STORYMIRROR

Saravanan P

Crime Thriller Others

4  

Saravanan P

Crime Thriller Others

கார் மேகம்

கார் மேகம்

2 mins
399

ஒரு கற்பனை கதை,

புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.

மத்திய பிரதேசம்,நேரம் இரவு 07:00 மணி 

இன்ஸ்பெக்டர் சக்ஸேனா தனது ஆட்களுடன் சோதனை பணியில் முதன்மையாக செயல்பட்டு கொண்டிருந்தார்.

எலக்சன் நேரம் என்பதால் வேலை சற்று அவர்களுக்கு கடுமையாக இருந்தது.

காரில் மேல் சாய்ந்த சக்ஸெனா தன்னுடைய டீயை மெல்ல குடித்தார்.

அவருக்கு ஒரு போன் கால் வருகிறது.

இதே நேரம்,அங்கு ஒரு வீட்டில் நல்ல ஒட்ட வெட்டப்பட்ட முடியுடன்,கை கிளவுஸ் போட்டு கொண்டு ஒருவனது கண்களை நொண்டி எடுத்தாள் அந்த பெண்.

அந்த கண்களை காலில் போட்டு‌ மிதித்து விட்டு வாங்கி வந்திருந்த சிகரட்டை பற்ற வைத்து அவன் மூக்கின் உள்ளே விட்டாள் அந்த பெண்.

பிளாஸ்திரி அவன்‌ வாயில் இருந்ததால் சத்தம் வெளியே கேட்கவில்லை.

"நீ செஞ்ச தப்புக்கு இது கொஞ்சம் கம்மி தான்" என சொல்லி விட்டு இன்னொரு சிகரட்டை பற்ற வைத்து புகைத்தாள் அவள்.

இரவு நேரம் பல சத்தங்கள் கேட்டாலும் அவள் உள்ளத்தில் ஒரு குரல் பேசியது "நீ ரொம்ப நல்லவளாச்சே,நீ ஏன் இப்படி மாறுன".

அவள் அதற்கு மறுமொழி கூறினாள்,"நானா இல்லை,இல்லை நான் இப்போ தினசரி தூக்கத்தை தொலைச்சிட்டு சுத்துற மிருகம்,அமைதி மனசுல இல்லை" என சொல்லி விட்டு மற்றொரு சிகரட்டை எடுக்க ஒரு அழைப்பு அவளுக்கு வந்தது.

"சீக்கிரம் கிளம்பு,ரொம்ப நேரம் அங்க இருந்தா,நீயும் மாட்டி,என்னையும் மாட்டி விட்ருவ என கூறினான்."

யாமினி உடனே அந்த ஆளின் கைகளை வெட்டி எறிந்து விட்டு சேகரித்து விட்டு உடலை அறை‌ குறையாக எரித்தாள்.

இவள் பெயர் யாமினி,இவள் ஒரு பாடகி,மிகவும் இனிமையான குரல்.

எல்லாம் மாறிய நாள்,

12 ஜனவரி,அதாவது 1 மாதத்திற்கு முன்,

யாமினிக்கு காதல் என்றால் சுத்தமாக பிடிக்காது.அவள் அண்ணன் கதிரோ ஒரு பெண்ணை காதலிக்க,மற்றுமொரு அண்ணன் கண்ணனோ கணினி துறையில் இருந்தான்.

கதிர்,ஒரு நல்ல கார் ரெஸர்.

கதிரின் காதலி ஒரு நல்ல பாடகி யாமினியை போலவே.

யாமினி தான் ஒரு படத்தில் பாட போவதை கூறினாள்.

கதிர் மிகவும் மகிழ்ந்தான்.

கதிரின் காதலி தான் அந்த பாடலை பாட வேண்டும் என‌ கேட்க கதிர் தன் முயற்சியால் யாமினியின் பாடல் வாய்ப்பை தட்டி விடுகிறான்.

கதிரின் காதலி மீது கண்ணனுக்கு ஒரு கண் உண்டு.

கதிர்,கண்ணன் இருவரும் இரட்டையர்கள்.

கதிரின் கார் ரெஸ் மீது கண்ணனுக்கு கண் இருந்தது.ஆனால் அவனால் பெரிதாக வர‌ முடியவில்லை.

கண்ணன் யாமினிக்கு நடந்த விஷயத்தை தெரிந்து கொண்டு சிறிது சிறிதாக அவள் மனதில் விஷத்தை ஏற்றுகிறான்.

அண்ணனை ஏதாவது செய்ய வேண்டும் என சொல்லி விட்டு அவளை குழப்பினான் கண்ணன்.

அவனை கொல்ல கூடாது ஆனால் வாழ்க்கை அது அவனுக்கு பிடிக்காமல் போக வேண்டும் என திட்டம் தீட்டி அவனை மத்திய பிரதேசம் வர வைத்து வஞ்சம் தீர்த்தனர்.

அப்பாவி கதிர் உடல் எரிந்து,பல வலிகளை அனுபவித்து இருந்தான்.

அவன் எரிவதை பார்க்கும் ஒருவர் தான் ஸக்செனாவிற்கு கால் செய்தனர்.

போலீஸ் படை அங்கு விரைந்து வந்து அவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்ப உயிர் பிழைத்தான் கதிர்.

யாமினி தங்கும் ஹோட்டலுக்கு சென்று குளித்து விட்டு அங்கு வைத்திருந்த காபியை அருந்தினாள்.

அப்பொழுது கதவு தட்ட பட எழுந்து திறந்தால் கதிரின் காதலி துப்பாக்கியுடன் வந்திருந்தாள்.

என்ன‌ யாமினி,எல்லாம் ஒழுங்கா பண்ணியா என கேட்டு அவள் சிரிக்க யாமினியும் சிரித்தாள்.

கதிரின் காதலியும்,யாமினியும் சேர்ந்து தான் இந்த திட்டத்தை செயல்படுத்தினர்.

கதிரின் காதலி அவனால் பல இடங்களில் ஏமாற்றப்பட்டாள்,அவளை கண்காணித்தான்,சந்தேக கணைகளை வீசினான்,வேறு பெண்களுடன் அவன் உறவாடி விட்டு இவளை அடிப்பான்.

விட்டு செல்கிறேன் என்றால்,உன்னை பற்றி வெளியே தெரியும் என‌ அந்த மிருகம் பிதற்றியது.

என்ன தான் கண்ணன் விஷம் ஏற்றினாலும் யாமினி இதை செய்ய காரணம் அவள் காதலிக்கும் நபர் யாமினியின் தம்பி.

இருவரையும் சேர்த்து வைக்க இந்த திட்டத்தை வகுத்தாள் கதிரின்‌ காதலி.

"இந்த துப்பாக்கி உனக்கு தான்,உன் அண்ணன் கதிர் ஆளுங்க உன்னை கண்டுபிடுச்சா யூஸ் பண்ணு" என சொல்லி விட்டு சென்றாள்.

ஆந்திர பிரதேசம்,

ஒரு பெரிய அயல்நாட்டு கார் கம்பெனி தன்னுடைய காரை விளம்பரப்படுத்த ஒரு காரை வைத்து உலக பயணம் என‌ ஒரு திட்டம் அறிவிக்க அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த நபர் கதிர்.

ஆனால் அங்கு காரில் வந்து நின்றது கண்ணன்.

மக்கள் கூட்டத்தில் நமக்கு பரிச்சியமான இரு கைகள் இருந்தன.

ஒன்று கதிரின் காதலி தற்போது கண்ணனின் காதலி ,இன்னொருவர் யார் என்றால் இன்ஸ்பெக்டர் சக்ஸெனா.



Rate this content
Log in

Similar tamil story from Crime