காமெடி நடிகரை கசக்கி பிழிந்த நடிகை.. தயாரிப்பாளர் செய்த தரமான வேலை!
காமெடி நடிகரை கசக்கி பிழிந்த நடிகை.. தயாரிப்பாளர் செய்த தரமான வேலை!
சென்னை: சினிமாவில் பட வாய்ப்பை பெற வேண்டும் என்பதற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்வது எல்லாம் சகஜமாகிவிட்டது. முன்பெல்லாம் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசுவதற்கே தயங்கிய நடிகைகள் இப்போது துணிச்சலாக என்னை அவர் அழைத்தார். இந்த படத்திற்காக நான் அட்ஜஸ்ட்மென்ட் செய்தேன் என வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள். நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசுவதெல்லாம் பெஷனாகிவிட்டது என பல பிரபலங்கள் சோசியல் மீடியாவில் விமர்சனம் செய்து பேசி வருகின்றனர்.
பிரபல சினிமா பத்திரிக்கையாளர் ஒருவர், சினிமா குறித்தும், நடிகர், நடிகைகள் குறித்து வெளிப்படையாக பல விஷயத்தை பேசி வருகிறார். அந்த வகையில் அவர் காமெடி நடிகர் ஒருவரை கசக்கி பிழிந்த நடிகை பற்றி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதாவது தனது பாடி லாங்குவேஜ் மூலம் புயலாக கிளம்பிய அந்த காமெடி நடிகருக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. அந்த நடிகர் திரையில் வந்தாலே போதும் ரசிகர்கள் தானாக விழுந்து விழுந்து சிரிப்பார்கள். ஆனால், அந்த நடிகர், நடிப்பில் எப்படி புயலாக இருந்தாரோ அதே போல மற்ற விஷயத்திலும் புயலாகவே இருந்தார்.
பண்ணை வீட்டில் : அந்த காமெடி நடிகர் தன்னுடன் யார் ஜோடி போட்டு நடிக்க வேண்டும் என்பதை அவர் தான் முடிவு செய்வார். தனக்கு யார் அட்ஜஸ்ட்மென்ட் செய்கிறார்களோ... அவர்களுக்குத் தான் அடுத்த படத்திலும் வாய்ப்பு என ஒரு கொள்கையை வைத்து இருக்கிறார். இதனால், வேறு வழியே இல்லாமல் பல நடிகைகள் அவருடன் பண்ணை வீட்டிற்கு சென்ற கதையும் நடந்துள்ளது. அப்படித்தான் ஒரு பிரபலமான படத்தில் ஒரு காமெடி நடிகை உடன் ஜோடி போட்டு நடித்துள்ளார் புயல் நடிகர். படம் தொடங்கி பல காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்ட பிறகு இந்த புயல் நடிகர், தன்னுடன் நடித்த நடிகையிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டு இருக்கிறார். அதற்கு அந்த நடிகையோ உன்னால் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு வரவில்லை, இது தானாக எனக்கு வந்த வாய்ப்பு, அதேபோல அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்வதற்கு நீ ஒன்றும் எனக்கு பணமும் தரவில்லை. இதனால், என்னால் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய முடியாது என மூஞ்சிக்கு நேராக சொல்லி அந்த காமெடி நடிகரை அவமானப்படுத்தினார்.
படப்பிடிப்பை நிறுத்திய நடிகர்: இதனால் கடுப்பான அந்த நடிகர் படப்பிடிப்பை அப்படியே நிறுத்திவிட்டு தயாரிப்பாளரிடம் சென்று அந்த நடிகை இந்த படத்தில் நடித்தால், நான் படத்தில் நடிக்க மாட்டேன். நடிகையை தூக்கி விட்டு நான் சொல்லும் வேறு ஒரு நடிகையை படத்தில் போட்டு, படத்தை எடுங்கள் என கேட்டிருக்கிறார். ஆனால், தயாரிப்பாளரோ பாதி படத்திற்கு மேல் எடுத்து முடித்த பிறகு மீண்டும் நடிகையை மாற்றினால், அது எனக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும் என சொல்லி இருக்கிறார், அப்போதும் அந்த நகைச்சுவை நடிகர் எவ்வளவு பாதிப்பு வந்தாலும் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால், அந்த நடிகையுடன் நான் சேர்ந்து நடிக்க மாட்டேன் என கறாராக சொல்லி இருக்கிறார்.
புயல் நடிகருக்கு ஆப்பு: பின் தயாரிப்பாளர் சம்பந்தப்பட்ட நகைச்சுவை நடிகையிடம் சென்று என்ன பிரச்சனை என்று விசாரித்து இருக்கிறார். அப்போது அந்த நடிகை, தன்னை அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்ததாகவும் இந்த வாய்ப்பு உங்களால் வராத போது நான் ஏன் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என அவரை அவமானப்படுத்திய விசயத்தை சொல்லி இருக்கிறார். இதனால் ஒரு முடிவுக்கு வந்த தயாரிப்பாளர் அந்த புயல் நகைச்சுவை நடிகரை படத்தில் இருந்து தூக்கிவிட்டு, வேறு ஒரு நடிகரை வைத்து அந்த படத்தை எடுத்தார். இப்படி மோசமான வேலையால் தான் அந்த புயல் நடிகருக்கு சினிமாவில் வாய்ப்பை பறிக்கப்பட்டு இப்போது ஒன்று இரண்டு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் என பிரபல பத்திரிக்கையாளர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார.

