவரின் பெற்றோர் எனது பெற்றோர்

என என் சொந்தங்கள் நிறைந்திருக்க

இதோ வந்து விட்டாள் என் மகள் அழகு

தேவதை என்று ......



Rate this content
Log in

Similar tamil story from Classics