saravanan Periannan

Crime Fantasy Thriller

5.0  

saravanan Periannan

Crime Fantasy Thriller

காலம் கடந்து

காலம் கடந்து

2 mins
890


காரணம் மற்றும் விளைவுகளுக்கு இடையேயான உறவுதான் காரணத்தன்மை (Causality is the relationship between causes and effects). 

    - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்


Young physicist 'squares the numbers' on time travel ரிசர்ச் பேப்பர் வைத்து மையமாக வைத்து எழுதப்பட்ட கதை.


சிவா மற்றும் கெவின் இருவரும் தீவிரமாக அவர்களுக்கு வந்த கெஸ்ஸை ஆராய்ந்து கொண்டிருந்தனர்.

சிவா மற்றும் கெவின்,இருவரும் ஒரு கம்பெனியில் வேலை செய்தாலும் அவர்களின் துப்பறியும் ஆர்வம் அவர்களை இந்த டிடேக்டிவ் வேலையை பார்ட்ட டைம்மாக செய்ய வைத்தது.

அவர்கள் விசாரித்து வருவது ஒரு கொலை வழக்கு.

அதில் துப்பு கண்டுபிடிக்கும் வேலையை போலீசார் சிவாவிற்கும்,கெவினிற்கும் கொடுத்துள்ளது.

கொலை வழக்கை பற்றிய கிரைம் ஸீன் ரிப்போர்ட்,

ரத்தம் சிந்த வாலிபன் இறந்து கிடந்தான்.

ஆயுதங்கள் எதும் இல்லை.

தடயங்கள் கிடைக்கவில்லை.


இது என்ன மாறி இதுனே தெரியலையே சிவா முனகினான்.

கெவின் சொன்னான் இன்னும் எதுவாது துப்பு விட்டுபோச்சா என்றான்.

தெரியலையே என்றான் சிவா.

இதே நேரத்தில் கெவினின் விஞ்ஞானி நண்பன் துரியன்,தன்னுடன் பணியாற்றிய பல நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளுடன் இந்தியா வருகிறான்.

இவர்கள் கண்டுபிடித்திருப்பது ஒரு டைம் மிஷின்.

துரியன் மனிதர்களை வைத்து அந்த டைம் மிஷனை பரிசோதிக்க உரிமை கோர அதற்கு இந்திய அரசாங்கத்தால் அனுமதி மறுக்கப்படுகிறது.

துரியன் கெவினை தனியாக பார்க்க வருகிறான்.

துரியன் தன்னுடைய நண்பனிடம் உதவி கேட்கிறான் டைம் மிஷினை பரிசோதிக்க.

சிவாவும், கெவினும் இதை ஏற்றுக்கொண்டு தங்கள் வழக்கை பற்றி கூறி நாங்கள் இந்த சரியாக விசாரிக்கவில்லை என போலீஸ் வேறு ஒருவரை துப்பறிய பணியமர்த்தியதை கூறுகின்றனர்.

துரியன் அவர்கள் யார் அந்த குற்றவாளி என்பதை பார்க்கலாமே தவிர எதையும் அங்கு சென்று மாற்ற கூடாது என கூறுகிறான்.

கெவினும்,சிவாவும் தீர்ப்பு வரும் நாள் டைம் டிராவல் செய்து கொலையாளியை பார்க்க அது ஒரு 13 வயது பெண் குழந்தை.

தன் அண்ணனை கொலை செய்த ஒரு நபரை தான் கொலை செய்ததாக கூறுகிறார்.

அப்பாவியான தன் அண்ணனை ஏமாற்றி கொலை செய்தாக கூற சிறுமி சிறுவர் சிறையில் அடைக்கபடுகிறார்.

சிவாவும்,கெவினும் நிகழ்காலம் திரும்புகின்றனர்.

சிவாவிற்கு மனம் வலித்தது.

ஒரு சிறுமி கொலைகாரி ஆவதா,இல்லை அது நடக்க கூடாது என நினைத்து துரியனுடைய டைம் மிஷினை எடுத்துகொண்டு கொலை நடந்த நேரம் என பிரேத பரிசோதனை கூறிய நேரத்திற்கு பத்து நிமிடம் முன் சென்று சிறுமி கொலை செய்வதை தடுத்து அவளை ஒரு ஆசிரமத்திற்கு அனுப்புகிறான்.

மீண்டும் நிகழ்காலம் திரும்புகிறான்.

ஆனால் கெவினால் சிவா கைது செய்யப்படுகிறான்.

டைம் டிரேவல் செய்து நம்மால் சம்பவங்களை பார்க்க முடியும்,ஆனால் சம்பவங்களை மாற்றினால் அதன் தொடர்ச்சியாக வரும் சம்பவங்கள் மாறும்.

ஆனால் அப்படி சம்பவங்கள் மாறினால் முரண்பாடு(paradox) உருவாகும்.


அதை தடுக்க காலம் ,நாம் சம்பவத்தை நடக்க விடாமல் மாற்றினால் அதை வேறு விதத்தில் நடக்க வைக்கும்.

இங்கு சிவா டைம் டிராவல் செய்து அந்த சிறுமியை கொலை செய்ய விடாமல் தடுத்தான்.

ஆனால் சம்பவம் எப்படி மாறியது என்றால்,

சிவா அந்த வீட்டின் பக்கம் சென்று கொண்டிருக்கும் போது ஒரு அலறல் சத்தம் கேட்டது.

அந்த சிறுமியை அவள் கொலை செய்ய வந்த நபர் தாக்கி கொண்டிருக்க சிவா அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே செல்கிறான்.

சிவா அந்த நபரை தடுக்க பார்க்கிறான் முடியவில்லை.

அந்த நபர் இருவரையும் கொலை செய்ய வர,சிவா அந்த நபரை தற்காப்பிற்காக கொல்கிறான்.

டைம் டிராவல் செய்து நீங்கள் மாற்றும் ஒரு சம்பவம் அல்லது நடக்கவிடாமல் செய்யும் ஒரு சம்பவம் எப்படியாவது வேறு விதத்தில் நடந்தே தீரும் ஏனெனில் அந்த தொடர்ச்சியாக வரும் சம்பவங்கள் முரண்பாடு(paradox) இன்றி நடப்பதற்காக.



Rate this content
Log in

Similar tamil story from Crime