Find your balance with The Structure of Peace & grab 30% off on first 50 orders!!
Find your balance with The Structure of Peace & grab 30% off on first 50 orders!!

Arul Prakash

Crime

5.0  

Arul Prakash

Crime

காஸ்லி பிச்சைக்காரன்

காஸ்லி பிச்சைக்காரன்

6 mins
35.9K


ஒருத்தன் பெயர் பிச்சை, ஆனா பழகனும்னு, பேசுனம்னு நினைக்கிறது எல்லாம் பணக்காரங்க கூட, ஏன், எதுக்குனு ஒரு சீன பார்த்து தெரிஞ்சிப்போம். 


ஒரு பெரிய பணக்கார பிஸ்னஸ் மேன், அந்த பிஸ்னஸ் மேன் கூட பார்ல ஒரு பேச்சு கொடுத்து, பேச ஆரம்பிக்குறான் பிச்சை. நல்லா பேசிக்குறாங்க ரெண்டு பேரும், அப்பறம் பிச்சை தன்னோட வழக்கமான டயலாக்க பேச ஆரமிக்கிறான் 


பிச்சை : சார் 


பிஸ்னஸ் மேன் : சொல்லு பா. 


பிச்சை : நீங்க எவ்ளோ பெரிய பணக்காரரு 


பிஸ்னஸ் மேன் :  ஆமா பா 


பிச்சை : உங்களுக்கு 2 கோடி ரூபாய்லாம்

பிச்ச காசு இல்ல சார் . 


பிஸ்னஸ் மேன் : ஹா ஹா ஆமா பா.


பிச்சை கையேந்தி நிக்குறான், ஒரு பிச்சைக்காரனை போல. 


பிஸ்னஸ் மேன் : ஏன் பா, பிச்சைக்காரனை போல, கையேந்தி நிக்குற. 


பிச்சை : அந்த ரெண்டு கோடி ரூபாயை, கைல பிச்சையா போட்டீங்கனா, எடுத்துட்டு போய்டுவேன். 


பிஸ்னஸ் மேன் : அடி செருப்பால, ஒரு பேச்சுக்கு சொன்னா, நிஜமாவே கேட்குறான், ஓடி போ நாயே. 


இது தாங்க நம்ம பிச்சையோட வேலையே,

ஒரு பணக்காரனையும் விடாம இந்த வேலைய பண்ணுவான். பிச்சை தான், 2 கோடி கேட்கும் கொஞ்சம் காஸ்லி பிச்சை  



இவன் ஏன் இப்படி பண்ணிட்டு இருக்கான்னு பாத்தா, ஒரு சாமியார் இவன் கிட்ட உனக்கு இப்ப நல்ல நேரம், நீ கோடிஸ்வரன் ஆக வாய்ப்பு இருக்குது, ஒரு பணக்காரன் கிட்ட, கோடி ரூபா கேட்ட கூட உடனே தர வாய்ப்பு இருக்கு அவ்ளோ நல்ல நேரம்னு சொல்லிட்டாரு. அதனால இவன் இப்படி பண்ணிக்கிட்டு திரியிறான். 



ஒரு பணக்கார பிஸ்னஸ் மேன் இருக்காரு, 

பேரு சிவநாத். இவர்கிட்டயும் பிச்சை அவன் கைவரிசைய காட்டிடான். இவருக்கு அம்மா, அப்பா, பொண்டாட்டி, பசங்க, தம்பி பேரு அகத்தியன், அகத்தியன் மனைவி, எல்லாரும் ஒரே வீட்ல இருக்காங்க. சிவநாத், பிச்சை பண்ண விஷயத்தை சொல்லி சிரிக்கிறாரு, அதை என்னனு பாப்போம். 


சிவநாத்: ஒருத்தன பாத்தேன் வாக்கிங் போகும் போது, திடிர்னு வந்து பேச்சு கொடுத்தான், நல்லா பேசிகிட்டு இருந்தான், உடனே நீங்க எவ்ளோ பெரிய பணக்காரர் சார்னு சொன்னா, உங்களுக்கு 2கோடி ரூபா பிச்சை காசுலனு சொன்னா, ஆமப்பானு சொன்ன, உடனே அந்த பிச்சை காச எனக்கு பிச்சையா போடுங்க சொல்லிட்டு நிக்குறான். விரட்டி விட்டுட்டு வந்தேன். 


சொல்லிட்டு சிவநாத் அவர் குடும்பத்தோட சிரிக்கிறாரு. சிவநாத் அவர் தம்பி அகத்தியனை பாத்து, உன்ன போலவே உதவாக்கரை போலடானு சொல்லிட்டு அவங்க குடும்பமே சிரிக்குது. அகத்தியனும், அவர் மனைவியும் மட்டும் சோகமா முகத்தை வச்சி இருக்காங்க. 


சிவநாத் இருக்கற இடம், பெரிய பணக்காரங்க வாழற இடம். ஒரு நாள் அவர் வீட்டு பக்கத்து நண்பர்கள் எல்லாம் சந்திச்சு பேசிட்டு இருக்காங்க, அப்போ சிவநாத், தன்கிட்ட பிச்சைனு ஒருத்தன் 2கோடி ரூபா பிச்ச கேட்டான்னு சொல்லி சிரிக்கிறாரு. அதை கேட்டதும் அவங்க நண்பர்கள் எல்லாருக்கும் ஷாக் ஆகுறாங்க. ஏன்னா அவங்க நண்பர்கள் கிட்டயும், பிச்ச 2 கோடி ரூபா கேட்டதா அவங்க நண்பர்கள் சொல்ராங்க.


 இந்த பிச்சை, இதே வேலையா தான் இருக்கானா, இவனுக்கு நல்ல பாடம் கத்து தரணும்னு சிவநாத் முடிவு பன்றாரு. போலீஸ் ஸ்டேஷன்ல பிச்சைனு ஒருத்தன் என் கிட்ட 2 கோடி ரூபா பிச்ச கேட்டான், நான் தரல. ஆனா இப்போ 2 கோடி ரூபா என் கார்ல வச்சது காணும்னு ஒரு பொய் complaint கொடுக்குறாரு.அதுவும் எனக்கு பிச்சை மேல தான் சந்தேகமா இருக்குனு சொல்லறாரு. பணக்காரங்க ஒரு complaint கொடுத்தா, எந்த அளவுக்கு ஒருத்தன அடிச்சி தோலை உரிப்பாங்களோ , அதே மாதிரி பிச்சையை போலீஸ்காரங்க, காசு எங்கனு கேட்டு வச்சு செஞ்சுட்டாங்க. 


பிச்சை அடி வாங்குனது தெரிஞ்சு சிவநாத்க்கு ஒரே சந்தோசம். உடனே சிவநாத்தும் அகத்தியன்னும் போலீஸ் ஸ்டேஷன் போய் இன்ஸ்பெக்டர் கிட்ட, 


சிவநாத் to இன்ஸ்பெக்டர் : சாரி சார், என்னோட 2 கோடி திரும்ப கிடைச்சிடிச்சி, என் தம்பி அகத்தியன் தான் மறந்து வேற ஒரு இடத்துல வச்சிட்டான். 


இன்ஸ்பெக்டர் : என்னங்க சார் விளையாடுறிங்களா, அண்ணனும் தம்பியும். உங்க complaint நாள ஒருத்தன பிரிச்சி மேஞ்சு இருக்கோம். 


சிவநாத் : சாரி சார், அடி வாங்கணவனோட

மருத்துவ செலவ நாங்க பாத்துகிறோம், உங்களையும் கவனிக்குறோம். இந்த கேச க்ளோஸ் பண்ணிடுங்க. 


இன்ஸ்பெக்டர் : அப்போ சரி சார். 


சிவநாத் : எல்லாம் என் தம்பி உதவாக்கரைனால தான். 


இன்ஸ்பெக்டர் : சரி சார் விடுங்க, அவர் முன்னாடியே திட்டுறீங்க. 


constable to பிச்சை : உன்ன எந்த காசுக்கு அடிச்சாங்களோ, அந்த காசு கிடைச்சிடிச்சி. 


பிச்சை : பணக்காரங்க என்ன பண்ணாலும் தப்பு இல்லையா இந்த உலகத்துல. 


சில நாட்களில் அகத்தியன் பிச்சைய பாக்க போறான். 


அகத்தியன் to பிச்சை : என் பேரு அகத்தியன், பிஸ்னஸ் மேன் சிவநாத் தம்பி. 


பிச்சை : ஓ என்ன போலீஸ் ஸ்டேஷன்ல அடி வாங்க வச்ச குரூப்பா. 


அகத்தியன் : நீ ஏன் அடிவாங்குனனு தெரியுமா. 


பிச்சை : நீ காச மறந்து போய் எங்கயோ வச்சிட்டு, காணும்னு சொன்னதால தான 


அகத்தியன் : அது தான் இல்ல, நீ எல்லார் கிட்டயும் 2 கோடி கேட்ட இல்ல அதுனால உனக்கு பாடம் புகுட்ட, பொய் complaint கொடுத்து அடிவாங்க வச்சான் எங்க அண்ணன். 


பிச்சை : யோவ் காசு இல்லனு, இல்லனு சொல்லுங்கயா, அதை விட்டுட்டு போலீஸ் வச்சி அடிப்பீங்களோ. 


அகத்தியன் : உனக்கு எங்க அண்ணன பழி வாங்குனுமா. 


பிச்சை : என்ன 


அகத்தியன் : பழி வாங்குனுமா. 


பிச்சை : ஆமா, என்ன பண்ணலாம் 


அகத்தியன் : எங்க அண்ணன கடத்தி, வீட்ல பணம் கேட்கலாம். 


பிச்சை : நில்லு நில்லு, நீ ஏன் உங்க அண்ணன பழி வாங்கணும் நினைக்கிற. 


அகத்தியன் : எங்க அப்பாவோட பிஸ்னஸ், அவன் மட்டுமே பாத்துகிறான், என்ன ஒரு உதவாக்கரைனு முத்திரை குத்தி ஓரங்கட்டிட்டான். 


பிச்சை : கண்டிப்பா உங்க அண்ணன தூக்குறோம். 


அகத்தியன் : கண்டிப்பா தூக்குறோம். 


பிச்சை : எப்படி கடத்துறோம், எவ்ளோ காசு கேட்குறோம். 


அகத்தியன் : எப்படி கடத்துறோம்னா, எங்க அண்ணன் கார்க்கு டிரைவர புதுசா தேடிகிட்டு இருக்கோம், நீ புது டிரைவர் மாதிரி வந்து, முகத்துல அடிபட்டு இருக்குனு ஒரு துணிய முகத்துல கட்டிக்கோ, கொஞ்சம் தூரம் கார் ஓட்டிட்டு போய், அப்பறம் எங்க அண்ணன் முஞ்சில மயக்கம் மருந்து spray அடிச்சிடு. அப்படியே கடத்திட்டு போய் ஒரு எடுத்துல வச்சிடு. மறந்தும் கூட முகத்தை காமிச்சிடாத. 


பிச்சை : ஐடியா நல்லா இருக்கு. எவ்ளோ காசு கேட்கணும். 


அகத்தியன் : 4 கோடி கேளு, உனக்கு 2 கோடி, எனக்கு 2 கோடி. 


பிச்சை : ஓகே பா டன் 


பிச்சை, சிவநாத்தை கடத்தி, ஒரு வீட்ல வச்சிட்டு, சிவநாத் வீட்ல காசும் கேட்டுட்டான். 


காசு எப்படி புரட்டுறதுனு, சிவநாத் வீட்ல டிஸ்கஷன் போய்ட்டு இருக்கு. 


அகத்தியன் அப்பா to அகத்தியன் : டேய், கெஸ்ட் ஹவுஸ்ல இருக்க கருப்பு பணத்த கொடுத்து, சிவநாத்த வீட்டுக்கு கூட்டிட்டு வா. கடத்துனவன் கேட்ட மாதிரி நைட் 8 மணிக்கு போ. ஆபீஸ் கணக்குல, காசு கரெக்டா வர மாட்டுது, அது என்னனு கொஞ்சம் பாரு. 



கடத்துனவன் கேட்ட காசு நைட் 8 மணிக்கு கொடுக்கணும், அது வரைக்கும் ஆபீஸ் கணக்கு ஏன் ஒதைக்குதுனு பாத்தா, ஆபீஸ் பணம் 3 கோடி ராமநாதன் அடிச்சுட்டான். 


அகத்தியன் to ராமநாதன் : யோவ் நீ அடிச்ச காச நான் கண்டுபுடிச்சிட்டேன், ஒழுங்கா அந்த காச கட்டிடு, உன்ன அண்ணன் கிட்ட சொல்ல மாட்டேன். 


ராமநாதன் : சார் இப்போதைக்கு என்கிட்ட காசு இல்ல, ஒரு 3 கோடி கொடுத்து ஹெல்ப் பண்ணீங்கனா, ரெண்டு நாள்ல 6 கோடியா திருப்பி தரேன். 


அகத்தியன் : 6 கோடியா, உறுதியா சொல்றியா. 


ராமநாதன் : ஆமா சார் 


அகத்தியன் : கொஞ்சம் டைம் கொடு, நான் சொல்றன். 


அகத்தியன் பிச்சைக்கு கால் பண்ணி பேசுறான் 


அகத்தியன் : யோவ் என்னயா, உனக்கு 2 கோடி வேணும்மா இல்ல 3 கோடி வேணுமா 


பிச்சை : என்னயா சொல்ற 


அகத்தியன் : ஆமா எங்க ஆபீஸ்ல ஒருத்தன் பணம் 3 கோடி கையாடல் பண்ணி என்கிட்ட மாட்டிகிட்டான், அவன் கிட்ட இப்ப உடனே காசு இல்லையா திரும்ப கற்றத்துக்கு. அதுனால நம்ம கிட்ட 3 கோடி கேட்குறான், ரெண்டு நாள்ல 6 கோடியா திரும்ப தருவானாமா. 



பிச்சை : எனக்கு ஓகே யா. ஆனா மீதி இருக்க 1 கோடி ல எனக்கு 50 லட்சம், மொத்தமா எனக்கு 3 அரை கோடி, உனக்கு 3 அரை கோடி. 


அகத்தியன் : ஓகே யா 



அகத்தியன், ராமநாதன்க்கு 3 கோடி தந்துட்டான். 



அகத்தியன் அவங்க அண்ணன நைட் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுறான். 


அப்பறம் 1 நாள் கழித்து, அகத்தியனுக்கு காசு கிடைக்க 1 நாள் தான் இருக்குது, நம்ம பணக்கார ஆக போறத பார்ட்டி வச்சு கொண்டாடலாம்னு பிச்சை கூப்பிடுறான். 


பிச்சையை பார்ல பாக்க போறான் அகத்தியன். 


அகத்தியன் to பிச்சை : யோவ் என்னய இவளோ காஸ்டலி பார், உன் கிட்டயே மொத்தமா 2 லட்சம் தான் இருக்குனு சொன்ன. இங்க அந்த மொத்த காசுக்கும் பில்லு பொற்றுவாங்க. 


பிச்சை : யோவ் நாளைல இருந்து நம்ம கோடிஸ்வரங்க. என்ஜோய் பண்ண வேண்டியது தான. 


அகத்தியன் : சரி, பணத்தை வச்சு என்ன பண்ண போற. 


பிச்சை : யோவ் நான் கோடிஸ்வரன் ஆக போறேன் முன்னாடியே கணிச்சு சொன்ன என்னோட சாமியார்க்கு பாதி பணத்த கொடுப்பேன். மீதி எனக்கு. 



அகத்தியன் : அப்படியா, என்ன சாமியார் யா. 


பிச்சை : கீர்த்தியானந்தா 


அகத்தியன் : யோவ் அவன் fraud யா, ஒரு சின்ன பொண்ண rape பண்ணி வாழ்க்கையே நாசம் பண்ணி இருக்கான். 


பிச்சை : யோவ் என் சாமியார் பத்தி தப்பா பேசாத. 


அகத்தியன் : சரி எப்படியோ போ 


பிச்சை : என்ன யா நீ இங்க இருக்க, உன் போன்ல இருந்து கால் வருது. நீயே பாரு என் போன்ல 


அகத்தியன் : சாரி யா, போன் சரியா லாக் பண்ணல, தெரியாம கால் போய்டுச்சு. ஆமா உன் போன்ல என் பேர என்னனு சேவ் பண்ணி இருக்க. 


பிச்சை போன் காட்டுனான், அதுல உதவாக்கரைனு சேவ் ஆகி இருந்துச்சு. 


அகத்தியன் : நீயுமா யா. 


பிச்சை : நான் குடிச்சிட்டு உண்மைய தான் பேசுவேன். உங்க அண்ணன் சொல்ற மாதிரி நீ உதவாக்கரை தான் யா. 


அகத்தியன் : சரி நான் கிளம்புறேன். 



-------------------அடுத்த நாள்.--------------------


ராமநாதன் 6 கோடியை அகத்தியன் கிட்ட கொடுத்துட்டான். 


அகத்தியன் சந்தோசமா பிச்சைக்கு கால் பண்ணி சொல்லலாம்னு போன் பன்றான். 


போன் எடுத்த உடனே என்னையா உதவாக்கரைனு பிச்சை கூப்பிட, உடனே போன்னை வச்சிட்டான் அகத்தியன். 



அதுக்கு அப்பறம் ஒரு நாள் முழுக்க, போன் switch ஆப் பண்ணிட்டான் அகத்தியன். சரி அகத்தியன் வீட்டுக்கு போய் பாக்கலாம்னு போய் பாத்தா வீட்ல பேய் இருக்குனு, குடும்பத்தோட வீடு shift பண்ணிட்டாங்க. வேற ஊருக்கு போய்ட்டாங்கனு தெரிஞ்சிக்கிறான் பிச்சை. 



-----------------------2 நாள் கழிச்சு -----------------


பிச்சை ரொம்ப மனசு கஷ்டத்துல இருக்கான். திடிர்னு போன் நம்பர் தெரியாம private number னு oru நம்பர்ல இருந்து கால் வருது. போன் attend பண்ணா, வெறும் ஹா ஹா ஹானு சிரிப்பு சத்தம். அது அகத்தியன் குரல் தான் கண்டுபிடிச்சிட்டான் பிச்சை. 


பிச்சை : dai அகத்தியன். 


அகத்தியன் : ஹா ஹா ஹா இல்லை இல்லை, உதவாக்கரை பேசுறன். 


பிச்சை : நீ பேசுறது பாத்தா எனக்கு பயமா இருக்கு டா. 


அகத்தியன் : பயமே வேணாம், உன் காச அடிச்சுட்டேன். அன்னக்கி காலைல நான் காசு கொடுக்க தான் உனக்கு போன் பண்ண ஆனா நீ உதவாக்கரைனு கூப்பிடுவ. இப்ப தெரியுதா இந்த உதவாக்கரை என்ன பண்ண முடியும்னு. கரெக்டா வீடு காலி பண்ண டைம்ல உன்ன காலி பண்ணிட்டேன். சத்தியமா வீடு காலி பண்ணது எல்லாம் தானா நடந்தது. உனக்கு ஆப்பு மட்டும் நான் வச்சது. 


-----------2 வருஷம் கழிச்சு -----------


அகத்தியன் அந்த பணத்தை அவன் நண்பன் மூலமா white money ஆக்கி பிஸ்னஸ் பண்ணான். இப்ப அந்த ஊர்லயே பெரிய பிஸ்னஸ் மேன். இப்போ அகத்தியன் அவன் அண்ணன் கூட இல்லாம, தனியா ஒரு வீடு வாங்கி அதுல இருக்கான் 


பிச்சை, அகத்தியன் வீட்டு பழைய செக்யூரிட்டிய கண்டுபிடிச்சி, அகத்தியன் அண்ணன் அட்ரஸ் வாங்கிட்டான். அகத்தியன் அண்ணன் சிவநாத் கிட்ட அவர கடத்துனதே நாங்க தான் பிச்சை போட்டு தந்துடறான். 


இப்போ பிச்சையும் சிவநாத்தும், அகத்தியனை சந்திக்க போறாங்க. 


சிவநாத் to அகத்தியன் : ஏன்டா இப்படி பண்ண. 


அகத்தியன் : இந்த உதவாக்கரையால என்ன பண்ண முடியும்னு காட்டத்தான், 20 வயசுல எனக்கு ஒரு ஏரியா பிஸ்னஸ் கொடுத்தாங்க, சின்ன வயசு சரியா பண்ண முடியல, பிஸ்னஸ் நஷ்டம் ஆச்சி, அதை நீ பயன்படுத்தி, நான் ஒண்ணுத்துக்கும் லாயக்கு இல்லாதவன்னு என்ன அப்பா அம்மாவ நம்பவச்சி, 20 வருஷமா எனக்கு எந்த பிஸ்னஸ் தராம இருந்தல. இப்போ உன்ன விட நான் தான் பெரிய பிஸ்னஸ் மேன். இந்த ஊர்ல no: 1 பிஸ்னஸ் மேன். நாங்க கடத்தினோம்னு போலீஸ் கிட்ட போயிடாத, நாங்க அடிச்சது உன்னோட பிளாக் money. 



சிவநாத், அகத்தியனை ஒன்னும் பண்ண முடியாம போய்ட்டான். 



--------------2 மாசம் கழித்து ---------------


நம்ம காஸ்டலி பிச்சைக்காரன், பிச்சை, இப்போ நிஜமாவே பிச்சைக்காரன் ஆகிட்டான். ஏன்னா அவன் சாமியார் ரெண்டு மாசம் பிச்சை எடுத்த நீ பெரிய கோடிஸ்வரன் ஆவனு சொல்லி இருக்காரு 



------------------------The End -------------------------------



Rate this content
Log in

More tamil story from Arul Prakash

Similar tamil story from Crime